எனக்கு ஒரு கார் தயாராக வேண்டும்..
அதில் பூ வேலைப்பாடுகள் செய்திருக்க வேண்டும்..
செயற்கைப் பூக்கள் நிறம் மங்கிப்போகலாம்...
இயற்கைப்பூக்களை மெல்லிய உணர்வுகளால்
ஒரு மயிலிறகு கோர்த்த அரைவட்டமாய்
வண்ணமாய் அலங்கரித்திருக்க வேண்டும்...
எதிரே வாத்தியக் காரர்கள் இலக்கியம் வாசிக்கவேண்டும்..
அந்தச் சப்தத்தில் சர்ப்பங்கள்
பூக்களிலிருந்து வெளிவரவேண்டும்...
யாரோ ஒருவர் எனக்கு ஒரு மலர் கிரீடம் சூட்டுகிறார்...
பதட்டத்துடன் கழற்றினால் அது ஒரு கவிதை...
அருகிலிருந்த பூவேலைப்பாட்டுக் கைவினைஞர்
அதை வாங்கி அணிந்துகொண்டார்...
மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு...
எனக்குச் சூட்டிய மாலைகளின் ரோஜாக்கள்
என் எதிர்க்கவிதைக்காரர்களின்
வாசல்களில் உதிர்ந்தன...
பூ நாகங்கள் என் காரில் என் இருத்தலைச் சுற்றிப் பின்னிக்கொண்டன
இப்போது நான் காரில் ஏறி அமர்ந்தாக வேண்டும்...
யார்யாரோ கைபேசிகளில் என்னைப் படம் பிடிக்க
பின்னால் இருந்த அரைவட்ட மயில்தோகை
வெட்கமுடன் தலைகவிழ்ந்திருந்தது..
என் மீதும் கார்மீதும் வெளிச்சம் பாய்ச்சியபடியிருந்தனர் என் ஆசான் கவிகள்..
அவர்கள் ஏந்தி வரும் விளக்குக் கம்பத்தைச் சுற்றி
மல்லிகைக் கொடி படர்வதும்
பூப்பதுமாய் இருக்க...
நான் அமரமுடியாமல் நெளிந்தேன்...
என்னைப் படம்பிடித்தவர்களின் கைபேசித் திரைகளில்
பாம்புகள் பதிவாகியிருந்தன...
கார் மெல்ல நகர்ந்தது...
உடன் வந்தவர்கள் ஏதேதோ உரைத்தபடி நடக்க...
உரை நடை மெல்ல கவிதைப்பூக்களை
மிதித்தபடியே மிதந்து கொண்டிருந்தது..
வாத்தியக்காரர்களின் இலக்கிய வாசிப்பில்
வெளிச்சம் காட்டிய விளக்குகளில்
தவில் சத்தம் ஒளிர்ந்தபடியே இருந்தது...
எல்லோரும்
காரையும் என்னையும் வேலைப்பாடுகளையும்
விட்டுவிட்டு கலைந்துவிட
தெருவெங்கும் வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது...
ராகவபிரியன்

No comments:
Post a Comment