Thursday, July 26, 2018

Neo modernist Tamil poetry

வரலாறுகளை அழகாக கவிதைகளில் செதுக்கிச் சென்றவர்கள்..நம் முன்னோர்கள்...அலெக்சாண்டரின் படையெடுப்பால் பயந்த நம் அரசர்கள் சேமித்தச் செல்வங்களை பெட்டிகளில் அடைத்து ஆறுகளின் நடுவில் அறையமைத்து அதனுள் பாதுகாத்தவர்கள்...அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை அருமையான கலிப்பா வாய் அமைத்துவிட்டு அந்த ஓலைச் சுவடியை அரும்பெரும் செல்வமாய் விட்டுச் சென்ற பூட்டன்....அந்தப் பாடல் இத்தனையாண்டுகள் உயிர்த்திருக்குமென கனவு கூடக் கண்டிருக்கமாட்டான்...புதைக்கப்பட்ட செல்வங்கள் புகழ் அனைத்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்க...கவிதையொன்று காலம் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது...இன்னும் வாழும்...
அது போன்ற நீண்ட மரபுடைய நம் கவிதை இப்போது பின் நவீன யுகம் நோக்கிய உலகளாவிய வீச்சை தமிழ் மண்ணில் பாய்ச்சத் தொடங்கிவிட்டது...அந்தப் பாய்ச்சலின் பாதிப்பால் ஒரு சின்ன பின் நவீன முயற்சி...
வாடுபு வருத்திடும்
பாலை நிலமென புகுந்தோம்..
பாலையின் நெடுந்தொலைவென
அரிதினும் அரிது நம் பிணைப்பு..
மணல் குன்றுகளில்
நம் நினைவுக் காற்று
மோதிச் செதுக்கிய சிற்பங்கள்
துணிக்கடை பொம்மைகளென
உணர்வின்றிச் சிரிக்கும்..
காற்றின் சிறகெங்கும்
மணல் கலந்த நம்மெளனம்
அலறும்..
ஒட்டகக் கூட்டத்தின்
குளம்படிகள்
மணற்கடலில் மிதக்கும்..
அதை நோக்கி நகர்த்தும்
சிற்பங்களை..
நம் நினைவின் ஈச்சமரத்தொலி..
மணற்பொம்மைகளை
ஒடிவையின்றி வண்ணம் தீட்ட..
பேரீட்சையின் கருப்பில்
இனிப்பைத் திணிப்போம்..
அப்பொழுதின் மணற்துகள்
நம் தலையெங்கும்
பாலையென அரிக்கும்..
எண்ணச் செல்வத்தின்
பெட்டிகளை சுமந்து நடக்கையில்
கருட பட்சியென
மேலே பறந்து வரும் நம் இதயம்..
விரல் நுனிகள்
கன்னம் தீண்ட..
மணற்காடெங்கும்
நம் யானைகள் கூடும்..
உன் ஆடூச் சென்னி
அப்படியொரு அழகெனச் சொல்லும்..
மேலணை மூடும் முன்
நம் கலப்பைகளை
நினைவின் எருதில் பிணைத்துக்கொண்டு
மணலெங்கும்
வயலாடப் புறப்படுவோம்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...