Thursday, October 30, 2025


இலக்கிய வலதுசாரிகள்...4

படைப்பிலக்கியம் என்பதும் ஏற்கனவே படைக்கப்பட்ட இலக்கியத்தின் பிழைகளை திருத்தி சரியாக படைப்பதும் இலக்கியச் சேவைதான். படைக்கப்பட்டு புகழ்பெற்ற ஒரு இலக்கியத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பிழைகளை எடுத்துச் சொல்லும் திறன் இலக்கிய படைப்பாற்றல் திறனுக்குச் சற்றும் இளைத்தது அல்ல. படைக்கப்பட்ட நிஜ இலக்கியம் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் எனச் சொல்லும் சிந்தனை ஆய்வு படைப்பாற்றல் இலக்கிய படைப்பெனவே கருதுதல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிடும்.
தமிழிலக்கியத்தில் வள்ளுவர் வலதுசாரி இலக்கியப் பிதாமகர் என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது. அவரின் ஒரு திருக்குறளை பிற்காலங்களில் தவறாக திரித்து கடவுள் மறுப்புச் சிந்தனையை புகுத்திய இலக்கிய மொள்ளமாறித்தனத்தம் ஆங்கிலேயரின் கைக்கூலி உதவியுடன் அரங்கேறியிருக்க வேண்டும். அப்படியான கீழ்தரமான இலக்கிய திரிபு வேலையொன்றை தைரியமாக அம்பலப்படுத்திய பெருமை வலதுசாரி இலக்கியத்தின் புகழ்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் நேதாஜி எனும் வாரஇதழ் நடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையே சாரும்.
ஒரு உதாரணம் தருகிறேன். மதிப்புமிகு வீரம் மிக்க தேவர் திருமகனாரின் வார்த்தைகளை அப்படியே உங்களுக்காக காப்பி பேஸ்ட் முறையில் தருகிறேன்.
புலவர் பெருமக்களே! அறிஞர்களே, சான்றோர்களே! சற்றுச் சிந்தியுங்கள்.! சிந்தியுங்கள்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம், பேனா, பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைகளைக் கருத்துக்களை, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இன்று இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணி பிடித்து எல்லாரும் எழுதிவிட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதைக் கருதுகிறேன். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறுதான் பாடியிருக்கக் கூடும் என்று அடியேன் மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப் பெரியவன். அவன்முன் நாம் தூசி மாத்திரம். ஓரணுவும் அவனன்றி அசையாத காரணத்தால் அவனைச் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம். ஆகவே அந்தக் குறள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
'தெய்வத்தால் ஆகும் எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' -
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து நேர்,நேர் என்று சொல்லி தேமா என்று வாய்பாடு கூறுவர். ஆகும் என்ற சொல்லையும் ஆ+கும் என்று பிரித்தால் நேர், நேர் என்றும் கூறலாம். மா முன் நிரை அசை வரும் வாய்பாடு அகும். ஆகவே தளையும் தட்டவில்லை. தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகுமென்பதே சரி. தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன். சான்றோர்களாகிய நீங்களும் இக்கருத்தை ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்."
தொன்மையான வலதுசாரி இலக்கியத்தை நீர் நிலம் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம் உள்ளவரை இப்பூமியை நிலவன் சுற்றிக்கொண்டிருக்கும் வரை எவராலும் அழித்துவிட இயலாது.
ராகவபிரியன்

Tuesday, October 28, 2025

அவையடக்கம் பற்றிய ஒரு பழைய கவிதையை வாசிக்க நேர்ந்தது. வாழ்க்கையின் தன்நிலையிலிருந்து மானுடம் தன்னை முற்றாக விலகியிருக்கச் செய்தல் கடினம். சபையின் கைத்தட்டல்கள் ஒன்று கூடி தான் எதையோ சாதித்துவிட்ட எண்ணங்களை சேறாகிய இதய மண்ணில் விதைத்துவிட நேரலாம்.

வாழ்வின் சக மானுட செயல்பாடுகளில் கடுகளவு விஞ்சி நிற்கும் ஒரு சிறிய சாதனையே தான் எனும் அகம்பாவத்தை மனித மனதிற்குள் விதைத்து விட இயலும். அது அறிவார்ந்த சபையில் மெல்ல இதயச் சேறிலிருந்து துளிர்த்து வார்த்தைகளிலோ இல்லை உடல் மொழியிலோ தன் ஆணவத் துளிர்களை அசைத்துக் காட்டிவிடும். அப்படியான அகங்கார வெளிப்பாட்டைத் தவிர்த்தல் கடினம். அது தொடர்ந்த பயிற்சியினாலும் யோகத்தாலும் தான் சாத்தியப்படும்.
இதைத்தான் ஒரு பண்டைய விருத்தப் பாடல் இப்படிச் சொல்கிறது...
உற்றதொகை நான்கு இலக்கத்து ஐம்பதின் ஆயிரம் என்று
உரைத்தவட மொழி வேற்பின் ஒரு கடுகின் அளவில்
பெற்றிடும் அங்கிசம் நூற்றில் ஒரு பங்கின் பொருளைப்
பேர் உலகில்.........................................என்றே
வெற்றி நெறி செந்தமிழை உணர்ந்து அருளும் பெரியோர்
வீற்றிருக்கும் சபைதனில் யான் விளம்பியபுன் மொழியில்
குற்றமுறை யார் கருணை புரிவர் அறியாத
குதலைமொழிக் குழவியின் சொல் குறித்து அறிவார் போல.
[கீரனூர் நடராஜன்]
தனக்குத் தெரிந்த ஒரு மொழி உயர்ந்த மலையென முன்னே நிற்கிறது. அதிலிருந்து எடுத்த ஒரு சிறு கல் அளவிலான குழந்தையின் மழலைச் சொல் போல பொருள் முரண்களுடன் தான் பேசுவதாகச் சொல்கிறார் இந்த பன்மொழி வித்தகர். அப்படியான மொழியுடன் பேசுவதில் ஏதாவது சிறு குறையிருந்தாலும் சபையோர் மன்னிக்கும் படி எழுதியிருக்கிறார்.
பாரதியும்
பாரி வாழ்ந்திருந்த கீர்த்தி பழம் தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியம் கருதி நின்னை கவிஞர் தாம் காண வேண்டின்
நேரில் அப்போது எய்தி வழிபட நினைகிலாயோ..
என்று கற்றறிந்த சான்றோர் முன்னே அரசன் எனினும் பணிவு காட்ட வேண்டுமென சொல்லிச் சென்றிருக்கிறார்.
இன்றைய நிலையில் பணிவு என்பதும் அவையடக்கம் என்பதும் தமிழ் மொழியில் தனது அர்த்தத்தை இழந்து நிற்பதைக் காண நேர்வது மானுட இயல்பு முரண் அன்றி வேறென்ன?
ராகவபிரியன்

Monday, October 27, 2025




ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5

ஓடித்து வீசப்பட்ட ஆங்கிலேய சட்டம் எழுதிய கையிலிருந்து போலி மதச்சார்பின்மை எனும் வெட்டி வீசிய கூரிய நகம் மீண்டும் முளைத்து குழந்தைகளின்மகிழ்வு முகத்தைக் கீறத்தொடங்கியிருக்கிறது.
கவிதை வார்த்தை சுடு செங்கற்களால் இலக்கிய அதிகாரம் அடுக்கி சமாதிகளைப் பூசும்
கொத்தன் ஒருவன் பிணத்தின் கழற்றவியலா வைர மோதிரமொன்றை உருவி அணிந்து கொண்டு
தன் மட்டைத் திராவல் கருவியை தூர வீசியெறிகிறான்.
மாளிகைகளைக் கட்ட அவனின் கைகளுக்கு நீளம் போதாததால் சமாதிகளைக் கட்டிவிட்டு விரல்களுக்கு மோதிரம் தேடி துழாவிக்கொண்டிருக்கிறான்.
அவன் வீசியெறிந்த திராவல் கருவி
குழந்தைகளின் தீபாவளி உடையணியும் சுதந்திரத்தை பறிக்க சதா எதையாவது தேய்த்துக்கொண்டிருக்கும்
கண்ணீர் குழைத்த சிமெண்டெடுத்து
சமாதி கட்டும் தொழிலறிந்த
விரல்களற்ற அதிகாரகக் கொத்தனின் காலடியில் போய் விழுகிறது.
விரல்களற்ற முகவருடல் அன்பை மூளைவரை எடுத்துச் செல்வதில்லை.
வெற்று உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம்
நிலைக்காமல் வழுக்கி விழத்தான் செய்யும்.
மழலைகளின் மகிழ்ச்சியை பிடுங்கித் தின்றபின் அமரும் அதிகாரக் கொத்தனின்
அரியணையின் சலவைக் கற்கள் எப்படிப் பதிப்பித்தாலும் பிடிப்பிழந்து
உருளத்தான் போகிறது.
குழந்தைகளின் உடையணியும் மகிழ்வின் குரல்வளையைக் கடிக்கும் சிங்கங்கள்
இப்போதும் போலி மதச்சார்பின்மை பேசும்
கல்வியின் காட்டில் தான் சுற்றித் திரிகின்றன.
அவைகள் உறுமினாலும் இலக்கியச் சப்தம் எதிரொலிக்குமென மழலையர் பள்ளியில்
போதிக்கப்படுவதுதான் மிருக வேடிக்கை.
இதோ தேர்தல் முயலொன்று அதன் வாடிக்கை நாளுக்காக வன்மமுடன் காத்திருக்கிறது.
தீபாவளியின் அடுத்த பள்ளி நாளில் மஞ்சள் தடவிய வண்ண உடையணிந்து வந்த குழந்தைகளின் மேல் தொடுக்கப்பட்ட பாய்ச்சல் சிங்கம்
நாளை தலைகுப்புற குதிக்கப் போவது
தன் பிம்பம் காட்டும்
தோல்விக் கிணறொன்றில் தான் என்பதறியாமல்
ஆணவப்பிடறியை சிலுப்பிக் காட்டுகிறது.
போகட்டும்.
காவிரி பெண்ணை பாலாறு மற்றும் பரணியின் படித்துறைகளில் ஒட்டகங்கள் குளிப்பாட்ட
தனித்துறைகளை கட்ட ஆணையிட்டு மகிழும்
இலக்கியக் கொத்தன்
உயிர் நீருக்காக நாளை அதன் திமிலைப் பிளந்து
தண்ணீர் குடிக்கட்டும்.
பள்ளிக்கூடக் குழந்தைகளின் தீபாவளி உடையணியும் உரிமையைப் பறிக்கும் அதிகாரத்தை
குழந்தைகளின் பிஞ்சு உடல்மேல் காட்டும் கொத்தன் தன் உடலை ஒரு நாள் தேசியப் பெருஞ்சுவருக்குள் திணித்துக்கொண்டு
சிமெண்ட் பூச்செடுத்து பூசிக்கொள்ளப்போவது நிஜம்.
அடுத்த தீபாவளியன்று இலக்கிய அதிகாரக் கொத்தனார்கள்
கோவிலில் தன் குழந்தைகளுடன் இந்துப் பண்டிகையை கொண்டாடிக் களிக்கப்போவது திண்ணம்.
குழந்தைகள்
தீபாவளிக்குப் பின்னான முதல் பள்ளி நாளில்
மஞ்சள் தடவிய புத்தாடையணிந்து வர
அனுமதிக்கும் ஆணையில்
கையெழுத்திடும் கொத்தனின் கரத்திலிருந்த
பிண மோதிரங்கள் பிடுங்கப்படப் போவதென்பதும் நிஜம்.
ராகவபிரியன்.

Sunday, October 26, 2025

 


To get the e.books and paper packs of Ragavapriyan Thejeswi kindly contact Pustaka.in





Saturday, October 25, 2025

 



வலதுசாரி இலக்கியம் 3

ஏறக்குறைய பல நூற்றாண்டுகளான சமூக அவலங்களுக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு பிரிவினர் பரிதாபத்திற்குரியவர்கள் தானே. ஆங்கிலேயர்களால் திரித்து எழுதப்பட்ட இந்திய தமிழக வரலாற்றில் இடதுசாரி எழுத்து எனும் அதிகாரமிக்க வலிமையான கையால் அப்பிரிவினரின் கழுத்தை இன்னமும் இறுக்கி அழுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதோ எப்போது வேண்டுமானாலும் அப்பிரிவு தன் துளிர்த்தலை நிறுத்தி புதைந்து போகலாம். ஆனால் அது மீண்டும் துளிர்த்தே தீரும் என்பது காலத்தின் வரம்.
இருந்தாலும் 1959 ம் ஆண்டு திருச்சியில் பிறந்த எஸ்.எம். நடேச சாஸ்திரி எனும் வலிமை மிக்க எழுத்தாளார் பதினெட்டு மொழிகள் அறிந்த பன்மொழி கலைமாமணி. பதினெட்டும் இந்திய மொழிகள் தான். மொழியறிவென்பது எத்தனை தடுப்பணைகள் கட்டினாலும் மாரிக்காலத்து வெள்ளத்தில் அணை தாண்டி சமயத்தில் அணை உடைத்துப் பாயும் ஆற்றல் கொண்டது. அவர் அறிந்திருந்த ஆங்கிலம் மட்டுமே அன்னிய மொழி. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். இந்தியும் அறிந்திருக்கிறார். ஆனால் இந்தி மொழியில் அவர் எழுதியிருக்கிறாரா எனும் தரவுகள் கிடைக்கவில்லை.
ஒரு முறை திருச்சி தேசிய உயர் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது ஆங்கில வழி கல்வி பயிலும் பிரிவு. தமிழ் பேரவையின் மாணாக்க பிரதி நிதிக்கான தேர்தலுக்கான வேட்பாளர் எவராவது முன் வருகிறாரா எனக் கேட்டார் தமிழாசிரியர். எல்லாவற்றிற்கும் முந்திக்கொண்டு தனது பெயரைத் தரும் உங்கள் ராகவபிரியன் அப்போது எஸ்.ராஜகோபாலன் தனது பெயரையும் கொடுத்தான்.
தமிழாசிரியர் நீ பிறந்த ஊர் எது எனக்கேட்டார். இவன் திருவரங்கம் என்றான். உன் அப்பா என்ன சாஸ்திரிகள் வேலையா பார்க்கிறார் எனக் கிண்டலாகக் கேட்டார் தமிழாசிரியர். என் வகுப்பாசிரியரும் ஒரு சாஸ்திரிகள்தான். அவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
உடனே வெகுண்ட வகுப்பாசிரியர் தமிழ் பேரவைக்கு ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணாக்கர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா என்றார். திராவிட ஆட்சியின் தொடக்க காலம் அது. ஆலகால விஷ பிராமண வெறுப்புப் பாம்புகளை கூடையிலிருந்து வெளியேற்றும் சப்தமற்ற பணியின் ஒரு உதாரணம் அது. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம் கட்ட பள்ளி மாணவர்களிடம் அப்போதைய மதிப்பு மிக்க 0.50 பைசா வசூலித்த நாட்கள் என்றால் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். சப்தமற்ற அந்த விஷப்பாம்பின் கால்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் அப்பாவிக் குழந்தைகள் படிக்கும் ஆரம்பப்பள்ளிகளிலும் கூட நுழைக்கப்பட்டது. இதை அறியாத வகுப்பாசிரியர் ஏன் அந்தக் கேள்வியை இந்தச் சிறுவனிடம் கேட்கிறீர்கள் என்றார் சற்று குரல் உயர்த்தியபடியே.
தமிழாசிரியரின் ஏளனச் சிரிப்பு உதட்டிலிருந்து மறையவே இல்லை இது மேலிடத்து உத்தரவு என்று சொல்லிவிட்டு வேறு யார் யார் பெயர் தருகிறீர்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். வகுப்பாசிரியர் இது என் வகுப்பு. மாணவர்களை திசை திருப்புகிறீர்கள். போகட்டும். நீங்கள் தமிழாசிரியர்தானே. தமிழ் இலக்கியம் பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கிய ஜாம்பவான் நடேச சாஸ்திரிகளைப் பற்றி எந்தக் கூடுகையிலும் நீங்கள் இதுவரை சொல்லவில்லையே. அவரும் உங்கள் ஊர் தானே என கேட்க அதிர்ந்து போனார் தமிழாசிரியர்.
ஆமாம் பண்டைய திருச்சி மாவட்டத்தில் மணக்கால் என்ற ஊரில் அவதரித்தவர் தான் இருபதாம் நூற்றாண்டின் இந்திய இலக்கியத்தின் புகழ்பெற்ற எஸ்.எம். நடேச சாஸ்திரிகள். அவரின் காலத்தை வென்று நிற்கும் நாவல் திக்கற்ற இரு குழந்தைகள் படித்திருக்கிறீர்களா எனக் கேட்டார்.
மெளனமாய் தமிழாசிரியர் தலை குனிந்தவாறே எனது பெயரையும் பதிவு செய்து கொண்டு அடுத்த வகுப்பிற்குச் சென்று விட்டார். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை. மாணாக்க பிரதிநிதியாய் பிராமணரல்லாத மாணவர் ஒருவர் நியமணம் செய்யப்பட்டதாக பிறிதொரு நாள் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இவன் வகுப்பாசிரியரை விடவில்லை. அந்த "திக்கற்ற இரு குழந்தைகள்" கதையைச் சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தான்.
இதோ இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்தக் கதையின் பண்டித நடை புகழ்பெற்ற ஒன்று. ஆனால் இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை என்பது தான் வலதுசாரி இலக்கியத்தின் மாபெரும் துயரம்.
அவர் ஆங்கிலம் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் நிறைய எழுதி தமிழிலக்கியத்திற்கும் இந்திய இலக்கியத்திற்கும் அளப்பரிய பங்காற்றி மறைந்திருக்கிறார். இல்லை இல்லை இன்னமும் நம்மிடையே தன் எழுத்துக்களால் காலம் கடந்து வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.
இவரும் பாரதியைப் போலவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் திருவிழாவில் குதிரை கட்டுக்கடங்காமல் பாய்ந்து கீழே தள்ளியதால் பின் கபாலத்தில் காயம் பட்டு இறந்திருக்கிறார்.
திருவல்லிக்கேணி அரங்கன் இரண்டு மாபெரும் தமிழ் வலதுசாரி எழுத்தாளர்களை தன் திருவடியில் சேர்த்துக்கொண்டிருக்கிறான் எனும் செய்தி இவனை இனம்புரியாத மனத் தவிப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது..
ராகவபிரியன்.




வாசிப்பியல் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. பள்ளிப் புத்தகங்களை வாசித்து மனதில் அடுக்கிக் கொள்வது வாழ்வின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிடுவது வாடிக்கை. இதில் வேடிக்கை என்னவெனில் தேர்வு தவிர வேறொன்றிற்கும் உதவாத சில புழுதி படிந்தஅடுக்குகளை களைவதென்பது அத்தனைச் சுலபமும் அல்ல. வாழ்வியலின் மூச்சற்றுத் தவித்து சுவாசித்தே ஆக வேண்டிய பொழுதுகளில் அவ்வடுக்குகளின் புழுதி சுவாசப்பைக்குள் சென்று சில நேரம் நம் வாழ்வை முடிவுக்கும் கொண்டு வந்துவிடுவது தான் மாபெரும் துயரம். நீட் என்பது எத்துனை மாணவர்களின் இலக்குகளை தகர்த்துவிட்டது. போகட்டும்.
ஒரு சில மார்க்ஸிய பொருளாதார குறியீடுகளான தனி நபர் வருமான உச்சவரம்பையும் தனி நபரின் வரவு செலவு விகித்தாச்சாரங்களையும் கல்லூரிப் பாடங்களென இளமையின் ஆண்டுகளை செலவழித்து அடுக்கடுக்காக அடுக்கியிருந்தாலும் நம் வாழ்வின் கடன் சுமை அழுத்துகையில் செல்லரித்த அப்பாடப்புத்தக வாசிப்புத் தரவுகள் எவ்விதத்திலும் உபயோகப்படுவதில்லை. இனி உபயோகப்படப் போவதுமில்லை.
ஆனால் இலக்கிய வாசிப்பென்பது நமக்கு வரலாறு அறிவியல் வாழ்வியல் பொருளாதாரவியல் சிந்தனைச் செறிவியல் உளவியல் சார்ந்த சமூக அணுகுமுறையியல் மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு கொண்ட சமூகவியல் போன்ற விழுமியங்களை நம் மனதில் ஒழுங்காக அடுக்கி வைக்கிறது. வாழ்வின் விழுந்து கிடக்கும் பொழுதுகள் நம் மேல் எச்சில் துப்பிவிட்டுப் போகும். நாம் எழுந்து உச்சம் தொடும் பொழுதுகள் நம் கழுத்தில் மாலையிடும். நம் சமூக சீர்குலைவின் எண்ணங்கள் ஊடகங்களால் திணிக்கப்படுகையில் ஆட்சி மாற்றச் சிந்தனையை அள்ளித் தரும். அதிகார அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகையில் சுய பாதுகாப்பிற்கான கவசங்களை போர்த்திவிடும். இவ்வாறான இதய எண்ணச் சமன்பாடுகளுக்கு தேவையானவற்றை நாம் இலக்கிய அடுக்குகளில் இருந்து எடுத்தாள்வது எளிதாகிவிடும். சட்டகங்களுக்கான வாழ்வெனினும் சுதந்திர வாழ்விற்கான அவாவெனினும் நம் திசைகளை நோக்கிய பயணத்திற்கான அட்டவணையை இலக்கியம் வைத்திருக்கும். வெற்று பாடப்புத்தக அடுக்ககத்தைவிட இலக்கிய அடுக்ககங்கள் அன்றாடம் தூசித்தட்டச் சொல்லி வாசிப்பனுவ இன்பமனதை தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் இலக்கியம் தூசிகளற்று தூய்மையாய் நம்மிடையே கைகோர்த்து இம்மையின் இறுதி மயானத்தையும் தாண்டி நம்மை அழைத்துச் செல்லும் சக்தியுடையவை.
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். இருபதாம் நூற்றாண்டு நமது முந்தைய தலைமுறைகள் வீட்டு நூலகங்களை உருவாக்கி அறிவாற்றலின் அடுக்குகளை குழந்தைகளின் எட்டும் உயரத்தில் நிரந்தரமாக அமைத்துச் சென்றிருக்கிறார்கள். கொஞ்சம் எதிரே பாருங்கள்..நாம் பாடப்புத்தக அடுக்குகளின் தூசித்தொட்டிலில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு இலக்கிய அடுக்ககத்தை மேலைத்தேய இலக்கியங்களிடம் அடகு வைத்துவிட்டோம்.
அப்படியான அரிய இந்திய இலக்கிய அடுக்குகளில் இருந்து அருமை நண்பர் வெற்றிவேல் தேவர் அவர்கள் 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சுதேசி தமிழ் இலக்கிய பொக்கிஷமான தேசபக்தன் கந்தன் நாவலை இவ்வெளிய வாசகனுக்காக அனுப்பித் தந்திருக்கிறார்கள்.
இதை உருவாக்கிய இலக்கிய மேதை மறைந்த கே.சி. வேங்கடரமணி அவர்கள் அவரின் காலத்தில் தென்னகத் தாகூர் என்றழைக்கப்பட்டிருக்கிறார். இலக்கியத்தில் காலத்தால் அழிக்கவியலா இடத்தைப் பெற்றிருக்கிறார்.
தேச பக்தன் கந்தன் நாவலின் முதல் ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு இப்பதிவை இடச்சொல்லி அரங்கன் ஆழ்மனதில் தன் சுதர்சனத்தைத் சுற்றிக்கொண்டிருக்கிறான். அதனால் தான் இப்போது இப்பதிவு.
இந்நாவலைப் பற்றிய முழுமையான திறனாய்வைத் தரும் தேர்ந்த இலக்கியத் தகுதி இவ்வெளியவனுக்கில்லை. இருப்பினும் முற்றாக வாசித்தபின் இந்த எளியவனின் தேசபக்தன் கந்தன் நாவலின் வண்ணங்களை தூர்ந்த தூரிகையின் உதவியுடன் கோணல்மாணலாகவேனும் இங்கே தீட்ட உத்தேசித்திருக்கிறான்.
அருமை நண்பர் வெற்றிவேல் தேவர் அவர்களுக்கும் அரங்கனுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
ராகவபிரியன்

Thursday, October 23, 2025

கவிஞனை காலம் எப்படியாவது காப்பாற்றிவிடும். எப்படி என்று கேட்பவர்களுக்காக இதைச் சொல்லியாக வேண்டும். கவிஞனின் மூச்சு கவிதை. மனிதனின் சுவாசம் காற்று. மனிதனுக்கு மரணம் நிச்சயம். காற்றிற்கு மரணமில்லை. கவிஞன் நிச்சயம் ஒரு நாள் அமரனாகக்கூடும். ஆனால் கவிதைக்கு மரணமில்லை. அப்படியான மரணமில்லா பெருவாழ்வு கொண்ட காலத்தால் அழிக்கவியலா கவிதைகளை தொகுத்து அதன் மேல் எனக்கு எந்தப் புகாருமில்லை என்ற தலைப்பிட்டு சமகால கவியாளுமை அருமை நண்பர் அய்யப்ப மாதவன் இந்த ஏழைக் கவிஞனையும் அவனின் ஒரு கவிதையையாவது மரணமின்றி வாழ்ந்தாக வேண்டுமெனும் நல் உள்ளத்தாலும் காலத்தின் தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அரிய இலக்கிய சேவையென கருதி ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

இரண்டு நாட்களுக்கு முன் இந்தத் தகவலை கைபேசியில் அழைத்து கவி அய்யப்ப மாதவன் அவர்கள் சொல்லியபோது அவரது மின்னும் அன்பு மின்னலில் தாக்குண்டு சிறுது நேரம் செயலற்றுப் போனேன். செயலற்றுப் போதல் என்பது மரணத்திற்கான முதற் பாடம் அல்லவா. ஒரு நாள் உங்கள் ராகவபிரியன் மரணித்துக் கிடக்கலாம். ஆனால் அவனின் இத்தொகுப்பில் இடம் பெற்ற ஒரு கவிதையை காலத்தால் அழியாமல் காப்பாற்றிய பெருமையை அன்பு நண்பர் திரு அய்யப்ப மாதவன் அவர்கள் தக்க வைத்துக் கொண்டார். இன்று அந்தப் புத்தகத்தையும் அவரின் நீலப்பெருங்கடல் கவிதைத் தொகுப்பையும் அஞ்சலில் அனுப்பியிருக்கிறார். காஞ்சியின் முதல் அஞ்சல் மானுடனின் சார் போஸ்ட் எனும் குரல் தேனை என் காதுகளில் பாய்ச்சியது. ஓடிச் சென்று  நெகிழ்வுடன் பெற்றுக்கொண்டு பிரிக்கிறேன் அந்தப் புத்தகங்களைப் பிரிக்கையில் சுவாசம் நுழைந்த கவிதைகளடங்கிய காகித வாசம் அடங்குவதற்குள் இந்தப் பதிவை இங்கே பதிவேற்றச் சொல்லி அரங்கன் ஆணையிட்டான்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற அத்தனை கவிஞர்களுக்கும் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் அய்யப்ப மாதவனுக்கு என் நன்றியும் வணக்கங்களும். அரங்கனுக்கும் வரதனுக்கும் காலத்தால் அழிக்கவியலா கவிதைகளுக்கும் என்றென்றும் நன்றியுடன்...  

அன்பன்...உங்கள்

ராகவபிரியன்







Wednesday, October 22, 2025

 



ஸ்ரீஸ்துதி 5

ஆன்மீகம் மனிதனை மனம் எனும் அந்தராத்மாவில் அரங்கனை துயில் கொள்ள வைக்கும் கலையை அனுபவம் மூலம் கற்றுத்தருகிறது. ஆனால் மனிதன் தனது கர்வத்தால் தானே அரங்கன் எனும் கடவுளின் சக்திகள் கொண்டவனாக மனதில் கர்வம் கொள்கிறான். அதனால் ஆன்மீகக் கலையை அலட்சியம் செய்கிறான். அவனின் செய்கைப்பாடுகள் உலக நிலையற்ற இன்பகளுடன் ஒட்டியிருக்கும் ஒட்டுப்பண்புகளால் சுயத்தை இழக்கச் செய்வது சகிக்கவியலாதது. மானுட அகமும் அவனின் புறமும் பள்ளத்தாக்குகளும் அதைச் சுற்றியிருக்கும் சிகரங்களும்  என கட்டி எழுப்பிய சிறைக்குள்ளாகவே சுற்றி வருவது அவனின் ஆன்மீக அறிதலுக்கான முடக்கப் பாயை விரித்து வைக்கிறது. முதலில் வேகமாக சுற்றுபவன் களைத்து சுழற்சியின் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு பின்பு முடக்குப் பாயில் முடங்கிவிடுகிறான்.

 

ஆத்ம உபனிஷத்தில் மனிதனின் சுயம் மூன்று நிலைகளாக துண்டாடப்பட்டிருப்பதின் யதார்த்தத்தை உணர வைக்கிறது. உள் சுயம் என்பதும் வெளி சுயம் என்பதும் இரண்டையும் மீறிய அவனிடத்தே உள்ள உயர்ந்த உயர்வுச் சுயம் என்பதையும் மானுடன் தன் வாழ்வியல் கூறுகளில் அடையாளம் கண்டு தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டுமெனில் தன் அந்தராத்ம இருளை சுருட்டி ஒரு மூலையில் கிடத்திவிடவேண்டும். உள்சுயம் தான் எனும் சிந்தையை போர்த்திக்கொண்டிருக்கையில் மனிதன் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள தவறிவிடுகிறான். வெளிசுயம் என்பது மனிதன் தன்னுடைய உடலின் மீதான கர்வத்தின் பசைமத்தின் பிடியிலிருந்து விடுபடவியலா தன்மையுடன் இருப்பதாகும். தன் உடலின்  நிறங்கள் வல்லமை உறுப்பின் ஆற்றல்கள் இயங்குவிசைகள் உற்பத்தித் திறன் இவைகளுடனான் உறவின் இயக்கத்திலிருந்து பிரித்தெடுக்கவியலா காய்ந்த பசைமத்தின் பிடியை உரத்துச் சொல்வது தான் வெளிசுயம்.

 

உள்சுயம் மற்றும் வெளிசுயம் இவைகளில் இருந்து முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டதுதான் உயர்சுயம். மனம் அதன் காற்றின் தடத்தில் சிறகு விரித்துப் பறக்கும் பொழுதுகளில் கீழிறங்கி ஒரு கிளையிலோ மாடத்திலோ சுவரிலோ நீர்  நிலையிலோ நிற்க வைப்பதென்பது கடின வித்தையின் தொய்வற்ற நீள் பயிற்சியின் விளைவாகவே சாத்தியப்படுவது. ஒவ்வொரு மானுட மனதிற்குள்ளும் ஒரு உயர்ந்து சுயம் இருக்கிறது. அந்த உயர்ந்த சுயம் வானம் பூமி காற்று நெருப்பு மற்றும் தண்ணிர் இவைகளின் ஆற்றல்  நுல்லியத்தின் அளவுகளான நிகிதத்தின் வழியாகக்கூட கணக்கிடுதல் கடினம் என உணரும் பொழுதில் வெளிபடும் இயங்கியல் அதிசயம்.

 

ஆத்மாஆத்மா: ப்ரகாசதே  அக்ர்யயா  ஸுக்ஷ்மயா  புத்த்யா ஸுக்ஷ்ம தர்சிபி த்ருச்யதே

 

என ஆத்ம உபனிஷதப் பாடல் சொல்கிறது. உயர்சுயம் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட மானுடம்  நுல்லியத்தின் நிகித அளவுகளையும் மீறிய ஆற்றல் கொண்ட இயற்கையின் படிமங்கள் தன்னுள்ளேயும் சமன்பாடு கொண்டு இயங்குவதை உணர்த்துவதாக மேலே உள்ள பாடல் சொல்கிறது.

 

இதைத்தான் நிகம்மாந்த மஹாதேசிகர் ஸ்ரீஸ்துதியில் இப்படிப் பேசுகிறார்.

நிஷ்ப்ரத்யூஹ ப்ரணய

கடிதம் தேவி நித்யாஙபாயம்

விஷ்ணுஸ் த்வம் சேத்யநவதி குணம்

த்வந்த்வ மந்யோந்ய லக்ஷ்யம்

 

சேஷச் சித்தம் விமல மநஸாம்

மெளளயச் ச ச்ருதீநாம்

ஸம்பத்யந்தே விஹரண விதெள

யஸ்ய சய்யா விசேஷா:

[ ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகன்]

 

பெருந்தேவித் தாயே நீயும் அரங்கனும் ஒரு நாளும் பிரிந்திருப்பதில்லை. அரங்க நாயகியும் வரதனும் தான். உங்களிடையே உள்சுயம் வெளிசுயம் என்பதன் பிரிவினைகள் இல்லை. நீங்கள் இருவரும் இணைந்திருக்கையில் உயர்சுயமே வெளிப்படுவதால் பஞ்ச பூதங்களில் எல்லாம் நீங்களே இருக்கிறீர்கள். அரங்கனாய் பள்ளி கொண்டும். வரதனாய் நின்றிருந்தும் கேசவனாய் எல்லாவித்திருந்தும் ஆகப்பெரிய பிராட்டிமார்களுடன் உலகெங்கும் வியாபித்திருக்கிறாய்.

 

தொடர்ந்த யோகப் பயிற்சியில் உள்ள யோகிகள் உங்கள் இருவரையும் தனித்தனியாய் ஞானக் கண்களில் கண்டதாக வரலாறில்லை.  ச்ரியா பதி எனும் போது பெருந்தேவியின் வடிவில் வரதனையும் விஷ்ணு பதி எனும் போது அரங்கனின் வடிவில் அரங்கதம்மாவான அரங்க நாயகியையுமே காண்கிறார்கள்.

 

இயற்கையின் மாபெரும் சக்தி நிறைந்த பஞ்சபூதங்களிலும் பள்ளிகொண்ட அரங்கன் அனந்தாழ்வான் மீதும் யோகிகளின் உள்ளங்களிலும் வேதங்களின் தலையாய உபனிடதங்களிலும் பள்ளிகொண்டிருக்கிறான்.

அரங்கனையும் வரதனையும் பெருந்தேவியையும் அரங்க நாயகியையும் உணரவேண்டுமெனில் உயர்சுயத்தின் வானம் பாடி தன் சிறகுகளை மடக்கி ஆழ்மனதில் பாடிக்கொண்டிருக்கவேண்டும். அந்த வானம்பாடியின் இசையில் உள்சுயமும் வெளிசுயமும் கட்டுக்குள் அடங்கி ஆதிசேடனாக முடக்கப் பாயை விரித்து அதன் மேல் அரங்கனை பள்ளிகொள்ள அனுமதிக்கும். அப்போதில் மானுடம் தன் உயர் ஆற்றலை மானுட நலனுக்காக செலவிடுதல் சாத்தியப்படும்.

திருவரங்கன் திருவடிகளே சரணம்.

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.

 

ராகவபிரியன்


Tuesday, October 21, 2025

 




முதலில் நீங்கள் யாரென்று கேட்பார்கள். அடுத்ததாக உங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்று வினவுவார்கள். பிறகு உங்கள் எழுத்தில் வாசிப்பனுவம் கூட கிட்டவில்லை என்பார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கான லைக் விழாமல் இலக்கிய அதிகாரத்தால் அரசியல் செய்வார்கள். நீங்கள் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் எழுத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய தெரிகிறதென்பார்கள். உங்கள் எழுத்து நகல் என்று நகைப்பார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால் உங்களை மீண்டும் யார் என்று கேட்பார்கள். திடீரென நீங்கள் ஏதாவதொரு விருது வாங்கிவிடுவீர்கள். அது உங்கள் எழுத்திற்கு தரப்படவில்லை சிபாரிசால் கிடைத்தது என்பார்கள். அதையும் மீறி நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் நீங்கள் தமிழுக்கு நோபல் கொண்டு வந்து விடுவீர்கள்.

ராகவபிரியன்

Sunday, October 19, 2025

 


இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி
அந்த இருள் வானில்
ஆறுமாதம் முன் நீண்ட
மரணத்தின் கரம்
இன்று வெடிகுண்டுகளை
திரியின் முனை நீக்காமலேயே
கொளுத்திக்கொண்டிருக்கிறது..
சட் டென ஒரு நொடி ஒளிர்ந்த வானிலிருந்து
மகிழ்ச்சி ஆதவனும்
மலர்ச்சி நிலவனும்
வானவெடிகளாய் வெடித்து
ஒளிநட்சத்திரங்களென
கோடிகளில் சிதறி
வானத்தின் ஓரமெங்கும்
ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறேன்...
என் வீட்டின் வாசல்களில்
வீதியின் பட்டாசுக் குப்பைகள்
ஒன்றோடொன்று உருத்திரண்டு
தகர்க்கவியலா தேக்குக் கதவுகளென
எழுந்து தழுவியபடி
என் வெளியேறலைப் பூட்டுகிறது..
புது ஆடைகளுடன்
கந்தர்வர்கள்
என் வானின் திரையரங்கு முன்
வரிசையில் நின்று
என் கேளிக்கைக்கான
அனுமதிச் சீட்டை கிழித்தெறிந்துவிட்டு
அப்படிச் சிரிக்கிறார்கள்
சரவெடியென...
என்ன செய்வேன்..?
ஒவ்வொரு ஆண்டும்
அரங்கனுக்கு புது ஆடை தராமல்
என் தீபாவளியின்
மத்தாப்புகள் கொளுத்தப்பட்டதில்லை..
இந்த தீபாவளியில்
என் மனவானின் பாற்கடல்
ஆரவார அலைகளின்றி
இன்னமும் எழுந்திருக்காமல்
தூங்கிக் கொண்டிருக்கிறது..
அரங்கனும் அரங்க நாயகியும்
ஏன் ஆதிசேடனும் கூட
புத்தாடை அணியாமல்
பட்டாசு கொளுத்தாமல்
வெற்றிலை சுருண்டு மிதக்கும்
ஓம எண்ணெயை ஒரு சொட்டுகூட
தலையில் தேய்க்காமல்
கசப்பு அரப்பை
கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்...
என் வானத்து கருடன்
தன் சிறகுகளை மூடிக்கொண்டிருக்கும்
இத் தீபாவளியில்
இருள் மட்டுமே
எங்களைச் சூழ்ந்திருக்கிறது...
அண்ட சராசரங்களும் அதிர
ஒலியெழுப்பும்
என் எழுத்தின் கேசவ யானை வெடி
விடாமல் கொட்டிக்கொண்டிருக்கும்
அரங்கனின் கண்ணீர் மழையில்
நவுத்துக் கிடக்கிறது...
இந்த சோக இருளைத் தின்று
என் மன வானில் வண்ண ஒளியுதிர்த்தபடி
எழும்பி நிற்கும்
வாழ்த்து பொதவாணம் ஒன்றை
நீங்கள் தான் கொளுத்த வேண்டும்..
செய்வீர்களா...? நண்பர்களே..
ராகவபிரியன்

Saturday, October 18, 2025

 


இலக்கிய வலதுசாரிகள்...3

அது எண்பதுகளின் தொடக்க காலம். வடபை இலக்கிய நண்பர்கள் வட்டம் விரிவடைந்து தனது விட்டத்தை நீட்டிக்கொண்டிருந்தது. சிற்றிதழ்கள் எனினும் ஜனரஞ்சக இதழ்கள் என்றாலும் தீவிர விமர்சன தாக்குதலுக்கு உள்ளாகி அந்த வட்டத்திற்குள் பிய்த்து குப்பைகளாய் வீசப்பட்டுக்கிடக்கும்.
அப்படியான இலக்கிய விமர்சன தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் பிராமண எழுத்தாளர்களே..தி.ஜா.ரா முதல் சுஜாதா வரை அன்று எங்கள் வட்டத்திற்குள் கிழித்தெறியப்படாத பிராமண எழுத்தாளர்களே இல்லை..
உதாரணத்திற்கு ஒரே ஒரு நாவல் இடைவெளி எழுதிய சம்பத் எனும் சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் பட்ட இலக்கிய பாடுகளைச் சொல்லி மாளாது.
இடைவெளி நாவல் தமிழிலக்கிய கிளாஸிக் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய நாவல். அது மரணம் பற்றிய எண்ணப்படிமங்களை ப்ராய்டிய மனோதத்துவ ஆய்வுகளையும் விட ஆகச் சிறப்புடன் தமிழில் தன்னகத்தே கொண்டிருந்த நாவல். குறைவான வடிவெனினும் அதன் வாமன விஸ்வரூபத்தை இன்னமும் வேறெந்த தமிழிலக்கிய புதினங்களாலும் எட்டிப்பிடிக்க இயலவில்லை என்பதுதான் காலம் அழிக்கவியாலா நிஜம்.
சம்பத் நாராயணன் அய்யங்கார் என்பதால் அவரது படைப்புகள் தமிழிலக்கிய உலகில் இன்னமும் அவருக்கான இடத்தை பெற இயலாமல் தவிக்கிறது.
தமிழ் இலக்கியத்திற்கோர் இடைவெளி நாவல் என அடித்துச் சொல்லலாம்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே என திருமூலர் சொல்லிச் சென்றுள்ளார்.
வலதுசாரிக்கும் போலி இடதுசாரி இலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி நீண்டுகொண்டே போகும் ஒரு இலக்கியப் புதிர் தான். தமிழில் வெற்று ப்ராமண எதிர்ப்பு ஒருக்காலும் இலக்கியமாகாது...
ஒரு முறை அசோகமித்திரன்... சம்பத் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே கடந்து விட்டார் என எழுதியதைப் படித்ததாக நினைவு...
ஆமாம் தமிழிலக்கியத்தை வலதுசாரி எழுத்தால் எட்டவியலா உயரத்திற்கு எடுத்துச் சென்ற சம்பத் அய்யங்கார் இன்னமும் ஓரவஞ்சனையுள்ள தமிழ் புனைவுலகத்தை வானிலிருந்து முறைத்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்...
ராகவபிரியன்

Friday, October 17, 2025

 




நேற்றைய எனது நகைச்சுவைக்கான பதிவை வாசகர்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கவில்லை...ஒரு சிலர் நீங்கள் ஜெயமோகனுக்கும் சீனியர் என்பதற்கான ஆதாரங்களை பதிவேற்றுங்கள்...இல்லையேல் ஞானக் கூத்தன் கவிதையான அம்மாவின் பொய்கள் ல் வரும் இனி பொய்க்கு எங்கே போவேன்....எனச் சொல்லி சமாளித்துவிடுங்கள் என மறைமுகமாக எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார்கள்...

அன்பு வாசக இலக்கியப் பங்காளிகளே இலக்கிய ரத்தத்தின் ரத்தமான வாசக உடன் பிறப்புக்களே...ஆன்மீக வாசக அன்பு நெஞ்சங்களே...
வாழ்வின் கொடிய இளமையின் திசையறியா கானகத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பொழுதுகளில்...வறுமையெனும் விஷக் கதண்டுகள் என்னைத் துரத்தித் துரத்திக் கொட்டிக்கொண்டிருந்தன...அப்போதெல்லாம் திருவாரூர் மற்றும் வடபை இலக்கிய நண்பர்கள் கவிஞர் நிறைமகிழ்னன்... நீரை அத்திப்பூ...இந்திரஜித்...அம்பி நாகராஜன்..சிந்து பாஸ்கர்...சரவணத் தமிழன்...அடியார்க்கு நல்லான்...ராஜகுரு...இன்னும் எனது ஆசிரியர்கள் கவிஞர் பேராசிரியர் கண்ணன்...போன்றவர்கள் இலக்கியப் புகை போட்டு கதண்டுகளை மயக்கமுறச் செய்து ஒரு சில எனது கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள்...அப்படியான ஒரு தமிழ் இலக்கிய சரித்திர நிகழ்வில் இடம்பிடித்த நாள் தான்...17.05.80...உங்கள் ராகவபிரியனின் முதல் கவிதை உலகதிர மாலை முரசுவில் வெளி வந்த நாள்...காலக் கரையாண்களிடமிருந்தும் வறுமைக் கதண்டுகள் துரத்த குடிசைகளை மாற்றி மாற்றி ஓடிக்கொண்டிருந்த புயற்காலங்களில் இருந்தும் தப்பிப் பிழைத்த அப்படைப்பின் பிரதியையும் இன்னொரு பிரதியையும் இங்கே உங்களுக்காகத் தருகிறேன்...
இலக்கிய அன்னை தன் பிள்ளைகளிடம் அதுவும் தலைப் பிள்ளைகளிடம் பொய்களைச் சொல்லுவதுமில்லை...பொய்களுக்காக எங்கே போவேன் எனப் புலம்புவதுமில்லை...
நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்



Thursday, October 16, 2025

 






My Tamil article translated into english by AI

Literary Right-Wingers... I
By Ragavapriyan
It was by the grace of Lord Arangan that I once had the rare privilege of meeting the distinguished writer Komal during his visit to Thiruvarur. I was granted barely ten minutes to speak with him — yet those minutes have lingered in my memory ever since.
At that time, this humble devotee of Arangan had written a few poems in English — awkwardly and imperfectly, as beginners often do. Amid the crowd surrounding him, I somehow managed to show him a few of my verses. To my surprise, he took one of them, glanced through it attentively, and — to my greater astonishment — managed to decipher my handwriting with ease!
After a brief pause, he said with characteristic warmth and candour:
“Brother, your words have depth. But to arrange them beautifully, you must learn a little more of English grammar and literature. Read abundantly.”
He then went on to say,
K. C. Venkataramani — like your father, Tejaswi — was an Iyer too. He wrote a fine novel titled Desabhaktan Kandan (Kandan the Patriot). Read that novel, and write an article about it for Subamangala magazine.”
Komal paused again, his eyes glinting with curiosity.
“Did you know,” he continued, “that Venkataramani was the second Indian to write a novel in Indian English? Can you guess who the first was?”
Turning towards the small gathering around us, he smiled in expectation. My dear friend Adiyaarkku Nallaan replied quietly, “It was Bankim Chandra Chatterjee.”
The moment Komal heard that name, he embraced him affectionately. The entire group — myself included, along with Rajaguru and a few others — was moved with delight and admiration. (Whether Thanjai Prakash was present that day, I can no longer recall.)
Then Komal shared another touching anecdote.
He told us that when Mahatma Gandhi once visited Chennai, Thiru V. Kalyanasundaram (Thiru V. K.) had found himself unable to procure a car to escort the Mahatma. At that crucial moment, a judge named Sadasiva Iyer had graciously offered his own car for Gandhi’s use.
As Komal spoke, my mind remained fixed on the name Desabhaktan Kandan — it echoed within me with a quiet insistence.
The next day, I visited every library in Thiruvarur — from the college library to the one opposite Ammaiappan Talkies — in search of that elusive book. None of the librarians had heard of it. I could not find a single copy. To be truthful, it was not mere failure of effort; rather, it was my own indolence of reading that prevented me from pursuing it further.
If that novel, by any good fortune, exists today in digital form, I would be deeply grateful to my respected friends who might send it to me at the following address:
📩 ragavapriyansrajagopalan@gmail.com
With affection, gratitude, and reverence,
Ragavapriyan

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...