ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம்..6/6

எங்கள் வானத்திலிருந்து
அண்ணன்
எட்டித் தள்ளியபோது
எரி நட்சத்திரமென உதிர்ந்தேன்..
அப்போது உமிழ்ந்த
வெளிச்சத்தைத்தான்
என் அண்ணன் தன்
கைமின் விளக்கில்
சேமித்திருக்கிறான்..
ஓடத் துவங்கிய
எங்கள் தொடர் வண்டியிலிருந்து
என்னை மட்டும்
வெளித்தள்ளினான் அண்ணன்..
சட் டென நின்ற வண்டிக்கு
என் கையிலிருந்து பிடுங்கிய
பச்சைக் கொடியைத்தான்
வழிகாட்டி விளக்குகளைத்
தொலைத்த இருப்புப் பாதையில்
இன்னமும் கைவலிக்க
வீசிக்கொண்டிருக்கிறான்..
எங்கள் கப்பலில் இருந்து
நடுக்கடலில்
ஒரு புயல் நாளில்
என்னை மட்டும்
வெளித்தள்ளிவிட்டான்
அண்னன்..
ஓயாத சுனாமி அலைகளில்
கப்பல் மூழ்கத் தொடங்கிய
மெய் நிகர் வேளையில்
எனது அவசரகால
காபந்து படகின்
இரும்புக் கயிறுகளை
இன்னமும்
அவிழ்த்துக் கொண்டிருக்கிறான்..
என் வெளிச்சத்தையும்
என் தொடர்வண்டி
இருக்கையையும்
என் காபந்து படகையும்
இன்னபிற என்னுடனான
அழிக்கவியாலா நினைவுகளையும்
சேமித்திருக்கிறது
சிதைந்த எங்கள் புராதன வீடு..
அதைத்தான்
அடையாளங்களைத் தொலைத்த
அருங்காட்சியகமாக மாற்றி
பார்வையாளர்களிடம்
பணம் வசூலிக்கும்
குத்தகைதாரராக மாறி
சதா மீசையை
முறுக்கிக் கொண்டிருக்கிறான்
அண்ணன்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog