Friday, June 12, 2026







 ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக இந்துமதத்திலிருக்கும் தொழில் சார்ந்த கூட்டு வாழ்வு முறைமையை சாதியெனும் ஒற்றைச் சொல்லை அடையாளம் கண்டு சாதீய வெறுப்பெனும் ஆலகால விஷத்தை ஆட்சியதிகாரத்தை வைத்து மெல்ல மெல்ல இந்திய சமுதயாத்தின் நாடி நரம்புகளில் செலுத்திச் சென்றுவிட்டான்.

இந்தியாவை கொள்ளையடிக்க வந்தவர்கள் பொருளாதார அறிவுசார் ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி மானுடத்தை மந்தைகளாக்கினால்தான் ஆட்சிசெய்யவியலும் என்பதை புரிந்து இந்து நாட்டின் மக்களை மதம் மாற்றி மந்தைகளாக சிறு சிறு பகுதிகளில் அடைத்துவிட்டார்கள்..
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் இலக்கியங்களை மொழியறியாமலே தவறான குரூர புத்தியால் விளைந்த குயுக்தியால் அவர்களின் வாழ்வைச் சிதைக்க வாழ்வாதாரத்தை சூறையாட அவர்களின் குடும்பப் பெண்களை கவர தவறாக மொழிமாற்றம் மொழியாக்கம் மொழிபெயர்ப்பு செய்து ஒரு நூற்றாண்டுகளாய் வெறுப்பை வளர்த்து அந்தப்பிரிவின் வாழ்விடங்களை அவர்களின் அடையாளங்களை அவர்களின் உயிரைக்கூட பறித்த செயலை இன்னமும் மொழி கால தேச அரசியல் வழிகளில் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்..
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பெண்களை காதலெனும் குரூர ஆயுதத்தால் வீழ்த்தி அந்தப்பெண்ணை மட்டுமல்ல அப்பெண்ணின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் மத நம்பிக்கைகளையும் சிதைப்பதை நியாயப்படுத்தும் எந்த எழுத்தையும் உலக இலக்கிய தரத்திற்கு எடுத்துச் செல்லுதல் கடினம்..
எவ்வளவு இறுதி எச்சரிக்கை செய்தாலும் நேரடி மறைமுக மிரட்டல்கள் விடுத்தாலும் அரங்கன் என் அருகில் வரமாட்டானென கேலி செய்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மூதாதையர்கள் தான் சாதீய ஏற்றத்தாழ்விற்கு காரணமெனச் சொல்லி அவர்களின் மேலும் அவர்களின் சந்ததிகளின் மேலும் தங்களின் பாட்டன் பூட்டன் ஏதோ வரலாற்றுத் தவறு செய்துவிட்டானென குற்ற உணர்வில் குறுகிப் போகச் செய்து இன்றைய தலைமுறைகளின் மேல் வெறுப்பை உமிழ்வதை அவர்களின் நியாயமான வாழ்வுரிமையை மறுப்பதை அவர்களின் வாழ்விடங்களைச் சிதைப்பதை அவர்களின் கலாச்சார விழுமியங்களை கேலிக்குள்ளாக்குவதை அவர்களை அரசியல் அனாதைகளாக மாற்ற திட்டமிடும் கயமையை வெளிச்சமிட்டுக் காட்டும் எழுத்தை இவ்வெளியவன் தொடர்ந்து கொண்டேதான் இருப்பான்..
கடந்த பாரதிராஜாவின் மறைவிற்கான இவ்வெளியவனின் அஞ்சலிக் கட்டுரை பெற்ற ஏகோபித்த வரவேற்பை பொறுத்துக்கொள்ளவியலாமல் மிரட்டல் விடுக்கும் பொறாமைக் காரர்களை அரங்கன் மன்னிக்கப்போவதில்லை.. உலகளாவிய வாசக அன்பர்கள் அச்சிறுபுத்திக்காரர்களை மன்னிக்கட்டும்..
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா[த்தி]..மோதி மிதித்துவிடு பாப்பா[ நீ தீ]..அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா[ தீ ]...[ நம் பாட்டன் பாரதியின் வரிகள்..]
வனக்கங்களுடன்
அன்பன் ராகவபிரியன் தேஜஸ்வி.

No comments:

Post a Comment

  இறையை உணர்தல் அல்லது அரங்கனை அறிதல் என்பது அமைதியின் தேடல் அல்ல. அமைதியின் தேடல் கூட இறைமையின் வடிவமெனச் சொல்லாம். ஆனால் இறையை உணர்தல் என்...