அண்ணாமலையின் தன்னிச்சையான கட்சி உடையைத் துறந்து வேறாடை அணிவது அவரின் அரசியல் உரிமை தான். எனினும் பிஜெபியின் வளர்ச்சியும் அது அடைந்த அதிகாரத்திற்கான மக்கள் ஆதரவின் பேருண்மையும் அவருக்குப் புரியவில்லை என்பதே நிதர்சணம். அதிகாரம் பெறுவது என்பது அரசியல் அறிவின் அடர்வைப் பொருத்தது. பிஜேபி பெற்ற இன்றைய அரசியல் அறிவும் அதிகாரமும் ஒரு பேருண்மையை சாமாண்ய வாக்காளர்களுக்கு கடந்த 1977ல் இருந்து கடத்தி வந்திருக்கிறது.
காங்கிரன் அதுவரையிலான முப்பதாண்டு கொடுங்கோலாட்சியை அகற்ற எதிர்கட்சிகள் அதாவது வெவ்வேறு கொள்கைகளூடைய எதிர் கட்சிகள் ஜனதா கட்சி எனும் பெயரில் ஒன்றிணைகின்றன. அப்போது
ஏறக்குறைய நானூறு எம்பிக்களை வென்ற ஜனதாக்கட்சியில் ஜனசங்கம் நூற்றிற்கும் மேற்பட்ட எம்பிகளை கொண்டிருந்தது நிஜம். ஜனசங்கம் என்பது இந்துக்களின் நலனை முன்னிருத்தி அரசியலதிகாரம் பெற ஜனனாயக முறையில் செயல்படும் அமைப்பு. பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதா கட்சியின் கொள்கை முரண் பாட்டால் ஜனசங்கம் பிஜேபியாய் பெயர்மாற்றம் பெற்றது. பின் நவீன அரசியல் களத்தில் அதிகாரம் நோக்கிய ஒரு அமைப்பின் புராதன கட்டமைப்பை கட்டுடைத்த பெருமை பிஜேபி க்கு இருக்கிறது. அதாவது தனிமனித காரிஸ்மா அக்கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தேவையற்றது.. இன்றும் கூட கட்சித் தலைமை குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் வெவ்வேறு நபர்களிடம் கொடுக்கப்படுவது கட்சியின் பரவலாக்கப்பட்ட அதிகார பன்முகத் தன்மையை பறைசாற்றுகிறது.
ராஜ் நாத் சிங்கால் வென்ற பிஜேபியின் அதிகார பதவி உபியில் கல்யாண்சிங்கிற்கு கொடுக்கப்பட்டது. ராஜ் நாத் சிங் வெற்றிக்கு தான் காரணமென இன்றுவரை நினைக்கவில்லை. அதனால் தான் மைய அரசியல் அதிகாரத்தில் இரண்டாமிடத்தில் இருக்கிறார். அத்வானி ஒருபோதும் பிரதமர் பதவி கிடைக்காததால் கட்சியை விட்டு வெளியேறவில்லை.
உமாபாரதி வெற்றியின் பின்னால் சிவராஜ்சிங் செளகான் இருந்தது அரசியல அமைப்பின் பிந்தைய அறிவார்ந்த காலம் பதிவு செய்த நிஜம். சிவராஜ்சிங் செளகான் தனது பதவியை இன்னொருவரிடம் கொடுக்கத் தயங்கியதே இல்லை. இதுதான் பிஜேபின் அரசியல் அதிகார நகர்வின் சூட்சும சித்தாந்தாம்.
கேசுபாட் பட்டேலின் வெற்றிக்கும் சங்கர் சிங் வகேலாவின் வெற்றிக்கும் பின்னால் இருந்தது மோடியும் அமித்ஷாவும். ஆனால் அவர்கள் பதவிக்கு உயர்த்தப்படாததால் ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேறவில்லை.
இவையணைத்தும் உரத்துச் சொல்லும் பேருண்மை தனிமனித காரிஸ்மா ஒரு போதும் நிரந்தர வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. மாறாக கொண்ட கொள்கையில் இணைந்த இயக்கத்தில் வரித்துக்கொண்ட இலட்சியத்தில் உண்மையாக இருந்து தன்னலமற்ற தொண்டாற்றினால் ஊர்பேர் அறியாத நரேந்திர மோடியும் அமித்ஷாவும் இன்றைய அரசியல் அதிகார மையத்தில் அசைக்கவியலாத இடத்தைப் பிடித்தது போல் சாதனைகள் செய்ய இயலும்..
வேர்த்து கசங்கிய சட்டையை கொஞ்சம் துவைத்து காயவைத்து அணியலாம். தவறில்லை. உடை வேர்த்து கசங்கி கிடப்பதால் கையில் பணமிருக்கும் கர்வத்தால்
புத்தாடை வாங்க முடிவு செய்தால் துணிக்கடையை வேண்டுமானால் வாங்கலாம் அரசியல் அதிகார மையத்தின் சிம்மாசனத்தில் அமர்வதென்பது யானையின் சிம்ம சொப்பனமாகவே இருக்கும்..
அண்ணாமலை பிஜேபியில் இருந்து விலகியதால் பின் வரும் அரசியல் வரலாற்றில் பிஜேபி தமிழகத்தை ஆளும் நாட்களில் அவரின் பங்களிப்பிற்கான ஊதியம் கோரப்படாமலே கிடக்கப்போவது நிஜம்..
No comments:
Post a Comment