நண்பர்களுக்கும் உலகளாவிய வாசக சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்.. என்ன ஆயிற்று மேட்டா என் பதிவுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்கவில்லையா.. உங்களின் மேலான ஆலோசனைகள் இன்றி எப்படி நோபல் நோக்கி இலக்கியத்தில் இயங்குவது சொல்லுங்கள்.. தமிழுக்கு நோபல் வேண்டுமா வேண்டாமா... இந்த ஆண்டும் இலக்கிய நோபலுக்கு தமிழ் மொழியாக்கங்கள் எதுவும் குறும் பட்டியலில் இல்லை.. இப்போது அச்சு மூலம் ஆக்கங்களை வெளியிடுவது சுலபம்..ஆனால் உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம்.. மின்னணு ஆக்கங்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கின்றன.. உங்கள் பார்வையில் படுகிறதெனும் பதில் ஒற்றை இலக்கமெனினும் அது தரும் ஊக்கத்தின் அடர்வு இணையற்றது.. தொடர்ந்து இயங்கலாமா எனும் கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. வேண்டாம் நிறுத்திக்கொள் என்றால் அதை உரத்து இங்கே சொல்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் மீண்டும் காலை வணக்கங்கள்.. தயவு செய்து உங்களின் கள்ள மெளனத்தைக் கைவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

அன்பன்..உங்கள்..ராகவபிரியன்

Comments

Popular posts from this blog