கீதை சொல்லும் கதை சொல்லியும்...3

-------------------------------------------------
சினிமாவும் அரசியலும் தமிழகத்தின் மாய யதார்த்த போலிமைகளும் பூக்கோவின் அதிகாரக் கோட்பாடுகளின் படிமங்களும் பிரமிக்க வைக்கின்றன.. தமிழகத்தின் பொதுப்புத்தியை வடிவமைப்பதில் சினிமாவும் அரசியலும் இரண்டு பிரிக்க முடியாத, ஒன்றையொன்று விழுங்கும் பெருங்கனவுகளாகத் திகழ்வதை மறுதலித்தல் கடினம்.. பின் நவீன பார்வையின் கோணத்தில் பார்த்தால்...இவை வெறும் ஊடகங்களோ அல்லது அதிகார அமைப்புகளோ அல்ல..மாறாக கூலிக்காக மாரடிக்கும் மரணவாசல் கூச்சல் போலத்தான் தோற்றமளிக்கின்றன... அதையும் தாண்டி இவை மக்களை ஒரு தொடர் ‘போலிமை மற்றும் அதி யதார்த்த நிலைக்குள் சிறைவைக்கும் மாய உலகங்களென மக்களை நம்பவைப்பதுதான் காலத்தின் கொடும் துயரம்..
பிரெஞ்சு தத்துவஞானி மிஷெல் பூக்கோ அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தில் அரசின் கைகளில் மட்டும் குவிந்திருக்கும் விளக்கு தேய்க்க வெளிவந்து கேட்டதைக் கொடுக்கும் அல்லாவுதீன் பூதம் போன்றதல்ல.. அது சமுதாயம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு சாமான்ய மனிதனின் நிஜம்மான யதார்த்தமான எல்லோருக்குமான வாழ்விட வாழ்விய வளமையைத் தரும் நிஜம்மான ஒளிவிளக்காய் இருத்தல் வேண்டும் என்று மேசையைத் தட்டி ஆராவாரிக்கிறார்..அவரது அதிகாரம் அறிவு மற்றும் பயோ பாலிடிக்ஸ் கோட்பாடுகளின்படி அதிகாரம் என்பது மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பூதம் காட்டி பணிய வைப்பது அல்ல... மாறாக உண்மையான அரசியல் பிம்பத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு நேர்மையான பலன் களைக் கொண்டு தருவதன் மூலம் மக்கள் தாங்களாகவே தங்களின் ஓட்டின் மூலம் பணிவை அதிகார புளிபோட்டு பளிச்சென தேய்த்த ஒளிவிளக்கென அவர்களுக்குத் தரவேண்டும்..
பிம்ப உற்பத்தி தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியல் கூட்டமைப்பு ஒரு புதிய உண்மையை யாரும் கோராமலேயே கொடுக்கிறது.. திரையில் அநீதிக்கு எதியாய் பாயும் கதாநாயகன் நிஜத்திலும் மக்களுடன் மக்களாக வாழ்வியல் சிலுவையில் அறையப்பட்டு பின் மீண்டெழும் வல்லமையுள்ள மீட்பர் என்று காட்டும் பிம்ப உற்பத்தி எத்தனைக் கயமையானதென மக்கள் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது..
இன்றைய இளைஞர்களின் மத்தியிலும் சின்னஞ்சிறார்களின் பொது புத்தியிலும் திரையரங்கக் கொண்டாட்டங்களும் கட் அவுட்டிற்கு பாலூற்றுவதும் ரீல்ஸ் மூலம் குழந்தைகளின் அறிவுத் திறனை மழுங்கடிப்பதிலும் கட்டமைக்கப்பட அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை சில லட்சம் கோடிகள் என அறிய வருகையில் அதிர்வு கலந்த ஏமாற்றம் சாமான்யனின் அதிகாரத்தை பிடுங்கி எறிந்து விடுகிறது..
சுயகண்காணிப்பின் அவசியத்தை பூக்கோவின் பனோப்டிகான் தத்துவம் விரிவாகப் பேசுகிறது.. ஆனால் அறிவு ஜீவிகள் அரசியல் கட்சிகளுக்குள் செம்மையைக் கொணர்ந்து விடுவார்கள் என்பதற்காக அப்படியானவர்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள்.. உதாரணத்திற்கு ஐஆர்எஸ் அளவிற்கு உயர்ந்த அறிவு ஜீவி ஒருவர் அரசியல் கட்சியின் பிம்ப மயக்கத்தில் கட்டுண்டு சுய கண்காணிப்பின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் சொல் சர்க்கஸ் வான ஊஞ்சலில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவி போலி வியப்பை உருவாக்கும் அரசியல் செய்து கொண்டிருப்பது தான் இன்றைய சாபம்.. நிஜம்மான அறிவாளிகளை அரசியல் கட்சிகள் ஒருபோதும் இணைத்துக் கொள்வதில்லை என்பது தான் தமிழக யதார்த்த வாழ்வியல் அவலம்..
மக்கள் தங்களை அறியாமலேயே இந்த பிம்பங்களின் ரசிகர்களாக தொண்டர்களாக மாறி தங்களின் சிந்தனையைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். வறுமை சாதி வேலையின்மை போன்ற தீவிரமான சமூக யதார்த்தங்கள் வண்ணமயமான குத்துப் பாடல்களாகவும் கானா பாட்டுக்களாகவும் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்களாகவும் சிதைக்கப்பட்டு மாநாடு மற்றும் கட்சிக் கூட்டச் சந்தைகளில் நுகர்பொருள் வணிக அரசியல் கலாச்சாரமாக்கப்பட்டது தான் கொடுங்கனவின் காட்சி சிதைவுகள்.. அதுமட்டுமல்ல.. அவைகள் பாரதி சொன்ன தோற்ற மாயைகளும் கூட...
பகவத்கீதை பின்நவீன காலத்து பூக்கோ காட்டும் அதிகார வலையமைப்பையும் போலி உலகையும் மாயை மற்றும் அஞ்ஞானம் என்ற குகையின் வாயிற் கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் செல்கிறது.. அக்குகைக்குள் அல்லாவுதீன் விளக்கை சினிமா கதா நாயகன் தேய்த்து நன்மை செய்யும் அதிகார பூதத்தை விளக்கேற்றச் சொல்வான் என மக்கள் நம்புவது தான் பின் நவீன காலத்தின் கொறலி வித்தை... இது போன்ற தற்காலிகமான அநித்தியமான பிம்பங்களை உண்மை என்று நம்பி ஏமாறுவதே மாயையின் வலை. இதைத்தான் அரங்கன் இப்படி கீதையில் சொல்கிறான்..
த்யாயதோ விஷயான் பும்ஸ:ஸங்கஸ் தேஷூ பஹாயதே...
ஸங்காத்ஸ்ஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோபி ஜாயதே...
புலன் நுகர்பொருட்களைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவனுக்கு அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து காமமும் பேராசையும் பின்பு பேராசையிலிருந்து கோபமும் பிறக்கிறது. கோபத்திலிருந்து மாயையும் மாயையிலிருந்து புத்தி மாசடைதலும் தானாகவே நடந்தேறிவிடுகிறது.. இறுதியில் மனிதன் தன் விவேகத்தை இழந்து முற்றிலும் அழிகிறான்.
தமிழகச் சூழலில் சினிமா மற்றும் அரசியல்வாதிகள் உற்பத்தி செய்யும் போலி பிம்பங்களை மக்கள் தொடர்ந்து சிந்தித்து, கொண்டாடுவதால் அவற்றின் மீது ஒரு தீராப் பற்று ஏற்படுவதை அவர்களால் விட்டொழுக்க இயலவில்லை.. இந்த விவேகமற்ற பற்று, நிஜமான சமூக விழிப்புணர்வை அழித்து, மக்களை அதிகார அமைப்புகள் விரும்பும் ஒரு நிரந்தர பிரமையில் ஆழ்த்தி விடுவதுதான் மாய யதார்த்தம்..
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் இணைந்து நடத்தும் இந்த மாய யதார்த்த’ நாடகம், விளிம்புநிலை மக்களின் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்துவது போலக் காட்டி, உண்மையில் பூக்கோவின் தத்துவப்படி அவர்களை ஒரு நுண்ணிய அதிகார வலையமைப்பில் சிக்க வைத்திருக்கிறது என்பது தான் எல்லா நடுநிலை இலக்கிய அதிபுத்திசாலிகள் வலிந்து திணிக்கும் யாதார்த்தம் காட்டும் மறுதலிக்கவியலாத உண்மை.. பூக்கோ காட்டும் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வும், கீதை போதிக்கும் விவேகம் மற்றும் பிம்பக் கவர்ச்சி மீறிய பற்றற்ற நிலை மட்டுமே மக்களை இந்த கூட்டு ஏமாற்று வித்தையிலிருந்து விடுவிக்க முடியும். போலிப் பிம்பங்களை வழிபடாமல், யதார்த்தத்தை அதன் நேர்மையோடு எதிர்கொள்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதைத் தான் தமிழக மக்கள் மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் நாளை நடத்திக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog