ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/16
முகத்தின் மீது
முஷ்ட்டி யொன்று ஓங்கி
குத்திவிட்டுப் போகிறது..
அதன் வலிமையையும்
விரல்களில் மோதிரமிருந்தா என்பதையும்
மற்றும் விரல்களை மடக்கி
முஷ்ட்டி நீண்டதன் காரணிகளையும்
ஆய்ந்து கொண்டிக்கத் தேவையில்லை..
முகம் அப்பிக் கிடந்த நறுமணப் பூச்சை
அலகால் ஒரு சாகசப் பறவை
கொத்திக் கொத்தி உதிர்க்கிறது..
உதிர்க்கட்டும்..
அதன் கால் நகங்களின் கூர்மையையும்
சிறகுகளின் சக்தியையும்
மற்றும்
அது முன்பு அமர்ந்திருந்த மரக்கிளையின்
தாவரவியல் பெயர்களையும்
ஆய்வதால்
கன்னத்துக் குருதி நின்றுவிடப் போவதில்லை..
ஒன்று மட்டும் நிச்சயம்..
முஷ்டிகளாலும் கூரிய அலகுகளாலும்
உலகறிந்த ஒரு முகத்திலிருந்து
அதன் நிரந்தர புன்னகையை
உயிர் உள்ள வரை...
பிடுங்கியெறிய வியலாது..
அது மட்டுமல்ல...
அந்த முகம் மரணித்தப் பின்னும்
அதன் நெற்றியில் மீந்திருக்கும்
விபூதி பட்டையின் நடுவில்
பதிக்கப்பட்ட வட்ட வடிவ
ஒற்றை நாணயத்தையும் கூட....
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments
Post a Comment