கோடிகளில் மாதவருவாய் வரும். ஆனாலும் உபரி வருமானம் தேடுவான் சாமான்யன்.. உபரி வருமானம் நியாயமான முறையில் எப்படி வரும்.. அதிக உழைப்பை அளித்தால் உபரி வருமானம் கண்டிப்பாக வரும்.. ஆனால் லஞ்சம் வட்டி வருமானம் முறைகேடுகளில் ஈடுபடுவது ஏமாற்றி சம்பாதித்தல் மற்றும் இன்னபிறவும்... உபரி வருமானம் எனும் சொற்பிறப்பியலின் ஊற்றுக்கண்..

இப்படித்தான் போதிய மாத வருமானம் வருகையில் நேர்மையாய் உபரி வருமானம் சம்பாதிக்கும் ஆசையில் ஒரு அம்பாஸிடார் கார் வாங்கி வாடகைக்கு விட்டது.. முதலில் நட்பாய் பழகிய ஓட்டுனர் ஆறே மாதத்தில் கடுமையான கடன் சுமையில் தள்ளிவிட்டார். போதிய மாதவருமானம் கடனடைக்கவே போதாமல் போனது.. அது மட்டுமல்ல.. ஒவ்வொரு ஆயுத பூஜையிலும் கார் நிறுத்தம் நடத்தும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.. அது ஒட்டுனரின் உபரி வருமானம் என்பது புரியாமல் போனது. கடைசீயில் அம்பாஸிடாரை கடனக்கு ஓட்டிச் சென்றுவிட்டார்கள் நிதி நிறுவனத்தார்..
அதன் விளைவு..போதிய மாத வருமானம் தரும் அலுவலகத்தின் ஆயுத பூஜையில் கலந்து கொள்ளவும் இயலாமல் போனது. உபரி வருமானம் என்பது அதிகார வர்கத்தினருக்கும் பணக்காரர்களுக்கும் அரசியல் பிழைப்பாளர்களுக்கும் சாத்தியமான ஒன்று..சாமான்யர்கள் உபரி வருமானத்திற்கு ஆசைப்பட்டால் ஆயுத பூஜைக்கு பொரி வாங்கவும் கஷ்டப்படவேண்டும்.
இவ்வளவு அனுபவத்திற்குப்பின்பும் உபரி வருமானத்திற்காக எழுத்தையும் முகநூலில் பதிவுகளையும் நம்பிக் கொண்டிருப்பது சாமான்யனின் இறுதி முயற்ச்சி.. வயோதிக ஏழையின் நடுங்கும் நரம்பு தளர்ந்த விரல்களின் உழைப்பு.. ஆனால் ஏழைகளுக்கு சரஸ்வதி கடாக்ஷ்ம் நிறைய இருக்கும்.. ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம்...?.. அபரிமிதமான லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவனுக்கு உபரி வருமானமும் அபரிமிதமாக இருப்பது புரிதலுக்கு அப்பாற்பட்ட முரண்..
இப்போது மேட்டா மனது வைத்தால் இந்த ஆயுத பூஜையிலிருந்து இப்பரம ஏழை எழுத்தாளனின் பதிவுகளை உலகெங்கும் எடுத்துச் சென்று உபரி வருமானம் வர வழி செய்யட்டும்.. அபரிமிதமான லக்ஷ்மி கடாக்ஷ்ம் கிட்ட உங்களின் பேராதரவு தேவைப்படுகிறது.. அனைவருக்கும் ஸரஸ்வதி பூஜை.. விஜயதசமி வாழ்த்துக்கள்..
வாழ்க வருமானம்.. வளர்க.. உபரி வருமானம்..
ராகவபிரியன் தேஜஸ்வி

Comments

Popular posts from this blog