இந்திய கிராமிய பொருளாதார வெற்றி...1
பின் நவீன இந்தியக் கிராமப் பொருளாதாரமும் மேலைநாட்டுக் கிராமப் பொருளாதாரமும் இரட்டை ஜடையிலிருந்து இலகுவாகப் பிரிக்கவியலும் பின்னல் கால்கள் போன்றவை.. இந்தியக் கிராமத்தில் வறுமை என்பது பணமின்மை மட்டுமல்ல அதையும் தாண்டி நிலமின்மை, சாதி, கடன், உழைப்பின் மதிப்பின்மை ஆகியவற்றின் வரலாற்றுத் தொகுப்பு. ஆனால் இத் தொகுப்பிற்குள் தான் ஆயிரமாண்டு கலாச்சாரப் புதையல் பாதுகாப்பாய் இருக்கிறது.. மேலைநாட்டுக் கிராமங்களில் செழிப்பு என்பது விடுதலையின் முழுமையான முகமென அரிதாரம் பூசப்பட்டு வெகுஜன ஊடகங்கள் மூலம் இந்தியப் பார்வைகளில் புகுத்தப்படுவது பொருளாதார கொரில்லா யுத்தம்.. மேலை நாட்டு பொருளாதார இயந்திரம், சந்தை, பெருநிறுவனம் ஆகியவை கண்ணுக்குப் புலப்படாத இரும்புக் கை மாயாவியின் கரத்தில் இருக்கும் சாட்டை போன்றதெனில் அதுதான் நிஜம்..
நோபல் பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் விடுதலையின் வளர்ச்சி எனும் நூலில்..அதாவது டெவலப்மெண்ட் ஆப் ப்ரீடம் எனும் நூலில் பொருளாதார வளர்ச்சி தனிமனித விடுதலை என்கிறார். அவரின் பொருளாதாரம் மைக்ரோ பொருளாதார கூறுகளை உள்ளடக்கியது.. தனி மனித விடுதலை மைக்ரோ பொருளாதார மேம்பாட்டினால் சாத்தியப்படுவதில்லை.. உதாரணத்திற்கு சாமான்யனாய் இருந்த ஒருவன் மேக்ரோ பொருளாதர வளர்ச்சி சினிமாவினால் அடைகிறான்.. இங்கே அவனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவிற்கு விடுதலை கிடைக்கிறது.. மைக்ரோ பொருளாதார சைட் ஆர்டிஸ்ட்களால் இப்படியான விடுதலை சாத்தியமா என்பதை சென் சொல்லவே இல்லை..
வளர்ச்சி என்பது மக்களின் சுதந்திரங்களை விரிவாக்கும் செயல்முறையை விளிம்பு நிலை கிராமாத்தானுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.. ஆனால் இந்திய விவசாயிக்கு நிலமும் நியாயமான விலையும் வாழ் நாள் கனவாகவே இன்னமும் இருக்கிறது... தென்னை விவசாயி தன் சிகைக்கு தேங்காய் எண்ணெய் தடவி அலங்கரித்ததை இன்னமும் எந்த ஓவியரும் வரையவில்லை.. ஆனால் மேலைநாட்டுக் கிராமவாசிக்குத் தொழில்நுட்பமும் வருமானமும் அபரிமிதமாக இருக்கிறது... இங்கே நாம் பொருளாதார அளவு கோலை ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் பார்த்தால்.. மேலை கிராமத்தானின் வருமானம் வளர்ச்சியின் உச்சம் என்பது புரியும்.. ஆயினும் அவர்கள் இயற்கையின் மீதான கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை..
நேற்று பொருளாதார அறிஞர் ஈ.எப்.ஷூமேக்கரின் சில வாக்கியங்களை இணையத்தில் வாசிக்க நேர்ந்தது..
அவரின் ஸ்மால் இஸ் ப்யூட்டிபுல் எனும் பொருளாதார சிந்தனை கொஞ்சம் மைக்ரோ பொருளாதரத்தின் அழகியல் பற்றி பேசுகிறதோ என எண்ணத் தோன்றியது.. கிராம பெட்டிக் கடைக்காரனால் பெற்ற தாயிற்கு சோறு போடவியாது எனும் சொலவடையொன்று தஞ்சை கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.. இந்திய கிராமங்களில் இப்போது பல்பொருள் அங்காடிகள் நிறைய உட்புகுந்து விட்டன.. இந்திய கிராம பொருளாதார பின்னல் கால்களை தீவிரமாய் சீவி மேலைக் கால்களுடன் பின்னுதல் இப்போது சாத்தியம் தான்.. இருந்தாலும் ஸ்மால் இஸ் ப்யூட்டிபுல் எனும் கூற்று பொருளாதாரத்திற்கு பொருந்துமா எனப் புரியவில்லை.. அவரின் ப்ரொடக்ஷ்ன் த்ரூ மாஸ்ஸஸ் என்பதற்கும் மாஸ் ப்ரொடக்ஷ்ன் என்பதற்கும் செயல்படுத்தும் சிஸ்டம் வேறுபாடுகளின் பிரிகளை கோர்க்கவியலுமா என்பது பொருளாதார நிபுணர்களின் முன் உள்ள இன்றைய கேள்விக்குறி..
இந்தியக் கிராமத்தின் கைவினையும் சிறுதொழிலும் ஆழ்ந்த கலை நுட்பத்துடன் கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.. ஒரு சின்ன உதாரணம்.. நேற்றைய தனுஷின் மாதர் அணியினருக்கான பரிசுப் பொருள் வெள்ளி காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை பொறிக்கப்பட்டிருக்கிறது.. இப்படியான உளவியல் கலந்த மேலை கிராம கைவினைகள் உலகச் சந்தைகளில் காணப்படவில்லை என்பதே வாழ்வியல் நிஜம்..
கிராமிய வாழ்வியலையும் இயற்கையையும் ஆழமாகச் சிந்தித்த பொருளாதர நிபுணரெனச் சொல்லவியலாத அழகியல் ஆய்வாளர் வெண்டெல் பெரி, இயற்கையையும் கலை நுட்பத்தையும் கலாச்சார விழுமியங்களையும் முதன்மைப்படுத்தும் பொருளாதார ஒழுங்கை தீவிரமாய் வலியுறுத்துகிறார். அவரது பார்வையில், நகரமயமாக்கப்படாத இந்திய கிராமங்களின் நிலம் வெறும் உற்பத்திக் கருவியல்ல...அது சமூக நினைவின் எச்சங்களை உள்ளூர் பண்பாட்டின் அழிக்கவியலா அழகியல் உச்சங்களை இன்னமும் தாங்கி நிற்கும் மானுட உறைவிடம் மட்டுமல்ல வாழ்விடமும் கூட.. என்பது வியப்பின் சிகரம்..
போகட்டும்.. நமது இந்தியக் கிராமம் உறவுகளின் பெயரில் ஏற்றத்தாழ்வுகளைச் சுமக்கலாம்.. பரவாயில்லை.. ஆனால் மேலைநாட்டுக் கிராமம் செயல்திறனின் பெயரில் சமூகத் தனிமையை வளர்ப்பதைத்தான் சகித்துக்கொள்ளவியலவில்லை.. இந்திய கிராமத்தானின் உழைப்பு மலிவாக்கப்படும் அதே வேளையில் மேலை கிராமத்தானின் இயந்திரத்துடனான போராட்டத்தை உயர்த்திப் பேசுவது எந்த ஒப்பீடுகளையும் உடைத்தெறியக்கூடியது... சுருள் சிகைகள் நீண்டு வளர்வதில்லை.. நீண்ட கூந்தல் சுருள்முடித் தலையர்களுக்கு வெறும் கனவு மட்டுமே..
என்னதான் நம் இந்திய கிராமத்தின் பொருளாதாரம் பின்னல் இன்றி லூஸ் முடி விட்டிருந்தாலும் கவர்சியாகத்தான் இருக்கிறது.. சுருண்ட மேலை நாட்டு கிராமத்தின் யந்திர மயமாக்கல் சிகை இயற்கையை மீறிய சடைபிடித்திருக்கிறது..
மெல்ல மெல்ல இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவது நம் கிராம மைக்ரோ பொருளாதார உற்பத்தியாளர்களான விவசாயிகள் கைவினைஞர்கள் மற்றும் கலாச்சார பாதுகாவலர்களின் முகத்தில் சிறு புன்னைகையைத் தரவியன்றால் அதுவே மாபெரும் வெற்றி..
ராகவபிரியன் தேஜஸ்வி.

Comments
Post a Comment