எழுத்தாளர்களின் ஐடியாலஜி அல்லது உளக்கருத்தியல் அவர்களை இரண்டு தனிக்குழுக்களாக அடையாளப்படுத்திக்கொள்ள கட்டாயப்படுத்துகிறது நிகழ் நடப்பியல் எழுத்துலகு.
இலக்கியம் சார்ந்த அல்லது இலக்கியத் தரமான அல்லது பண்டைய ஆலமரத்தடி தேனீர் அருந்தகங்களின் மரச் செதுக்கல் திண்ணைகளின் குழுஅமர்வுகள் ப்ராமண அல்லது ப்ராமணீய எழுத்தாளர்களெனும் அடையாள அட்டையைச் சுமந்து தங்களின் மீளுருவ ப்ராமணீய எழுத்தின் உளக்கருத்தியலை பரவலாக்குகிறார்கள் என்பது ஒருவிதமான குற்றச்சாட்டு முறையீடெனவும் நிகழ் நடப்பியல் அடையாள அட்டைகள் ஒவ்வொரு வலதுசாரி எழுத்தாள கழுத்திலும் நிரந்தமாக தொங்கவிடப்படுகிறதென நிகழ் நடப்பியல் எழுத்துலகம் சொல்கிறது.
இரண்டாவதாக
ப்ராமணீய ஆலமரத்தடி தேனீரகங்களில் பண்டைய சம்ஸ்கிருத வாசம் இன்னமும் தூக்கலாக வீசுவதாகக் கருதி அதற்கு மாற்றாக சற்றே மாறுபட்டு நீரற்ற அல்லது பாழ்படுத்தப்பட்டு வறண்டு போன ஆற்றங்கரை மேலைத் தேய இடது சாரி சோமபாண அருந்தகங்களிலோ இல்லை அரசாங்க அனுமதி பெற்ற தமிழ்த்தேய பரவலாக்கப்பட்ட வெகுஜன அருந்தகங்களிலோ அல்லது மின்னணு பட்டைக் குறியீட்டு பதாதைகள் ஏந்தி முக நூலில் ஒன்றிணைந்து ப்ராமணீய எதிர்ப்பைக் காட்டி எழுத்துக் கோவிலுக்குள் ஒட்டுண்ணிகளாக ஒட்டிக்கொண்டு மதச்சார்பின்ன்மை சின்னங்களணிந்து நிரந்தரமாக தீபம் காட்டிக்கொண்டிருக்கும் சிவாச்சாரியர்களையும் பட்டர்களையும் விரட்டிவிட்டு போலி பண்டார ஆறாட்டியல் நிபுணர்களை நியமிக்க எடுத்துக்கொள்ளும் அதிதீவிர எழுத்தியக்க முனைப்பெனவும் கொள்ளுதல் விழுமிய திரித்தல் தகவுப் பலகைகளின் மின்னும் தொங்கட்டான் எனவும் நிகழ் நடப்பியல் எழுத்துலகம் சொல்கிறது.
நண்பர்களின் மேலான கருத்துக்கள் நிகழ் தமிழ் எழுத்துலக பிரம்மாக்களை தாமரை ஆசனத்திலிருந்து இறக்கி நான்கு தலைகளூடன் சிந்திக்க வைத்து தேனீரக மாற்று அருந்தக அருந்தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்க கருத்தியல் தானசாதன நிறைப் பொதிவாக கொள்ளுதல் சாத்தியமாகக் கூடலாம்.
கருத்திடச் செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா...?
ராகவபிரியன்
No comments:
Post a Comment