Thursday, September 4, 2025

 






About Oru Panavanin Rengaprama Parikathangal
மனிதப் பிறவி அரிது என்று ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். அந்த அரிய பிறவியைப் பெற்றவனின் வாழ்வு, வெறும் இன்ப துன்பங்களின் சுழற்சியல்ல; அது பரம்பொருளை உணர்ந்திடும் ஒரு புனிதப் பயணம். எது நிகழ்ந்தாலும், அதற்கு பின்னால் ஒருவித ஆன்மிகப் பாடமே மறைந்திருக்கும். அந்தப் பாடங்களை உணர்ந்தவரின் வாழ்க்கை, நமக்கெல்லாம் வெளிச்சம் தரும் விளக்காகி விடுகிறது.
இந்த நிஜக் கதை, அந்தப் புனிதப் பயணத்தின் சான்றிதழாகும். இங்கு நிகழும் உரையாடல்கள், சாதாரண மனுஷரின் சந்தேகங்களும் துன்பங்களுமல்ல; அவை ஆன்மாவின் ஆழத்தில் எழும் வினாக்களாக, சத்தியத்தின் வாயிலில் விடைகளை எதிர்நோக்கும் சாகசங்களாகவும் அரங்கனே மனித வடிவில் வந்து உரையாடும் அற்புத நிகழ்வுகளாகவும் உள்ளன. இறைநம்பிக்கையின் துளி, மனித மனத்தின் இருட்டில் விழும் போது, அந்த ஒளி எவ்வாறு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
திருக்கச்சி நம்பிகள் பிராமணாரா எனும் கேள்வியை பனவனிடம் அரங்கன் கேட்க பக்தி நிகழ்வியல் நிஜம் நடப்பியலாகிறது; அக்கேள்வி உள்ளத்தில் ஜொலிக்கும் அறிவின் நெருப்பைத் தூண்டுவதும் ஆகும். ஆன்மீக உரையாடல்களால் அந்த நெருப்பு பரவி, திருக்கச்சி நம்பிகள் யார் என்பதன் சாட்சியமாக இந்நூல் நிற்கிறது.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...