தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்..3.
இங்கே ஈடிபஸ் காம்ளெக்ஸ் என எதிர்வினையாற்றுபவர்கள் பாரதி சிறுவயதில் பிராமணரல்லாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார் அதுவும் எட்டு அல்லது ஒன்பது வயதில் என பதிவு செய்கிறார்கள்.. இது மிகவும் கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான உள்நோக்கம் கொண்ட பிராமண வெறுப்பை விதைக்கும் பதிவு..
பாரதியின் சுயசரிதையில் பாரதி இப்படிச் சொல்கிறார்..
ஆங்கோர் கன்னியை பத்துபிராயத்தில்
ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினேன்..
பாரதி வணங்கியது சிறுவயதிலிருந்தே தன் தாயாக பாவித்த அந்த ஆதிபராசக்தியைத் தான் என்பதை கவிஞர் மீரா தொகுத்த பாரதீயம் என்ற கட்டுரை தொகுப்பில் திரு டாக்டர். சி. கனகசபாபதியின் கட்டுரையில் காண இயலும்..
பாரதியின் சமகால சினிமா படத்திலும் இதுபோன்ற பிராமண வெறுப்பு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது..அதற்கு பாரதியின் வேறு தலைப்பிலுள்ள பாடலுக்கு இளையராஜா இசைவேறு அமைத்திருக்கிறார்.. இது இன்றைய அதீஸ்ட் இடதுசாரி பிராமண வெறுப்பு இலக்கிய கர்த்தாக்களின் துணையோடு நடந்தேறியிருக்கிறது..
மேலைத்தேய இலக்கியத்தின் ஜூலியோ கொர்தாஸரின் ஒரு கதை நினைவிற்கு வருகிறது...அவர் பிரான்சில் ஒரு மிருககாட்சி சாலைக்குச் செல்கிறார்..அங்கே நிறைய கொடிய மிருகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..
நம் தமிழ் நாட்டில் சமகாலத்து இளைஞர்கள் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் காட்சிப்படுத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கு போவது போல் தான். கொர்தாஸர் சிங்கம் புலி மற்றும் இதர மிருகங்களைப் பார்த்துவிட்டு மெல்ல ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து பின் கடந்து சென்றுவிடுகிறார்..
தமிழகத்தின் அரசியல் கூட்டத்திற்கு வரும் வெகுஜனங்களுக்கு ஆயிரம் உரூபாயும் குவார்ட்டரும் மற்றும் ஒரு ஊறுகாய் பொட்டலுமும் கொடுக்கப்படுவதாக அறிய இயலும்..அப்படி அழைத்து வரும் வாக்காள பெருமக்கள்..சிலர்...கூட்டம் முடியும் வரை அருகிருக்கும் புதர் மறைவில் ஒருவித பயத்துடன் தாகம் தீர்த்தபடி கலந்து கொண்டுவிட்டு செல்வார்கள்..
அதுபோல நம் தமிழக சாதாரண வெகுமக்கள் போல அரசியலியக்கப் பார்வையுடன் கொர்தாஸர் நகர்ந்து செல்ல மாட்டார்.. அவர் எப்படி செல்வாரென்றால்...முடிந்தால் ஒரு வாழைத்தாரோ இளனீர் கொத்தோ தள்ளாடாமல் இருந்தால் ஈச்சம் கொத்தோகூட எடுத்துக்கொண்டு செல்லும் நம் இன்றைய தலைமுறையின் வெகுமக்கள் வாழ்வியலுக்கேற்ப.. தன் இதயம் முழுவதும் தான் கண்ட அம்மிருக இயல்புகளை உள்வாங்கியபடி எங்காவது தனக்கான அன்பு கிடைக்கிறதாவென தேடியபடியே செல்வார் கொர்தாஸர்..
மெல்ல நகர்ந்து ஆகப்பெரிய கண்ணாடித் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்வாழ் சிறைபட்ட உயிரினங்களை காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் நிற்கிறார்...அந்த கண்ணாடிச் சிறைக்குள்ளே ஒரு அச்சலோற்றல் மீன் அதாவது மீனின் முட்டைப்புழு ஒன்று நீந்திக்கொண்டு அவரை நோக்கி வருகிறது..
கொர்தாஸர் கண்ணாடியின் வெளிப்பக்கம் அச்சிறும் அக்குழந்தை மீனுக்கு முத்தமிடுகிறார்...அந்த சின்ஞ்சிறிய அச்சலோற்றலும் தன் சிறுவாய் தொட்டு அப்பக்கமிருந்து முத்தமிடுகிறது..அன்பின் காந்தம் அவரை தினமும் அவ்விடம் இழுத்து வருகிறது.. அந்த மீனின் அன்பு தினம் தினம் கொர்தாஸரி அந்த கண்ணாடித் தொட்டியை முத்தமிடச் செய்துவிடுகிறது..
பாரதி அவரின் அப்பாவின் அடக்குமுறைக்கும் வெறுப்பிற்கும் ஆளாகி தாயன்பற்ற நிலையில் தன் சிறுவயதில் தனிமைப்படுத்தப்படுகிறார்..அவர் தான் காணும் பெண்களையெல்லாம் பராசக்தியாக நினைத்துப் பாடிச்சென்ற குழந்தைக் கவிப்பிதாமகன்...அப்படியான அழிக்கவியலா இலக்கிய ஜீவித வரலாற்றுக்குச் சொந்தக்காரன் நம் மஹாகவி..
பிராமண சாதியை கலப்புத் திருமணம் செய்தால் ஒழித்துவிடலாம் என கனவுகண்டு சமகால இளைஞர்களை தவறாக வழி நடத்தும் நம்தமிழ் அதீஸ்ட்களின் மதமாற்ற சாதிமாற்ற உத்திக்கு உலக மஹாகவி பாரதியின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் குற்ற எழுத்து இலக்கிய குப்பைகளை கொட்டிவிட்டுப் போகிறார்கள் சிலர்.. இதுபோன்ற சிறுமதியாளர்களை ஒருபோதும் வரலாறு மன்னிக்காது..
போகட்டும்..
பாரதிக்கு மட்டுமல்ல மாபெரும் மேலைத்தேய இலக்கிய கர்த்தர்..கொர்தாஸருக்கும் இதே கதிதான் இலக்கிய வரலாற்றில் நடந்தேறியிருக்கிறது... கொர்தாஸர் உடல் நிலை சரியில்லாத அவரின் கடைசீ காலத்தில் அவருக்கு மாற்று இரத்தம் செலுத்தப்படுகிறது..அந்தக் குருதியில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்திருக்கின்றன. அவர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என அவரின் ஒழுக்கத்தைச் சந்தேகித்து சிதைத்த இலக்கியச் செய்திகள் இன்னமும் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
பாரதி அரங்கனை [ கண்ணனைத்தான்] காதலித்தான்..தன் மனைவி செல்லம்மாளைத் தவிர அவன் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் என்பதை செல்லம்மாவே பதிவு செய்திருக்கிறார்..பாரதி பராசக்தியை தன்னை வளர்த்த அன்னையாகவே பாவித்தான்..பாரதி வேறுசாதிப் பெண்ணை எட்டுவயதில் காதலித்தான் என துர் நோக்கத்துடன் எழுதுபவர்களுக்கும் கோவில் பொம்மைகளின் நிர்வாணத்தை கூர்ந்து நோக்கி சுகம் கண்டு கொண்டே ஆன்மீகம் ஆபாசம் நிறைந்ததென எழுதுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
பாரதியை மட்டுமல்ல இலக்கியத்தையும் அதன் மூலம் வெகுமக்களின் வாழ்க்கையை எழுதுவதற்கும்..இன்றைய திருட்டு அரசியலையும் அதனால் பாதிக்கப்பட்டு பதிவுசெய்யப்படும் இலக்கியத்தை...? எழுதுவதற்கும் குறைந்த பட்சம் ஆறு இல்லை ஓராயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன..
ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கு வருவோரின் ஒவ்வொருவரின் தலைக்கும் ஆயிரம் தரும்..இன்னொன்று ஐநூறு..இன்னொன்று இருநூறு.. இதையெல்லாம் எதிர்பார்த்து அச்சலோற்றல் முத்தம் தரும் வசீகர சினிமா நடிக கட்சிக்காக கண்ணாடித் தொட்டியின் வெளிப்புற பறக்கும் முத்தம் பெறுவதற்காக உயர்விளக்கு கோபுர கம்பத்தில் ஏறி நின்று கூச்சலிட்டால் பாரதி இடதுசாரியாகிவிடமாட்டார்... அதீஸ்ட் இலக்கியத்திற்குள் அவரை அடைக்க முற்படுவோருக்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.. உங்களால் எந்த சாரிக்குள்ளும் பாரதியின் முண்டாசின் நுனியைக்கூட திணிக்க இயலாது...
No comments:
Post a Comment