Saturday, December 13, 2025

 அடர்ந்த நாத்திகப் பனிமலை உச்சிகளில்

அமர்ந்து கொண்டு
உங்கள் மூடிய தோல் காலணிகளின் மேல் போர்வையைப் போர்த்துகிறீர்கள்..
எங்களின் சந்தியாவந்தன பஞ்சபாத்திரத்தில்
பனிக்கட்டிகள் உறையச் செய்தது நீங்கள் தான்
எனக் கத்தும் உங்கள் வாயிலிருந்து
ஓசைகளுக்குப் பதில் புகைதான் வருகிறது..
உங்கள் காலணிகளின் கயிறுகளை இறுக்கிக்கொண்டு
எங்கள் பூணூலால் எங்கள் கழுத்தை இறுக்குவதாக இறுமாந்து போகிறீர்கள்..
பின் எதற்காக மூச்சுவிட இயலாத பனிச்சாலையில் தடம் பதிக்க நினைக்கிறீர்கள்..?
நாத்திகத் தடங்கள் அற்பாயுசுகொண்டவை.. அறிந்து கொள்ளுங்கள்..
கைலாய உச்சியில் கொழுந்துவிட்டெறியும் ஆத்திக தீபத்தை
உங்களால் ஒருபோதும் ஊதி அணைத்துவிட இயலாது..
கைலாயத்தில் மீந்த உங்கள் பச்சை மாமிசத் துண்டுகளை உலர்த்த இயலாதென்பதால் பரம்குன்றத்தின் தூணில் கோர்த்துலர்த்த முயலுகிறீர்கள்..
நாத்திக பனிமலையின்
டார்டரி எருதின் கூந்தல்களைச் சீவிமுடித்து
பூ வைத்து சூடம் காட்டி படையலிடுகிறீர்கள்..
பின்னர் அரசியல் அறுக்கும் களத்தில்
இழுத்து வந்து அதன் கழுத்தைச் சீவிக்கொட்டிய
குருதி நெய்யில்
பஞ்சதீபமேற்றச் சொல்லி ஆணையிடுகிறீர்கள்..
கொள்ளையடிக்கவும்
சிறுபான்மை ஓட்டுக்காகவும்
சனாதன ஜீவநதிக்கு அணையிடவும்
மன்னராட்சி முறையைத் திணிக்கவும்
அதிஉச்ச அதிகார சுராபானம் அருந்திவிட்டு
நெற்றியில் பூசிய திரு நீறை அழித்துக் காட்டும்
உங்கள் ஆணை
உயிரற்றுக் கிடப்பதைப்
பார்க்கத்தான் போகிறீர்கள்..
போகட்டும்..
பனிமலையில் அமர்ந்து கொண்டு
காலணி கயிறை எவ்வளவு தான் இழுத்துக் கட்டி அழுத்தி அழுத்தி நடந்தாலும்
இந்த ஆன்மீக பூமியில்
உங்கள் நாத்திகக் காலடியின்
ஒரு தடத்தைக்கூட பதித்துவிட இயலாது..
எல்லைக்கல்லோ தீபத்தூணோ
எங்கள் ஆன்மீக தீபம்
அங்கே ஏற்றப்படத்தான் போகிறது..
எதிர்வரும் தேர்தலில் உங்கள் நாத்திகம்
உச்சியிலிருந்து உருண்டுவிழுவதைப்
பார்க்கத்தான் போகிறீர்கள்..
ராகவபிரியன்



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...