Saturday, December 13, 2025

 இலக்கிய வலதுசாரிகள்..7

[ சங்க காலம் ]
காஞ்சியின் அருகில் கூரம் என்றொரு குக்கிராமம்..ஆனால் ஆன்மீக வரலாற்றில் அழிக்கவியலா இடம் பெற்ற புண்ணிய பூமி..வைணவ புரட்சித் துறவி ராமானுஜரின் அத்யந்த சிஷ்யர் பிறந்த ஊர் இது. இந்த அரங்கனின் ஆதியடிமையின் பெயர் கூரத்தாழ்வான். அவரின் ஊர் தான் கூரம்.
கூரத்தின் பூமிப்பதிவுகள் தாமல் என்ற ஊரில்தான் செய்யப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் தாமலில் தான் இருக்கிறது. தாமல் என்ற பெயர் வித்தியாசமாக இருக்க அவ்வூருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கிருக்கும் வெகுமக்கள் கூடியிருந்த தேனீர் கடையொன்றில் இவ்வூரின் பெயருக்கான பொருளென்ன என வினவ நேர்ந்தது..
பாரம்பரிய பெருமை பேச்சில் சுகம் காணும் முதிய தாமல் மண்ணின் வெகுமக்களில் மூத்த வயோதிகப் பெரியவர் ஒருவர் சொன்னது இதுதான். தாமற்பல்கண்ணனார் என்று இங்கே கல்வெட்டில் ஒரு பெயர் செதுக்கப்பட்டு இருப்பதாகச் சொல்ல வியப்பில் தேனீர் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
தாமற்பல்கண்ணனார் என்பவர் பிராமணர் என்று புற நானூற்றுப் பாடலில் சொல்லியிருப்பதாக வேறு அவர் கூடுதல் தகவல் சொல்லிவிட்டு பாமர முகபாவத்தை மாற்றிவிடாமல் தேனீரைச் சுவைக்கத்தொடங்கினார்..
ஆஹா ஒரு வலதுசாரி சங்க இலக்கிய எழுத்தச்சர் கிடைத்த மகிழ்வில் அவரைப் பற்றி வெகுமக்கள் ஊடகத்தில் தேடி கண்டடைந்ததை அப்படியே கீழே தருகிறேன்..
சோழன் மாவளத்தான் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பினன். ஆயினும் நல்லதன் நலமுணரும் நயம் மிக்கவன். ஒருகால் இவனும் ஆசிரியர் தாமற்கண்ணனாரும் வட்டாடினர். வுட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை அறியாமல் அவர்க்கீழ் மறைந்துவிட்டதாக அதனைப் பின்பு உணர்ந்த மாவளத்தான் வெகுண்டு அவரை அவ்வட்டினால் எறிந்தான். உண்மை கூறவும் ஓராது வெகுண்டெறிந்த அவன் செய்கையை இகழ்ந்து அப்புலவர் “வேந்தே நின் செயல் பொருந்துவதன்று; நின் குடிப்பிறந்தோர்க்கு இச்செயல் இயல்பன்றாதலின் நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன் என வருந்தி உரைத்தார். அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை உணர்ந்து நாணினான். இந்நிகழ்ச்சியை உரைக்கும் பாடலில் கிள்ளியின் தம்பியாகிய தாமற்பல்கண்ணனார் புறவின் பொருட்டுத் துலை புக்கவனின் வழித்தோன்றல் ஆவார். அவனது முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார். இச்செயல் உனக்குத் தகுமோ? உன் பிறப்பில் ஐயமுடையேன் என்று கூறியதைக் கேட்டு நாணியிருந்த மாவளத்தானின் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து “நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப் பாராட்டுவதாக“நிலமிசை வாழ்ந ரலமர றீரத்…..என்ற புறநானூற்றுப்பாடல் (43) அமைந்துள்ளது.
தாமற்கண்ணனார் என்பவர் பார்ப்பனர். புலமைமிக்கவர். காஞ்சிபுரத்திற்கு மேற்கில் உள்ளதோர் நல்ல ஊர். இடைக்காலச்சோழ வேந்தர் காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதை இங்குள்ள கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வூரைத் தாமர் (ளு.ஐ. ஏழட. ஏ. 1004. யு.சு. 139 ழக 1896) எனக் குறிப்பிடுவதால் தாமற்பல்கண்ணனாராக இருக்கலாம் என்பர். பல்கண்ணன் என்பது இந்திரனைக் குறிக்கும் பெயராதலின் இவர் இவ்வாறு பெயர்பெற்றனர் என அறியலாம். பார்ப்பார் நோவன செய்யார் என்ற பாடலடி இக்குலத்தாரின் சிறந்த பண்பை எடுத்துரைக்கிறது..
அந்த வலதுசாரி சங்க இலக்கியப் பாடலையும் கீழே தருகிறேன்..
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
'நின்னான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய்போல் நனிநாணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்' எனக்
காட்டின; ஆகலின் யானே பிழைத்தனென்!
சிறக்க நின் ஆயுள்; மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
வெகுமக்களுக்கான இலக்கியத்தில் சிறுபாண்மைக்கான இடதுசாரி சிந்தனைகள் சங்ககாலத்தில் இல்லை என்பதே வரலாற்று நிஜம்..
ராகவபிரியன்




No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...