Thursday, December 11, 2025

 இன்று உலக மஹாகவி சுப்ரமணிய அய்யர் பாரதி பிறந்த நாள்...

திருநெல்வேலி கலெக்கடர் விஞ்ச் துரைக்கும் பாரத மாதாவின் தலைமை தமிழ்ப்புதல்வன் வ.உ.சிதம்பரம் பிள்ளைவாளுக்கும் நேருக்கு நேர் நடந்த சொற்போரைப் பார்க்கிறார் பாரதி..
இன்று சிறுபாண்மை மக்களின் ஓட்டுக்காக இந்திய தேசியத்தை இந்து ஆன்மீகத்தை அறுபடை வீடுகளில் முதலாம் வீடான அழகன் முருகனின் படைவீட்டை திருப்பரம் குன்றத்தை சிக்கந்தர் மலை என நாகூசாமல் சொல்லும் கயமையை பாரதி இப்படி அன்றே பாடியிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.
விஞ்ச் துரையையும் விஞ்சி இண்டி கூட்டணி பாராளுமன்றத்தில் வைத்த வாதங்களுக்கு...மாண்புமிகு இந்துமானமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதில்கள் இந்தப் பாடலை ஏனோ இன்று காலையிலிருந்தே என் மனதில் ஓடச்செய்கிறது...
விஞ்ச் கேட்பது:--
"நாட்டிலெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை [ இந்து]
நாட்டினாய் - கனல் - மூட்டினாய்
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி - காட்டுவேன்.
கூட்டங்கூடி வந்தேமாதரம் என்று
கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய்
ஓட்ட நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய் - பொருள் - ஈட்டினாய்.
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய் - சட்டம் - மீறினாய்
ஏழைப்பட்டு இங்கு இரத்தல் இழிவென்றே
யேசினாய் - வீரம் - பேசினாய்.
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் - புன்மை - போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென்று இருந்தோரை
மீட்டினாய் - ஆசை - ஊட்டினாய்.
தொண்டு ஒன்றே தொழிலாக் கொண்டிருந்தோரை
தூண்டினாய்- புகழ் - வேண்டினாய்
கண்டகண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் - சோர்வை - யோட்டினாய்.
எங்கும் இந்த ஸ்வராஜ்ய விருப்பத்தை [ இந்து தேசியத்தை]
ஏவினாய் - விதை - தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ - நீங்கள் - உய்யவோ?
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவோருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்.
இதற்கு இந்திய தமிழ்த்தாயின் மூத்தமகன் வ.உ.சி மீண்டும் அமித்ஷாவாய் பிறந்து அளித்த பதிலுரை..பாரதியின் வரிகளில்...
சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் - பார்க்குமோ?
[ தேவரின் தெய்வம்...திருப்பரம் குன்றம் சிவனுக்கே தாரகத்தை உபதேசித்த தகப்பன் சாமி ஸ்வாமிநாதன்]
வந்தேமாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்
எந்த மாருயிரன்னையப் போற்றுதல்
ஈனமோ? - அவ - மானமோ?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ? - உயிர் - வெல்லமோ?
நாங்கள் முப்பதுகோடி ஜனங்களும்
[ தொன்னூறு கோடி]
நாய்களோ? - பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது
நீதமோ? - பிடி - வாதமோ?
பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் - தாபமோ?
கூறுமெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் - செற்றமோ?
ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெலாம்
மலைவுறோம் - சித்தம் - கலைவுறோம்.
சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி
யேகுமோ? - நெஞ்சம் - வேகுமோ?
இனி உங்கள் ராகவபிரியனின் வரிகள்..
தீபத் தூணை அளவைக்கல்லெனச் சொல்லுதல் நீதியோ
இல்லை உங்கள் தோல்வி பயத்தின் வயிற்றுப் பேதியோ...
எத்துனை பாரிக்கேட் இட்டாலும் தீபம் ஏற்றாமல்
ஓயுமோ....எங்கள் உரிமை சாகுமோ..
ஜெய் மாகாளி... ஜெய் பாரத் மாதா...வெற்றிவேல் வீரவேல்..



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...