Friday, December 12, 2025

 உலகளாவிய வாசகர்களே..

உங்கள் மீதான
என் நம்பிக்கை
அந்தகப் புழுவென
மண்கூட்டிற்குள் கிடக்கிறது..
சுற்றிச் சுற்றிப் பறந்து
உதாசீனக் கொடுக்குகளால்
அவ்வப்போது குத்திக்குத்தி
வளர்த்து உருவாக்கிவிட்டீர்கள்..
சின்ன சிறகுவிரித்து
முக நூல்
மண் குகைக்குள்
பறந்து திரியும் கலையை
சுமாராகக்
கற்றுக் கொண்டுவிட்டேன்..
அத்தனைச் சிறிய
குகை வானில்
எத்தனை நிலவுகளை
மார்க்கின் ஒரு முறை
சுற்று அனுமதியில்
தொட்டுத் திரும்பினேன்
தெரியுமா..?
ராஜாளிகளுக்கு
சிலை செய்யும்
உங்கள் கைகள்
நாளை
இந்தச் சின்னக் குளவிக்கும்
மெழுகுச் சிலையொன்றையாவது
வடித்தமைக்குமென அறிவேன்..
அறிவீர்களா
ராஜாளியின் சிறகுகள்
அதை நிலா வரை
எடுத்துச் செல்லும்
வலிமையற்றவை.. என்பதை..
ஆனால்
உங்கள் மீதான
என் நம்பிக்கை குளவியின் சிறகுகள்
உங்களை ஒரே தாவலில்
எட்டிப் பிடிக்கும் வலிமை உள்ளவை..
ஏனெனில்
நீங்கள் தானே
அதனின் வானத்து நிலா...
ராகவபிரியன்






No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...