Tuesday, December 16, 2025


 திராவிடவியல் என்பது நமது பண்டைய தமிழர் பண்பாட்டுவியலில் இருந்து இந்தத் தலைமுறையை விலகிச்செல்ல வற்புறுத்துகிறது..மார்கழியின் முக்கியத்துவத்தை அந்தப் பாரம்பரிய தமிழரின் பண்பாட்டு நீட்சியை ஆங்கில வருட இறுதியாண்டென்றும் இந்து தெய்வீக பணிகளைவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான முக்கியத்துவமளித்தும் சிதைக்கிறது. இன்றைய தலைமுறை மார்கழி விடியலில் உறக்கத்திற்கு முக்கியம் தரவேண்டுமென கற்பிக்கப்படுகிறது. திராவிடவியல் இன்றைய தலைமுறைத் தமிழர் பண்பாட்டைச் சிதைத்து ஆங்கில மற்றும் இஸ்லாமிய கலப்பு வாழ்வுமுறையைப் புகுத்தும் உத்திகளை வலிமையாக பின்பற்றுகிறது..

தமிழக வீட்டு வாசல்களெங்கும் விடியலில் ஆக்கிரமித்திருக்கும் பிருமாண்ட வண்ணக் கோலங்கள் சுருக்கப்பட்டுவிட்டன. தெருவில் குப்பை தின்னும் மாடுகளின் சாண வாசம் மனித மலத்தின் வாசத்துடன் இணைந்து வீசுவது பண்பாட்டுவியல் சிதைவின் வாசமாகிப் போனது. அதன் பொருட்டே பரங்கி பூசணி பூக்களுக்கான பீடங்களாகும் மாட்டுச் சாண உருண்டைகள் தமிழர் கைகளால் இப்போது தொடப்படுவதேயில்லை..
விடியலில் குளித்து நீண்ட கேசத்தின் ஈரம் சொட்டும் தலையில் துண்டு சுற்றி கோலமிடும் பெண்களைக் காண பனியில் நனையும் இளைய தமிழ் இளைஞர்கள் இப்போதெல்லாம் வெளி நாடுகளுக்கு துரத்தப்பட்டு விட்டார்கள்.. அவர்கள் சுருட்டி எடுத்துச் சென்ற பண்பாட்டு பாயின் தடங்களில் மார்கழி விடியலில் திராவிடவியல் டாஸ்மாக் வெளிக்கொணர்ந்த வாந்திகள் ஆக்கிரமித்து அருவருப்பூட்டுகின்றன. அருவருப்பூட்டும் உத்திதான் சிதைக்கும் சுத்தியலடியென அதிகாரக் கைகளில் சுமந்து திரிகிறது திராவிடவியல். பண்டைய பண்பாட்டின் மேல் பாசம் கொண்ட தமிழன் அத்தடத்தின் மேல் கால் வைக்கக் கூச்சப்படுகிறான். அதனால் தான் அவன் மார்கழிவிடியலில் ஆதவன் வந்தபின்பே விழித்தெழுகிறான் அல்லது தொடந்து உறக்கம் கொள்ள தூண்டப்படுகிறான்.
பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய கோவில் கலாச்சார பண்பாட்டுச் சிதைவு திணிப்புகளையும் மீறி மீந்திருக்கும் ஒன்றிரண்டு கிராமத்துக் கோவில் வாசல்களில் தமிழ் பண்பாட்டு வெண்பொங்கல் கலப்படமற்ற பசுநெய் ஒழுக கொடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதில் மிருகக் கொழுப்பைக் கலக்கும் திராவிடவியல் உத்தி கொடுத்த அச்சம் அதனை தமிழன் வாங்கவிடாமல் விலகிச் செல்ல வைப்பதிலிருந்து இன்றைய தமிழ் மார்கழியின் பண்பாட்டு விலகலின் தூரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
என்ன செய்வது தூரங்களைக் கடந்தபின்பு தான் அவ்விடத்தை இணைக்கும் திட்டங்களைத் தீட்ட இயலும்.. விரைந்து விலகிச் சென்றுகொண்டிருக்கும் நம் தமிழர் பண்பாட்டை மீண்டும் இம்மண்ணில் கட்டி நிறுத்த வேண்டுமெனில் போலி திராவியலைப் புறந்தள்ளியே ஆகவேண்டும். இந்த மார்கழியில் விடியற் காலையில் கண்விழிப்போம். விடியாத போலி திராவிடத்தைத் துரத்தும் மாற்றம் நோக்கி பார்வை நோண்பும் பாவை நோண்புமிருப்போம்.
ராகவபிரியன்..



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...