Friday, December 19, 2025

 இன்றைய விஜய்யின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. அது மட்டுமல்ல ஐஆர்எஸ் படித்தும் அதிகாரப் பசி போதாமையால் நடிகர் கூட்டத்தைக் கண்டு மேலதிக அதிகாரம் தின்ன நினைத்து சேர்ந்திருக்கும் திரு அருள்ராஜ் அவர்களின் உரை மிக மிக அபத்தமாக இருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு வரை அதாவது பாண்டி கூட்டம் வரை விஜயின் பேச்சிலும் அவரைத் தவறாக வழி நடத்தும் நிர்வாகிகளின் பேச்சிலும் இவ்வளவு ஆணவம் தெறிக்கவில்லை...இப்போது மட்டும் ஏன் எனப் புரியவில்லை..
செங்கோட்டையன் அரசியல் பழிவாங்க சேராத இடம் சேர்ந்திருக்கிறாரோ எனும் சந்தேகம் ஊர்ஜிதமாவது போல் புரிந்துகொள்ள முடிகிறது..செங்கோல் என்பது நீதி வழுவாத ஆட்சியின் அடையாளம் எனும் குறியிடு இப்போது உங்களுக்கு நாங்கள் நிரந்தர அடிமைகள் எனக் காட்டும் அடையாளமாகி நீண்ட காலங்கள் ஆகிவிட்டன..
எம்ஜியாரும் விஜயகாந்தும் அரசியலுக்கு வருவதற்கு முன்னும் கூட அவர்களைத் தேடி வந்தவர்கள் அத்துனை பேருக்கும்உணவளித்தவர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல்..ஆனால் விஜய்யைக் காணக் கூடும் கூட்டம் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்காமல் சுருண்டு விழுவதை எங்கு போய் சொல்வது..
சினிமா வருமாணம் ஆண்டிற்கு 500 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார் விஜய்.. யாரோ அரசியலுக்கு வந்தால் ஆண்டிற்கு 500000 கோடி வருமாணம் வருமெனச் சொல்லி தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்...
விஜய்யைக் காண அவர் வீட்டின் முன் கூடியிருக்கும் கூட்டத்திற்கு ஒரு வேளை உணவு கூட வேண்டாம் ஒரு தம்டீ கேண் வைக்க வேண்டாம் ஒரு மினரல் தண்ணிர் டேங்காவது வைத்திருக்கிறாரா...? அரசியலுக்கு வந்த பிறகாவது..
கடும் பஞ்சத்தில் மதுரை மக்களுக்கு தன் சொத்துக்களை விற்று 13 மாதங்கள் உணவளித்து ஆங்கில ஆட்சியையே மிரளவைத்த குஞ்சரத்தம்மாள் இவர்களின் கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாதது விஜய்க்குத் தெரியவில்லை...போலும்...அல்லது அவரை வழி நடத்துவோருக்காவது தெரியுமா எனவும் புரியவில்லை...
விஜய்க்கு நல்ல வழிகாட்டிகளே கிடைக்கவில்லை என்பது நாஞ்சில் சம்பத் சேர்ந்த போதே தமிழக மக்களுக்குப் புரிந்துவிட்டது. விஜய்க்கு மட்டும் இன்னமும் புரியவே இல்லை என்பது பாண்டியில் ரேஷன் கடைகள் இல்லை எனும் அவரின் கூற்றில் உலகத் தமிழ் மக்களுக்குப் புரிந்துவிட்டது..
2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக மற்றும் பாண்டிச்சேரி மக்கள் அவருக்கு ஒரு சரியான வழியை காட்டுவார்கள்..என்பது மட்டும் நிதர்சனமாகப் புரிகிறது..
ராகவபிரியன்



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...