வறுமையில் செம்மை.. சிறுகதை.. ------------------------------- [ இந்தக் கதை தொன்னூறுகளில் உதயம் பத்திரிகைக்காக எழுதியது.. அதன் நகல் கிடைக்கவில்லை.. நினைவிலிருந்து இப்போது மீண்டும் எழுதியிருக்கிறேன்.. விஜயதசமிக்காகவும்... உலகளாவிய வாசகர்களுக்காகவும்..] பாலுவின் பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். பாலுவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. அவனிடம் டிக்கெட் இல்லை. ஆனால் இரண்டு பேண்ட் பாக்கெட்களிலும் தங்கத் தாலி வில்லைகள் இருக்கின்றன. ஒரு பாக்கெட்டில் எப்படியும் இருபது இருக்கும்.. ஒரு வில்லை நாலு கிராம். அப்படியென்றால் என்பது கிராம் எவ்வளவு இருக்குமென கணக்குப் போட்டான்.. இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.. மனக் கணக்கை நிறுத்தினான்.. இதய வேகம் சீரானது. மதியம் வயலில் இருந்து சாப்பிட குடிசைக்கு வரும் போது தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தாக வேண்டும்..அப்போது சாலையோரம் இந்தத் தங்கத் தாலி வில்லைகள் கிடைத்தன.. இரண்டு நெகிழிப் பைகளில் ரோஸ்கலர் பேப்பர் சுற்றிக் கிடந்தன.. குடிசைக்கு வந்துவிட்டான்..தங்கத் தாலி வில்லைகளை கையில் வாங்கிய நிலவழகிக்கு முகமெல்லாம் சிரிப்பு.. அய்யா.. அய்யனாருக்கு பொங்...