நிறைய துவக்குகள் கடல் பரப்பு வெளியில் தள்ளப்பட்டுவிட்டன..
1. தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்..[ இன்னும் இரண்டு பதிவுகளில் முடித்துவிட எண்ணி இரண்டு முறை காஞ்சி டு திருச்சி மகிழுந்து பயணம்]
2. கீதைச் சொல்லும் கதை சொல்லியும்... [ ஆன்மீக பின் நவீனஅபுனைவு கட்டுரைகள்]
3.பூமிதேவி பின் நவீன கவிதைகள்..[ ஆச்சாரியர் நிகம்மாந்த மஹா தேசிகரின் பூஸ்துதியின் சம்ஸ்கிருத பாடல்களை என்னளவில் பின் நவீனத்துவ மேலைக்கவித்துவம் கலந்த தமிழ்ப்படுத்தும் முயற்சி]
4.ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6.
5. இந்திய கிராமிய பொருளாதார வெற்றி..[ மைக்ரோ எகனாமிக்ஸ் கூறுகளை உள்ளடக்கிய பொருளாதார கட்டுரைகள்..]
6. மேஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதைகள்..
இத்துனை நாவாய்களையும் இழுத்து கரையில் போலார்டுகளில் பிணைத்துக் கட்டியாகிவிட்டது.. இனி தொடங்குதல் அவ்வளவு சுலபம் அல்ல... ஈவெரா அறிவுலக ஊழல் தந்த அதிர்வு முழுமுதற் காரணி.. எனினும் எழுத்து மீன்களை வாசக அறிவுப்பசியாற பிடித்து வரவேண்டிய கடமையால் கட்டவிழுந்தே ஆக வேண்டும்.. அதுவரை சுருக்கு வலையைத் தடை செய்தாலும் மடி வலை அல்லது நிலைவலையை மற்றும் அதன் முடிச்சுக்களை இறுக்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் அறியேன் அரங்கனே...
ராகவபிரியன் தேஜஸ்வி.

Comments
Post a Comment