Posts

Image
  வாழ்வின் அந்திமங்களில் அன்றாடங்களின் தொய்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.. தொய்வற்ற அன்றாடங்களில் இவனின் மிதிவண்டி ஐந்தாறு கி.மி. தூரம் கடத்திச் சென்று தேனீர் அருந்த வைத்ததை இவனின் கால்களே இப்போது நம்புவதில்லை.. வாடிக்கையாய் உதிக்கும் காலைக் கிரணங்கள் உள் நுழையவியலா காஞ்சி வசிப்பிடத்தின் காலைப் பாயின் சுருள் ஏழு மணிவரை இவனை விடுவிப்பதில்லை.. சுய தேனீர் தயாரிப்பின் நுண்ணிய சுவை கூட்டும் கலையும் இவனிடமிருந்து எட்டியே நிற்கிறது.. குருதிச் சர்க்கரை அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் இவனின் நிகழ் அன்றாடங்களின் திடத்தன்மையை சோதித்தபடி இருக்கையில் தொய்வுகளை அகற்றவியலவில்லை.. காலையின் அவசரங்கள் பெயர்த்திகளுக்காக வயோதிகத்தையும் விரட்டுவது கலாச்சார மாறுதல்களென கடந்து விடுவதும் சாத்தியமற்றது.. காவிரி நீரின் சுவை கலந்த தேனீருக்காக விடிந்ததிலிருந்து ஒன்பது மணிவரை காத்திருக்கிறது சுவை துறவற்ற நாவு. துறவு மேற்கொள்ளச் சொல்லி மினரல் வாட்டர் சுவைகலந்த தேனீர் இஞ்சியெனும் முஷ்டி மடக்கி நாவின் முகத்தில் ஓங்கி ஒர் குத்து விடுகிறது.. திகைத்த நாக்கு காவிரிக்கும் காஞ்சிக்குமிடையிலான தூரத்தை தேனீர் சுவைகளின் இடைவெ...
Image
  கீதைச் சொல்லும் கதை சொல்லியும்..4 சொல் அது சென்றடையும் காதுகளுக்குள் நுழைவது வீசப்பட்ட விசையைப் பொறுத்தது.. கீதையின் சொல்லும் கதைகளுக்கான சொல்லும் கூட வலிமையாக வீசப்பட வேண்டும்..கீதையின் சொல் வாழ்வின் போர்களமொன்றில் வீசப்பட்டதால் சதா மரணமின்றி மிதந்து கொண்டே இருக்கிறது.. கர்ண பரம்பரைக் கதைகளின் சொற்கள் வாழ்வியல் தத்துவங்களைத் தாங்கி நிற்பதால் தான் கால மாற்றத் தாக்குதல்களைத் தாங்கி உலகின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிது.. கீதையின் சொற்கள் மாற்றமுடியாதவை. ஒவ்வொரு சொல்லையும் உடைத்து இடம் பொருள் ஏவல் எனும் இடங்களில் பொருத்தினாலும் கச்சிதமாகப் பொருந்தும் நெகிழித் தன்மை தீரா வியப்பைத் தரும்.. ஆனால் கதை சொல்லும் சொற்கள் மரபு புதுமை நவீன பின் நவீன உப்புக் காகிதங்களால் தேய்க்கப்பட்டு உருமாற்றம் கொண்டிருக்கின்றன.. அத்தகைய பின் நவீனத்துவ சொற்கள் கோர்த்து வாசகர்களை நோக்கி வீசப்படும் கதைக் கம்மல்கள் முக நூல் சாலையோர நெகிழி அட்டைக்குள் அடைக்கப்பட்டு கூவிக் கூவி காதுகளைத் தேடுவது காலத்தின் அவலம்.. பின் நவீனத்துவ சொற்கள் மொழியின் எல்லைகளை உடைக்க வேண்டும்.. அதிகாரத்தின் மையங்களைக் கேள்விக்குள...
Image
  அசிதங்களின் நிறுத்தவியலா நர்த்தனம் ------------------------------------------------------ பளிங்குப் பாத்திரங்களின் மௌன உடைப்பில் அல்ல... குப்பைத் தொட்டியின் விளிம்பில் வழியும் அழுகிய பழத்தின் ஈரம் தரும் பச்சை நிறப் பூஞ்சணத்தில் துவங்குகிறது.... என்னின் இந்தப் புதிய அழகியல்.... நீங்கள் செப்பனிட்ட ஒழுங்கின் முகமூடிகள்... என் கவிதையின் தார்ச்சாலையில் கரைந்து வழிகின்றன.... பூட்டப்பட்ட அருங்காட்சியகத்தின் பரிசுத்தமான சிலைகளை விட... கைவிடப்பட்ட கட்டிடத்தின் சுவர்களில் மழைக்காலம் வரைந்த ஈரக்கசிவின் கோணல் கோடுகளே நம் எல்லோரிடம் உரத்து குரலெடுத்து எதிர் அழகியல் மொழியில் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.. வடிவங்களின் சிறையிலிருந்து வார்த்தைகளை விடுவித்துப் பாருங்கள்.. இலக்கணத்தின் கழுத்தை நெரித்து பிய்ந்துபோன காலணியின் திறந்த வாயிலிருந்து வழியும் புழுதியின் மொழியில் புதிய பிரபஞ்சத்தை எழுதத் தொடங்குங்கள்.. எதிர் அழகியலின் செளந்தர்யப் பேரழகு சிகரம் தாண்டியும் மேலெழும்பி மஞ்சள் சிவப்புடன் ஒளிர்வதைக் காணலாம்... சீரான இசை வண்டுகளின் ரீங்காரத்தில் உதித்ததல்ல என் ஆன்ம ராகம்.. நடுநிசிப் பெருநகரத...
Image
  பூமிதேவி பின் நவீன கவிதைகள்...3 மனித மனம் விசித்திரமானது அன்னையே.. ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இப்படித்தான் தொடங்குகிறார் இந்தப் பாடலை.. தனக்கு இன்பம் தரும் தீமையானவற்றைக் கூடச் செய்யச் சொல்கிறது மனம்.. ஆனால் பகுத்தறிவும் உன்மீதான பக்தியும் உள்ள மனம் அது தீமை என்று எடுத்துச் சொல்கிறது..ஆனாலும் சிற்றின்பம் தரும் சுகத்திற்காக செய்யும் தீமையை எதோ நன்மை செய்வதாகத்தான் என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன்.. சில நன்மைகளையும் உன் அருளால் இந்த அடியவனால் செய்ய முடிகிறது.. ஆனால் அதிலேதோ தவறு இருப்பதான குற்றவுணர்வும் உடனேயே உருக்கொள்கிறது.. பெருமழையில் அரசமரத்தடியில் துளசியுடன் விஷக் காளாண்களும் முளைவிடுவது போல் அறியாமை என்னை ஆட்டிப் படைக்கிறது.. தீமையை நன்மையென நம்பச் சொல்லும் மனதின் ரேஷனலைசேஷன் அதாவது தற்காப்பு மனநிலை சதா இம்சித்திக்கொண்டே இருக்கிறது.. இதைத்தான் ஆச்சாரியர் தனது பூஸ்துதியின் மூன்றாவது பாடலில் சொல்கிறார். அந்தப் பாடலை என்னளவில் பின் நவீன பாணியில் தமிழில் தருகிறேன்.. இது மொழி மாற்றமோ மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ இல்லை... நித்யம் ஹிதாஹித விபர்யய பத்த பாவே த்வாத் வீக்ஷணைக விநிவர்...
Image
  நண்பர்களுக்கும் உலகளாவிய வாசக சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்.. என்ன ஆயிற்று மேட்டா என் பதிவுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்கவில்லையா.. உங்களின் மேலான ஆலோசனைகள் இன்றி எப்படி நோபல் நோக்கி இலக்கியத்தில் இயங்குவது சொல்லுங்கள்.. தமிழுக்கு நோபல் வேண்டுமா வேண்டாமா... இந்த ஆண்டும் இலக்கிய நோபலுக்கு தமிழ் மொழியாக்கங்கள் எதுவும் குறும் பட்டியலில் இல்லை.. இப்போது அச்சு மூலம் ஆக்கங்களை வெளியிடுவது சுலபம்..ஆனால் உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம்.. மின்னணு ஆக்கங்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கின்றன.. உங்கள் பார்வையில் படுகிறதெனும் பதில் ஒற்றை இலக்கமெனினும் அது தரும் ஊக்கத்தின் அடர்வு இணையற்றது.. தொடர்ந்து இயங்கலாமா எனும் கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. வேண்டாம் நிறுத்திக்கொள் என்றால் அதை உரத்து இங்கே சொல்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் மீண்டும் காலை வணக்கங்கள்.. தயவு செய்து உங்களின் கள்ள மெளனத்தைக் கைவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. அன்பன்..உங்கள்..ராகவபிரியன்
Image
  ஓய்வறைப் பேய்கள்.. சிறுகதை.. அது ஒரு கிராமத்தின் தொடர்வண்டி நிலையம்... கிராமம் என்றால் ஆகச்சிறிய கிராமம்..அதாவது மூன்று நான்கு வீடுகளே உள்ள கிராமம்.. அவசரத்திற்கு தேனீரோ சிற்றுண்டியோ தலைவலி மாத்திரையோ இல்லை வேறு எதுவானாலும் வாங்க இருபது கி.மீ தொலைவில் உள்ள நகரத்திற்குத் தான் செல்ல வேண்டும்.. பகல் பணி முடித்த அதிகாரி இரவு நிலையத்திலேயே தங்கியாக வேண்டும்.. பிரேம் சந்த் பகல் பணி முடித்துவிட்டார். இரவுப் பணிக்கு வந்த அதிகாரி தெய்வாம்சம் நிறைந்தவரென பெயரெடுத்தவர்.. கெட்டப் பழக்கம் சிறிதும் இல்லாதவரென்றும் அறியப்பட்டவர்.. ஆனால் பிரேம் சந்திற்கு பணி முடித்து ஓய்வெடுக்கும் முன் ஒரு குவார்ட்டர் சரக்கும் இரண்டு புரோட்டாக்களும் உள்ளே சென்றால் தான் உறக்கம் வரும்.. அன்று இரவு தொடர் வண்டிகள் ஒன்றும் இல்லை என்பதை தெய்வீக அதிகாரி தெரிந்து கொண்டார்.. பிரேம் சந்த்.. இந்தாங்க.. வெயிடிங்க் ரூம் சாவி.. ப்ளாட்பாரத்துல படுக்காதீங்க.. டேக் ரெஸ்ட்.. குட் நைட்.. சொல்லிவிட்டு வழமை போல் சுவரில் மாட்டியிருந்த சரஸ்வதி காந்தி மற்றும் அம்பேத்கார் படங்களை கழற்றி தன் டேபிளில் வைத்தார்.. ஏற்கனவே வாங்கி வந்த பூக்க...
Image
  கீதை சொல்லும் கதை சொல்லியும்...3 ------------------------------------------------- சினிமாவும் அரசியலும் தமிழகத்தின் மாய யதார்த்த போலிமைகளும் பூக்கோவின் அதிகாரக் கோட்பாடுகளின் படிமங்களும் பிரமிக்க வைக்கின்றன.. தமிழகத்தின் பொதுப்புத்தியை வடிவமைப்பதில் சினிமாவும் அரசியலும் இரண்டு பிரிக்க முடியாத, ஒன்றையொன்று விழுங்கும் பெருங்கனவுகளாகத் திகழ்வதை மறுதலித்தல் கடினம்.. பின் நவீன பார்வையின் கோணத்தில் பார்த்தால்...இவை வெறும் ஊடகங்களோ அல்லது அதிகார அமைப்புகளோ அல்ல..மாறாக கூலிக்காக மாரடிக்கும் மரணவாசல் கூச்சல் போலத்தான் தோற்றமளிக்கின்றன... அதையும் தாண்டி இவை மக்களை ஒரு தொடர் ‘போலிமை மற்றும் அதி யதார்த்த நிலைக்குள் சிறைவைக்கும் மாய உலகங்களென மக்களை நம்பவைப்பதுதான் காலத்தின் கொடும் துயரம்.. பிரெஞ்சு தத்துவஞானி மிஷெல் பூக்கோ அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தில் அரசின் கைகளில் மட்டும் குவிந்திருக்கும் விளக்கு தேய்க்க வெளிவந்து கேட்டதைக் கொடுக்கும் அல்லாவுதீன் பூதம் போன்றதல்ல.. அது சமுதாயம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு சாமான்ய மனிதனின் நிஜம்மான யதார்த்தமான எல்லோருக்குமான வாழ்விட வாழ்விய வள...