கிளிஞ்சல்கள் எனும் சினிமாபடம் சமூக ஒற்றுமை யின்மையை வாழைப் பழத்திற்குள் ஒளித்து வைத்த மருந்து போல் கொடுக்கப்பட்ட ஒன்று. கல்லூரி செல்லும் அவசரத்தில் ஈரத்தலையுடன் வரும் பூர்ணிமாவிற்கு ஜுரம் வந்துவிடுமோ எனும் அக்கரையை மோகன் காட்டுவது மானுட நிஜ அக்கரையுணர்வைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஈரத் தலையைத் துவட்டாமல் காதலி வருவதை காதலன் ரசிக்கத்தான் செய்திருப்பான். பிறகு ட்ரையர் கொண்டு உலர்த்த முடியுமா எனும் உங்கள் கேள்வி மானுட அக்கரைக்கான அளவு கோலுக்கு விடப்பட்ட சவால். அதுமட்டுமல்ல உண்மைக் காதலன் காதலியின் ஈரத் தலையை விசிறி விசிறியே காயவைத்துவிடுவான் என்று கூட சினிமா உண்மைக் காதலை உருவகப் படுத்திக் காட்டும். அவ்வளவு வலிமை மிக்க ஊடகம் அது. அதில் மோகன் இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள குடும்பத்துப் பையன். பூர்ணிமா ஜெயராம் கிறிஸ்துவப் பெண்.. தனது காதல் நிறைவேறப் போவதில்லை என்பது தெரிந்தவுடன் ஆணியை உள்ளங்கையில் தானே அடித்துக்கொண்ட பெண் ஏசய்யாவாய் காதலுக்காக மதத்தைத் தியாகம் செய்வதாய் காட்டப்ப்பட்டிருக்கும். இங்கே மதம் மாற்றும் உத்தியான மருந்து கிறிஸ்தவம் நிஜம் என்றும் இந்துமதம் போலி ...
Posts
பூமிதேவி பின் நவீன கவிதைகள்..2 நித்ய கர்மா கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று. அதன் அதிமுக்கிய பகுதி காயத்திரி ஜபம்.. அந்த காயத்திரியை விட புனிதமானது வ்யாஹ்ருதி. வ்யாஹ்ருதியை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.. வ்யாஹ்ருதி எனும் மந்திரவியலின் சொற்பிறப்பியல்கள் வியப்பிற்கு உரியன. பூ புவஸ் சுவஸ் எனும் இந்த மூன்று சொற்களும் நான்கு வகையான பூ என்பது பூமி. புவஸ் என்பது வானம். சுவாஸ் எனில் இன்னொரு உலகம்.. இது வ்யாஹ்ருதி எனும் ஒரு சொல்லில் அடங்கிவிடுவது வியப்பின் உச்சம். அதனால் தான் காயத்திரி மந்திரத்திற்கும் மூத்த மந்திரச் சொல் வ்யாஹ்ருதி.. பூ எனும் முதல் எழுத்து பூமிதேவியைத்தான் உணர்த்துகிறது.. ப்ரணவம் எனும் ஓம் அரங்கனையே குறிக்கும் அற்புத சொற்பிறப்பியலின் ஊற்றுக்கண்.. இப்படியான வ்யாஹ்ருதியிலும் காயத்திரியிலும் முதலிடம் பெற்ற பூமிதேவியைப் பற்றி ஆச்சாரியன் நிகம...
எதைச் சொல்வதென்று புரியவில்லை. காலத்தின் துருப்பிடித்த பிசிறொன்று இதயத்தைக் கீறிவிட்டது. எப்போதோ தான். ஆனால் இப்போதும் ரத்தக்கசிவு நின்றபாடில்லை. பணிக்காலத்தில் பட்ட கீறல் காயம். அதனால் ரயில்பயணங்கள் தவிர்க்கப்பட்டன. மகிழுந்துவை இயக்க கால்கள் இப்போது ஒத்துழைப்பதில்லை. பயணத்திற்கான முன்பதிவு செய்தாகிவிட்டது. ரத்தச் சொதப்பலால் எது பயணத்தேவை எது பயணத்தில் தேவை என்பது மனக் கீரிப்பிள்ளையாய் தோன்றி ஒரு நொடியில் மறைந்து விடுகிறது.. எதையும் இப்போது இதயம் சரியாகக் காட்டுவதில்லை. கைபேசி தகவமைப்பில் படுக்கை எண்.. பெட்டி எண்..இன்னபிற எல்லாம் முன் கூட்டியே காணத் தருகிறார்கள்.. பயண உணவு வேண்டுமா? வேண்டாமா? எனும் மிரட்டல் குறிப்பு வேறு அருகில் மின்னுகிறது.. பணிகாலத்தில் பயணிகள் சூழ்ந்து கொண்டு எந்த நடைமேடை? வண்டி எப்போது வரும்?. இப்போது எங்கிருக்கிறது? இஞ்சினிலிருந்து எத்தனையாவது பெட்டி? எனக் கேள்விகளால் நிலைய அதிகாரியைத் துளைத்த காலத்தின் இரும்பாய் கனத்த கேள்விகளை பழைய இரும்புக் கடையில் போட்டாகிவிட்டது. அப்போது குத்திய பிசிறின் ரத்தக் கசிவால் இப்போதெல்லாம் நிலையத்திற்கு மட்டுமல்ல...நிலைய அதிகாரி அறை...
என்ன வடவாளி கிருட்டினரே ஏன் சபைக்கு இவ்வளவு தாமதமாக வருகிறீர்.. கடும் கோபத்தில் கொந்தளித்தார் ராமதேயராயர். சபையில் பதுங்கிப் பதுங்கி தன் இருக்கைக்கு வந்ததை ராதேரா ர் பார்த்துவிட்டதைப் புரிந்து கொண்ட வகி நிமிர்ந்து நின்றார். பேசத் தொடங்கினார்.. மன்னித்து விடுங்கள் அரசே... நிகம சர்மாவின் இறுதிசடங்கில் அரசு மரியாதைச் செலுத்த தாங்கள் தானே என்னை நியமித்தீர்கள்.. அது நேற்று.. நேற்றே நைஸாக உத்தியோக கணக்கில் வீட்டிற்குச் சென்றுவிட்டீர்கள்.. இன்றும் தாமதமாக வந்துவிட்டு அதுவும் வாசலில் நின்று உள்ளே வரலாமா என்று அனுமதியும் கேட்காமல் பதுங்கிப் பதுங்கி இருக்கை வரை வருவதை எந்த அரசனும் பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அறிவீர்கள் தானே.. நன்றாக அறிவேன் அரசே.. சொல்லிக்கொண்டே தன் கைபேசியைத் திறந்து ஒரு நொடி கூர்ந்து பார்த்தார்.. இருபத்து நான்கு மணி கடந்தும் போதிய லைக்குகளோ கமெண்ட்டோ இல்லை ஒரே ஆச்சர்யம் அவருக்கு.. நிகமசர்மாவை அழைத்துச்செல்ல வந்த எமதூதர்களுக்கும் வைகுண்டத்திலிருந்து வந்திருந்த விஷ்ணு லோக ரெப்ரசண்டேடிவ்களுக்குமான ஆர்க்யூமெண்டை அட்டகாசமான தெலுங்கில் முக நூலில் பதிவு செய்திருந்தும் கூட ...
பூமிதேவி பின்நவீன கவிதைகள்.. காவல் எனும் தொழில் பொறுமையின் உச்ச நிலையைக் கோரும் சோதனைக் களம். வைகுண்ட வாயில் காப்போர்கள் பொறுமையிழக்கிறார்கள்.. சனகாதி முனிவரின் சாபம் அவர்களை அசுரப் பிறவிகளில் தள்ளிவிடுகிறது.. அவர்களில் ஜெயன் ஹிரண்யாட்சனாக பிறப்பெடுக்கிறான். பலம் பெற்றவர்கள் மதியிழந்துவிடுவார்கள் என்பது நியதி. அசுரபலத்தால் அதீத தவத்தால் தேவர் மனிதர் விலங்குகள் எதுவம் தனக்கு மரணம் தரும் வலிமையற்றிருக்க வேண்டுமெனும் வரம் பெறுகிறான். பொறுமையின் எல்லையான பூமியை பூமித்தாயை அவனால் வெற்றி கொள்ள இயலவில்லை.. சுருட்டி எடுத்து சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்தி விடுகிறான்..யாகத்தின் உருவாகி வெண்பன்றியென அவதரிக்கிறார் அரங்கன்.. அவர் சுருட்டப்பட்ட பூமியை மீட்டெடுத்தாக வேண்டும்.. பூமி அல்லது பூமிதேவி எப்படிப்பட்டவள் என ஆச்சார்யர் நிகம்மாந்த மஹாதேசிகர் பூஸ்துதியில் இப்படிச் சொல்கிறார்.. ஸங்கல்ப கல்ப லதிகா மவதிம் க்ஷமாயா: ஸ்வேச்சா வரஹ மஹிஷீம் ஸூலபாநுகம்பாம் விஸ்வஸ்ய மாதர மகிஞ்சந காமதேநும் விச்வம்பரா மசரண: சரணம் ப்ரபத்யே இப்பாடலை இந்த அரங்கனடிமை தன்னளவில் தமிழில் தர நேர்ந்தது அரங்கனின்...
நம் முன்னோர்கள் இந்தப் பூமியில் தான் எத்தனையோ யுகங்களுக்கும் முன் வாழ்ந்தார்கள்.. பூமியைப் பெண் என்று எல்லா இலக்கியங்களும் பேசுகின்றன. பூமிப் பெண் நிகரற்ற அழகுகொண்டவள் என்பது மறுக்க முடியாதது. அப்படியான அழகு நிறை பூமிப்பெண்ணை இரண்யாட்சகன் எனும் ராட்சஷன் கடலுக்கடியில் எடுத்துச் சென்றுவிடுகிறான்.. பெண்ணைக் கவர்ந்து செல்லும் எவனும் அரக்க குலத்தையும் அரக்க குணத்தையும் கொண்டவனாகத்தான் இருப்பான். பெண்மையைத் தவறாக பேசுபனும் ராட்சஷன் தான். அழகெல்லாம் பூரணமாய் உருக்கொண்ட பூமிப்பெண் திருவரங்கனின் மனைவி. பெரியபிராட்டி அரங்கநாயகியின் சகோதரி.. கடலுக்கடியில் தூக்கிச் செல்லப்பட்ட பூமியின் அலறல்கள் இன்றும்கூட அலைகளாய் கரையிலும் நம் மனதிலும் ஓயாது மோதிக்கொண்டே இருக்கின்றன. அன்று அண்டசராசரங்கள் கிடுகிடுக்க வைத்த ஊழித்தாண்டவ அலறலால் கொதித்தெழுந்த அரங்கன் யக்ஞவராக அவதாரம் எடுக்கிறான். தன் முகத்தின் நீண்ட தந்தப் பற்களால் பூமிதேவியைக் காப்பாற்றி மீட்டெடுக்கிறான். அதனால் தான் இன்றும் நம் பூமித்தாயின் குழந்தைகளான நாமும் கோடானுகோடி உயிரினங்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. புனிதமெல்லாம் நதியாகவு...
தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்.. 6 பயண கால தேனீருக்கான அடிப்படை ஆழ்மன உந்துதலை சாலையோர தேனீர்கடைகள் உற்பத்தி செய்யும் தேனீர் வாசங்கள் ஒரு கர்மாவென வழி நடத்துகையில் மகிழுந்துவை நிறுத்துதல் இச்சையற்ற அணிச்சையின் செயலாகிப்போகிறது.. திண்டிவனம் சாலையோர உணவகங்கள் நிரம்பி வழியும் ஊர்..இதற்கு வனமெனும் பின்னொட்டை எவர் சேர்த்திருப்பாரென யோசிக்கையில் ஆழ்மன உந்துதலை வழி நடத்தும் உயர்தர தேனீர் வாசமொன்று புறப்பட்டு முன் செல்லத் தொடங்கியது.. உயர் தர உணவகங்கள் காட்டும் உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்குமான இடைவெளிகளில் சிந்தை புகுந்து வெளி வந்தது.. தேனீரின் தரமதிப்பீடுகள் உணவக விளம்பர செல்வச் செழிப்பு காட்டும் உத்திகளில் இல்லை என்பதை புரிந்து கொள்ள சற்று அரிய பயண நேரத்தைச் செலவு செய்ய வேண்டியதானது.. உயர்தர உணவகங்களில் வெறும் தேனீர் மட்டும் அருந்தும் வாடிக்கையாளருக்கான அகமதிப்பீட்டின் அலகுகள் ஏற்கனவே அனுபவ ஏடுகளில் மீள் வாசிப்பிற்கு உள்ளானதால் நடுத்தர செல்வ நிலையைக் காட்டும் தேனீரகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் சுயமன இருண்மையை மீறிச் செயலாற்ற வேண்டிய சவாலாகத்தான் இருந்தது.....