Posts

Image
  At the ancient Juraheshwarar temple kanchipuram in view of pradosham now... இந்தக் கோவில் பொ.ஆ.பி 8 ஆம் நூற்றாண்டில் நரசிம்ம வர்ம பல்லவனால் கட்டப்பட்டது. இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரைவட்டக்கருவறை இக்கோயிலின் சிறப்பு. இந்தக் கோவில் கோபுரத்தில் நான்கு திறப்புகள் உள்ளன். ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திலும் நான்கு திறப்புகள் உள்ளன. இந்தக் கோவில் தீர்த்தம் ஒரு உத்தரணி சாப்பிட்டு அந்தக் காலத்தில் காஞ்சி வாழ் மக்களின் ஜுரம் தீர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையின் நீட்சியின் நிஜத்தை இன்று கண்முன்னே கண்டு மெய் சிலிர்த்து நின்றது நிஜம்.. ராகவபிரியன்
Image
  தொன்ம தேய்மான காலாச்சார தேனீரகங்கள்...1 நேற்றைய பயணம் காஞ்சியிலிருந்து மேற்கு மாம்பலம் வரை மகிழுந்து இட்டுச் சென்றதால் நிகழ்ந்தது. இதோ இப்போது நினைவுப் பாதையில் மீண்டும் மகிழுந்துவை இயக்குகிறேன். நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்திருக்காது எனும் அதீத மூட நம்பிக்கையுடன் இதே பாதையில் எண்பதுகளில் மிதிவண்டியில் பயணித்த பொழுதுகளையும் ஆங்காங்கே தூவியிருக்கிறேன். சட் டென எழும் திகைப்பில் தூவிய நினைவின் நிலத்துக் காட்சிகளை உடனே கூட்டி பெருக்கி தூர எறிந்துவிடுங்கள். ஏனெனில் பிறிதொரு நாளில் இதே வழியில் நீங்கள் பயணிக்கையில் உங்கள் காலில் அவை துருஆணியென பதிந்து விட நேரலாம். நீங்கள் இருசக்கர வாகனத்திலோ இல்லை காற்றடைத்த மீள்மன உருண்டை உந்தித் தள்ளும் வாகனத்திலோ பயணித்தால் உங்கள் மனமும் காற்றும் வெளியேகி பாதியில் நின்றுவிடவும் கூடலாம். எண்பதுகளில் வண்டலூரில் அருந்திய தேனீர் அதன் காலத்தை தொடர்ந்து ஆற்றினாலும் ஆறாத சுவையின் நீட்சியை இன்றைய தட்பவெட்ப உக்கிரத்துடன் நினைவில் கொணர்ந்தது. உக்கிரம் சூழலின் சாத்தியமென சார்த்தர் சொன்னது நினைவில் வந்து. அன்று வண்டலூர் வரை மிதிவ...
Image
  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பெயர்த்திக்கு ஐந்து வயது தான் ஆகிறது.. தலையில் விக் மற்றும் இன்ன பிற ஆபரணங்கள் கனக்க செயற்கை பின்னல் குஞ்சம் வைத்து பின் பக்கம் இழுக்க சற்றே வானம் பார்த்தபடி மேடையில் நின்றிருந்தாள்.. கீழ் பார்வையில் தாத்தாவைப் பார்த்துவிட்டாள்.. விருட்டென கண்ணிலிருந்து தாத்தாவுக்கும் பெயர்த்திக்கும் ஒரே நேரத்தில் கண்ணீர் துளிர்த்தது.. தாத்தா மெல்ல பெயர்த்தியின் குரு மேடத்திடம் செல்கிறார்.. வணக்கம் மேடம்.. வணக்கம் சார். உங்கள் பெயர்த்தியின் ஆட்டத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்களா.. ஆமாம் ஏன் இவ்வளவு அலங்காரம் குழந்தைக்கு.. பாருங்கள் அழுகிறாள்.. ஐயா.. பரத சாஸ்த்திரத்தில் துன்பமென்பது முகபாவத்தில் கொணரும் போது சுவை மிகுந்தது.. பாருங்கள் சர்வ அலங்கார குழந்தை அழுவதற்கும் சாதாரண குழந்தை அழுவதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கே தெரியும்.. மேடம்..நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவரா.. இல்லையே ஏன்.. அழகான வார்த்தைகளை அடுக்காக...உங்களைப் போல் சொல்ல வரவில்லை.. சூப்பரா சொன்னீங்க.. ஆமாம் பரத சாஸ்த்திரம்னு சொன்னீங்களே.. பரத முனிவர்னு ஒருத்தர் குடுத்ததுன்னு சொல்வாங்களே அதுவா.. ஐ...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம்..6/6 எங்கள் வானத்திலிருந்து அண்ணன் எட்டித் தள்ளியபோது எரி நட்சத்திரமென உதிர்ந்தேன்.. அப்போது உமிழ்ந்த வெளிச்சத்தைத்தான் என் அண்ணன் தன் கைமின் விளக்கில் சேமித்திருக்கிறான்.. ஓடத் துவங்கிய எங்கள் தொடர் வண்டியிலிருந்து என்னை மட்டும் வெளித்தள்ளினான் அண்ணன்.. சட் டென நின்ற வண்டிக்கு என் கையிலிருந்து பிடுங்கிய பச்சைக் கொடியைத்தான் வழிகாட்டி விளக்குகளைத் தொலைத்த இருப்புப் பாதையில் இன்னமும் கைவலிக்க வீசிக்கொண்டிருக்கிறான்.. எங்கள் கப்பலில் இருந்து நடுக்கடலில் ஒரு புயல் நாளில் என்னை மட்டும் வெளித்தள்ளிவிட்டான் அண்னன்.. ஓயாத சுனாமி அலைகளில் கப்பல் மூழ்கத் தொடங்கிய மெய் நிகர் வேளையில் எனது அவசரகால காபந்து படகின் இரும்புக் கயிறுகளை இன்னமும் அவிழ்த்துக் கொண்டிருக்கிறான்.. என் வெளிச்சத்தையும் என் தொடர்வண்டி இருக்கையையும் என் காபந்து படகையும் இன்னபிற என்னுடனான அழிக்கவியாலா நினைவுகளையும் சேமித்திருக்கிறது சிதைந்த எங்கள் புராதன வீடு.. அதைத்தான் அடையாளங்களைத் தொலைத்த அருங்காட்சியகமாக மாற்றி பார்வையாளர்களிடம் பணம் வசூலிக்கும் குத்தகைதாரராக மாறி சதா மீசையை முற...
Image
  நேற்றிரவு ஆழ்ந்த உறக்கத்தில் புறஉலகின் அதிர்வுகள் இவ்வெளியவனைத் தாக்கவில்லை. அகமெங்கும் சயனித்திருக்கும் அரங்கன் உடலை மெலிதாக அசைக்கிறான். விசிஷ்ட்டாத்வைதத்தில்.. விஷிட்ட ஏகங்கம் என்றே மானுட உடல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது அரங்கன் வேறு பக்தனின் மானுட உடல் வேறு எனும் பாகுபாடு வைணவத்தில் இல்லை. இதுபோன்ற ஆன்மீக தத்துவார்த்த புற எல்லைகளின் தாக்குதல்கள் வரையறை தாண்டி ஆழ்ந்த நித்திரையில் சில சொற்களை உதிர்கிறது.. ஆழ்மன உறக்கத்தில் அகமும் புறமும் பேசிக்கொள்வதை ப்ராய்ட் புதைக்கப்பட்ட ஆன்மீக உணர்வுகள் வெளிப்படுத்தப்படவியலாத புற உலகச் சூழலில் உறக்கத்தில் வெளிவந்து சொற்களாக இங்குமங்கும் நடக்கிறதென்பார்.. உடலெனும் இறை உறக்கத்தில் அதிர்வுகளை உள்வாங்காமல் கிடக்கிறது. விசிஷ்ட்டமெனும் அகத்திருக்கும் அரங்கன் சில சொற்களை உதிர்க்கிறான்.. அபிதீஸ்தவம் எனும் தேசிகரின் அற்புதமான படைப்பை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்..தற்கால ஆன்மீக எதிர்ப்பிருக்கும் சமூக யதார்த்தம் மானுட மனமெங்கும் பயத்தின் அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. புறப்பட்டு தேசிகர் கோவிலுக்கு வா. அவரிடம் அபிதீஸ்தவமெனும் விளக்க...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6/5 நீ இழந்தது உன் சொந்த வீடெனில் தொலைத்தது மகிழ்வையல்ல மாறாக துயரத்தை... கடற்பசுக்கள் ஒரு போதும் நிலத்தின் புல் நிறைந்த தொழுவங்களைத் தேடி வருவதில்லை.. பட்டுப் புழுக்கள் தன் வாழ்வை நெய்து வாழ்ந்து பின் தொலைத்த வீட்டைத்தான் நீ பளபளப்பாய் உடுத்துகிறாய்.. குளவிக்கும் குருவிக்கும் மட்டுமல்ல மானுட ஆன்மாவிற்கும் சிறகுகளின் ஆற்றலுண்டு.. அரசர்களின் அரண்மனைகளும் பணக்காரர்களின் மாளிகைகளும் குதிரைகளுக்கான தங்க முலாம் பூசிய லாயங்களும் அவர்களின்/அவைகளின் சொந்தமில்லை. நாடோடிகளைப் பார்.. அவர்களின் தங்குமிடங்கள் வீதிகளில் சாலைகளில் சுழலும் இப்பூமிப் பந்தின் வெட்ட வெளிகளில் ரயில் நிலைய மரநிழல்களில் பாலத்தடிகளில் நிறைந்திருக்கிறது.. பொழிமழை துறந்த புகைவேழ் குன்றத்து பழுமரம் தேடும் பறவை போல தம் வாழ்விடம் விட்டு அவர்கள் நகர்கையில் துயரைவிட்டுத்தான் நிரந்தரமாய் அகன்று போகிறார்கள்.. ஆறு கடலை நோக்கியும் நாடோடிகள் வாழ்வை நோக்கியுமே சதா நகர்ந்தபடியிருக்கிறார்கள்.. நகர்பவர்களின் வீட்டின் வாசற்கதவு திறக்கையில் இரவி உதிப்பான்.. அவர்களின் பின் இரவுச் சன்னல்கள் மூடுகையில...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம்..6 4. எங்கள் குடிசை விற்கப்பட்டுவிட்டது.. தந்தையின் ஓய்வூதிய பலன்களின் காசோலையை பத்து துண்டுகளாய் கிழித்திருக்க வேண்டும்.. விரல்களில் ஓரவஞ்சனை கத்தரியை வைத்து அண்ணன் மூன்றாக வெட்டினான்... முதலிரண்டு தங்கைகளின் திருமணச் செலவு போக.. காசோலையின் கீழ்பகுதியில் அப்பாவின் கையெழுத்து மட்டுமே எஞ்சியிருந்தது.. மீந்த சிறுதொகையில் பிய்ந்த கூரையுடனான குடிசையை அரசாங்க பதிவர் கூட பதிவு செய்ய மறுத்துவிட்டார். அந்த சொந்தக் குடிசைக்குள் எலிகள் தாராளமாய் வந்து போகும்.. காக்கைகள் சாதம் கொத்த சமையலறையிலேயே சுற்றத் தொடங்கும். வெயிற்கால விறகற்ற நாட்களில் கூரையைப் பிய்த்து எரிபொருளாக்கி பொங்கித் தின்றதும் உண்டுதான்.. அந்தக் குடிசைதான் விற்கப்பட்டுவிட்டது.. பிறப்போரன்ன உடன்பிறந்தோரின் பாசம் வேய்ந்த அக்குடிசையைப் பார்க்கத்தான் கால்கள் இன்று கடத்தி வந்திருக்கின்றன.. அங்குதான் இந்த இரும்பை வடித்தன்ன கருங்கைக் கானவன் தன் புல் வேய் குரம்பையை பொருத்தியிருப்பதால் நினைவின் கால மகிழுந்து அனுமதியின்றியே கடத்தி வந்து நிறுத்தியிருக்கிறது.. உள் நுழைய... சில்லென தலையில் விழுந்த அ...