Posts

Image
இன்றைய தமிழிலக்கிய பிராமணீய அவலங்கள் புதைக்கப்பட்டவை. புதையுண்ட எதன்மீதும் நியாயமான பார்வைகள் செலுத்தப்படுவதில்லை. இறந்த தலைச்சன் பிள்ளைக் குழந்தையின் பிணத்தின் மீதான மாந்த்ரீக பார்வையும் தமிழிலக்கிய இயங்கியல் பார்வையும் புதையுண்ட பிராமணீயத்தை தோண்டியெடுத்து மை தயாரிக்கவியலுமா எனப் பார்த்துக்கொண்டிருக்கிறது.. பிராமணர்கள் மீதான கி,மு ஒன்றாம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை ஊனக் கண்களின் குருட்டுப் பார்வை. அதை மார்க்ஸீய காலத்து தமிழிலக்கிய எழுத்துக்கள் அகழ்ந்தாராய்ந்து மீண்டும் இலக்கிய பிரிவினை மை பூசிய பொய்மெய்யியலை புகுத்தியது எழுத்திலயக்கிய கயமைத்தனமன்றி வேறென்ன?  வரலாற்றுப் பார்வையும் பொருளியல் பார்வையும் இருகண்களின் விழித்திரைகளிலும் பதிவாகும் ஒற்றை பிம்பமாகத் தானே இருக்கவியலும்.. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குடும்ப அமைப்பியலில் அடுக்குகளை உருவாக்கியது. அவ்வடுக்குகளின் மரணமற்ற ஜீவிதத் தன்மையின் நீட்சியே இன்றைய சாதீய கட்டமைப்பின் நிஜ உள்ளடக்கம். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வேதியல் மாற்றமே சாதீய பிரிவுகளின் சமூகப் படி நிலைகள்...இன்றைய இடஒதுக்கீட்டு பொருளாதர ஏற்றத்தால் சாதீய படி நிலை...
Image
  புரோகிதர் எனும் சொல் சம்ஸ்கிருதத்தின் கூட்டு உயிர்ச்சொல்.. புரோ...என்பது புற எனும் சொல்லின் திரிபு...இதன் பொருள்.. புறத்திருத்தல் அதாவது முன்னின்று வழி நடத்திச் செல்லுதல். சுருங்கச் சொன்னால் வழிகாட்டி.. கிதர்...எனும் சொல் ஹிதம் அதாவது துன்பத்திற்கான விடுதலை பாதையை நோக்கிச் செலுத்தும் தன்மை.. இதம் தரும் மனையின் நீங்கி என பாரதி சொல்லியிருக்கிறான்.. ஆகவே புரோகிதர் என்பவர் வாழ்வின் இயங்கியல் துன்பச் சிறைக்குள் சிக்குண்டவர்களை இன்பமெனும் விடுதலை நோக்கிய பாதைக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்பவர் என்பதே பொருள். புரோகிதர்கள் வழிகாட்டிகள் மட்டுமே... தலைவர்கள் அல்ல... சமூக அரசியலமைப்புக் கட்டமைப்பின் நிர்வாகத்தின் வழிகாட்டிகள் பெரும்பாலோர் தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள்.. அப்படியான தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்று அமைப்பின் இயங்கியல் தத்துவத்தை அவர்களின் சுய நலன் சார்ந்து வளைத்துச் செலுத்தும் அதிர்ஷ்ட சாலிகள் எனவும் சொல்லவியலும்.. தலைவர்கள் வேறு...அவர்கள் அதிகாரங்கள் வேறு.. புரோகிதர்கள் வேறு அவர்களுக்கு அதிகாரம் மட்டுமல்ல அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியான ஒன்று. அப்படியான புரோகிதர்கள் பிராமண...
Image
  தேங்காய்ப்பூ பட்ஜெட் துண்டு.. சிறுகதை யாழினி மாமி விடியற்காலையில் எழுந்து சுப்ரபாதத்தை ஒலிக்க விட்டாள்.. சுப்பையரின் விடியற்காலை கனவில் எப்போதும் நயன் தாராதான் வருவாள்.. ஆனால் இப்போது விக்னேஷ் சிவனுடன் நயந்தாராவிற்கு திருமணம் ஆகிவிட்டதால் பூஜா ஹெக்டே வருவதற்காக தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்... பட் சட் டென நிர்மலா சீத்தாரமன் கையில் அசோகச் சிங்க முத்திரையுடன் கூடிய சிகப்பு பைலுடன் இவர் வீட்டு டிவியின் எதிரில் அமர்வதை கனவில் அதிர்ச்சியுடன் பார்த்து அருகில் தடவிப் பார்த்தார்..யாழினிக்குப் பதில் அவரின் பர்ஸ் கையில் பட்டது.. விருட்டென எழுந்து உட்கார்ந்தார். கயிற்றுக் கட்டிலில் ஏதோ ஒரு பிரி அறுந்த சப்தம் கேட்டது.. கண்களை கசக்கிக் கொண்டு உள்ளங்கையைப் பார்த்தார்.. கண்களைத் திறந்தார்.. பூஜா ஹெக்டேவோ இல்லை சமந்தாவோ சாயலில் மனைவி ஈரத்தலையில் தேங்காய்ப்பூ துண்டு சுற்றியபடி கையில் காப்பியோடு எழுப்பினால் எப்படியிருக்குமென நினைத்தார். ம்ம்... அதற்கெல்லாம் போன ஜென்மத்தில் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென நினைத்த அடுத்த நொடியே பர்ஸை எடுத்து திறந்து பார்த்தார். நேற்று முப்பத்து ஒன்றாம் தேதியா...
Image
  இதற்கு முன் அறிமுகமற்றவர்களிடையே சுவரொன்றைக் கட்டவியலுமா. நதியின் குறுக்கே நிற்கும் நாணல் புதர் இடம் வலமாய் நீரோட்டத்தை திசைதிருப்ப முடியுமா.. இதுபோன்ற கேள்விகளுக்கு இல்லை எனும் பதில் தருவோர் வாசகர்கள்.. ஆம் முடியும் என பதிலுரைப்போர் இலக்கிய கர்த்தாக்கள்.. 1980ல் ஒரு உலக இலக்கிய இருண்ட நாள்..ருஷ்ய ஸ்டாலினின் ஆதரவாளரான ஹில்மேன் ஒரு நேர்மையற்ற எழுத்தாளர் என மேரி மெகார்த்தி எனும் இலக்கிய விமரிசகர் குற்றம் சாட்டுகிறார். விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியோ திறமையோ அற்றவர்கள் தங்கள் தொழிலில் உச்சம் தொடுவது கடினம் தானே.. தன் மீது அவதூறு பரப்பிவிட்டதாக மேரி மெகார்த்தி எனும் பெண் இலக்கிய விமரிசகர் மீது வழக்குத் தொடுக்கிறார். அவர் இழப்பீடாக கேட்ட தொகை சில மில்லியன் டாலர்கள். அது மட்டுமல்ல.. மேரி மெகார்த்தி ஸ்டாலினை எதிர்க்கும் எதிர் இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்.. விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளவியலாத ஹில்மேன் 1984ல் இறந்து போகிறார். வழக்கும் தள்ளுபடியாகிறது. நம் செந்தமிழ் நாட்டில் பாரதி ஷெல்லியைக் காப்பியடித்தாகச் சொன்ன இலக்கிய பிராமண எதிர்ப்பாளர்கள் நிறைய இருந்தார்கள்..இன்றும் இருக்கிறார்கள்..இ...
Image
  உன் ஆணவச் சிரிப்பை என் தொடர்வண்டியின் ஜன்னலோரம் நின்று நிகழ்த்திக் காட்டுகிறாய்... உன் சிரிப்பிலிருந்து உதிர்கிறது பின்பக்கம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடி.. மெல்ல நகரத்தொடங்கிய காலத்தின் மெளன தொடர்வண்டியை துரத்தியபடி ஓடி வருகிறாய்.. நான் அமர்ந்திருப்பது வரலாற்றின் வண்டி.. அதில் நீ பயணிக்க வேண்டுமெனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.. இதோ வண்டி நகரத்தொடங்கிவிட்டது.. ஓடும்வண்டியில் தொற்றி ஏற உனக்கு அனுமதியில்லை... தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதால் வண்டி மட்டுமல்ல வரலாற்று மாடு கூட மண்டியிடாது.. திடீரென தும்பறுத்து கையில் கண்ணாடியுடன் நடைமேடையில் என் வண்டியை ஏன் துரத்துகிறாய்.. உன் தொடர் எதிர்ஓட்டத்தின் மூச்சு முட்டும் அச்சிறும் அப்போதில் ஒரு முறை உன் முகத்தைப் பார்த்துக்கொள்.. உன் சிரிப்பிற்கான என் வழுக்கை வரலாற்றின் எச்சம்.. என் மூதாதையரின் பரம்பரைச் சொத்து அது.. நீ ஏன் பொறாமைப் படுகிறாய்..? உன் எழுத்துக்களில் உன் தலைமுடியின் அடர்த்திகூட இல்லையே.. என்ன செய்வது..? போகட்டும்.. இதோ வரலாற்றின் அடுத்த வண்டிக்காக காத்திருப்போரை பயணச் சீட்டு பரிசோதகர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்... ந...
Image
  சாதீய அடையாளம் தமிழ் எழுத்தோடும் எழுத்தாளனோடும் ஒட்டியே பிறக்கிறது. குறிப்பிட்ட ஒரு அடையாள முத்திரை தவிர்த்த மற்ற அடையாள சின்னங்களைத் தாங்கி வெளியேகும் படைப்புகளும் படைப்புத் தளங்களும் உலகளாவிய அங்கீகார தராசில் நிறுத்தப்படுகிறது. பூணூல் வெளித் தெரியும் எழுத்துக்கள் அங்கீகார தராசுத் தட்டின் மேசையில் அடுக்கப்படுவதே இல்லை. ஆயினும் வேறு மதச் சின்னங்கள் வலிந்து அணிவிக்கப்பட்ட எழுத்துக்களுக்கு எந்தத் தராசிலும் ஏறி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பூணூல் அணிந்த எழுத்துக்கள் பெரும்பாலும் பகடிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. சில நேரம் பகடிக் காயாகவும் தான். அப்படி பகடிக்காயாக பயன்படுத்தப்பட்ட பிராமண எழுத்து ஏதாவதொன்று சிறு உத்தரணி அளவு துளி  நன்மையை  தன் உள்ளங்கையில் எப்போதாவது ஏந்துகிறது. ஆனால் அச்சிறு துளியைக் கூட உறிஞ்சவிடாத சமகால போலி முற்போக்கு இலக்கியம் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ப்ராமண எழுத்தாளனிடமிருந்து அதைப் பிடுங்கி தான் உட்கொள்ள துடியாய்த் துடிக்கிறது. போகட்டும். பூணூல் வெளித்தெரியும் எழுத்து உஞ்சவிருத்தி செய்தாவது பிழைக்க வேண்டி இலக்கிய வெளியெங்கும் வலம் வந்தாலும் ஒரு பிரதி...
Image
  அது 1982 ம் வருடம். பிகாம் முடித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியாய் கோவில் காளையென வீதிகளில் திரிந்துகொண்டிருந்த காலம். உதயம் கையெழுத்துப் பிரதி மாத இதழ் ஆசிரியர் என்ற தகுதியும் ஒன்றிரண்டு கவிதைகள் நாளிதழ்களில் வெளிவந்திருந்த இறுமாப்பும் திமிள்களாய் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்த பொழுதுகள்..கூர்த்த கொம்புகளில் எவராவது புல் சுற்றிவிடுவார்கள் பசியாறலாம் என்றலைந்த அலட்சியமான நாட்கள்.. இவனின் திறமைமீது நம்பிக்கை கொண்ட திருவாரூர் கலைக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஹூசைன் இவனிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். யாரிடம் தெரியுமா.. ?ஒருதலை ராகம் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்களிடம் தான். அதுபோது நம்பிக்கை இமயமலை போன்சாய் வடிவில் இருந்தாலும் இவன் கையில் வாங்கியவுடன் தன் உயரத்தைத் தானே மீறத் தொடங்கியது. கடிதத்தில் அடுத்த படத்திற்கு பாடல் எழுத இச்சிறுவனை பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார்...அது கண்ணதாசன் எனும் பாட்டுப்பகலவன் மறைந்த சினிமா வானின் சாயங்காலப் பொழுதின் சிவப்பு நாட்கள்.. இப்ராஹிம் அவர்களின் முகவரியில் கால் வைக்கிறான்.. இவனின் கிழிந்த சட்டைப் பையி...