புரோகிதர் எனும் சொல் சம்ஸ்கிருதத்தின் கூட்டு உயிர்ச்சொல்.. புரோ...என்பது புற எனும் சொல்லின் திரிபு...இதன் பொருள்.. புறத்திருத்தல் அதாவது முன்னின்று வழி நடத்திச் செல்லுதல். சுருங்கச் சொன்னால் வழிகாட்டி.. கிதர்...எனும் சொல் ஹிதம் அதாவது துன்பத்திற்கான விடுதலை பாதையை நோக்கிச் செலுத்தும் தன்மை.. இதம் தரும் மனையின் நீங்கி என பாரதி சொல்லியிருக்கிறான்..
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Wednesday, February 4, 2026
ஆகவே புரோகிதர் என்பவர் வாழ்வின் இயங்கியல் துன்பச் சிறைக்குள் சிக்குண்டவர்களை இன்பமெனும் விடுதலை நோக்கிய பாதைக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்பவர் என்பதே பொருள்.
புரோகிதர்கள் வழிகாட்டிகள் மட்டுமே... தலைவர்கள் அல்ல... சமூக அரசியலமைப்புக் கட்டமைப்பின் நிர்வாகத்தின் வழிகாட்டிகள் பெரும்பாலோர் தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள்.. அப்படியான தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்று அமைப்பின் இயங்கியல் தத்துவத்தை அவர்களின் சுய நலன் சார்ந்து வளைத்துச் செலுத்தும் அதிர்ஷ்ட சாலிகள் எனவும் சொல்லவியலும்..
தலைவர்கள் வேறு...அவர்கள் அதிகாரங்கள் வேறு.. புரோகிதர்கள் வேறு அவர்களுக்கு அதிகாரம் மட்டுமல்ல அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியான ஒன்று. அப்படியான புரோகிதர்கள் பிராமணர்கள் எனும் பிரிவிற்குள் புகுத்தப்பட்டதாலேயே புனைவுலகில் நுழைந்ததால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார்கள்..
பெருவெடிப்பிலிருந்து இப்புவி உருவான முதற் கணத்திலிருந்து இன்று வரை பிறப்பால் பிராமணர்கள் என பிரிக்கப்பட்டவர்கள் அதிகார நாற்காலிகளில் அமர்ந்ததாக வரலாறில்லை.. ஆதிக்க சாதிப் பிரிவுகள் தான் அதிகாரத்தைச் சுவைத்து அதன் மூலம் சமூக நல்லிணக்கம் நிகழ்ந்திடா வண்ணம் கவனமாக இன்றுவரை இருப்பவர்கள்.. இப்பிரிவில் தான் அதிகாரம் பெற்ற நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்...
இன்னும் ஒரு பிரிவினர் உன் முப்பாட்டன் எங்களைத் தொட்டுப் பேசவில்லை..அதனால் அதிகாரத்தில் எங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டுமென மிரட்டல் விடுத்து.. ஒருவர் உட்காரக்கூடிய சிம்மாசத்தில் தானும் நெருக்கியடித்து உட்காரத் துடிப்பவர்கள்.. இப்படியானவர்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைத்து எல்லோரும் சமம் எனச் சொல்லிக்கொண்டு தங்களின் நூற்றாண்டு பொய்யால் கிடைத்த மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் நைந்த எழுத்துக்களுக்கு வண்ணம் பூசியும் செத்த பிணத்திற்கு செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக மார்பில் முட்டிக்கையால் அழுத்தி அழுத்தி இன்பம் கண்டு கொண்டிருப்பவர்கள்..
காலத்தால் அழிக்கவியலா காவியங்களின் வரிசையில் இவர்களின் காலணா படைப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்கள்..
தமிழிலக்கிய சூழலில் பிராமண எழுத்தாளர்களின் பூணூலை மட்டுமல்ல அவர்களின் எழுத்தையும் ஏன் தலையையும் கூட அறுத்தெறிவதற்காக கையில் கூரிய ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருப்பவர்கள்.. அப்படி அலைபவர்களின் கையிலிருக்கும் ஆயுதத்தின் பெயர் என்ன என்று கேட்டால் எழுத்து என்று கூசாமல் சொல்வார்கள்..
அரசன் என்ற சொல் அதிகாரம் நிறைந்தது.. புரோகிதன் என்ற சொல் இன்றைக்கும் அவமானத்தால் தலை குனிந்திருக்கிறது...
மகுடத்திற்காக எந்த புரோகித எழுத்தாளனும் விஷப்பாம்புகளின் முன் மகுடி எடுத்து எழுத்தூதுவதில்லை..
இலவச வீட்டிற்காகவும் தான்..
ராகவபிரியன்
Subscribe to:
Post Comments (Atom)
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
No comments:
Post a Comment