சாதீய அடையாளம் தமிழ் எழுத்தோடும் எழுத்தாளனோடும் ஒட்டியே பிறக்கிறது. குறிப்பிட்ட ஒரு அடையாள முத்திரை தவிர்த்த மற்ற அடையாள சின்னங்களைத் தாங்கி வெளியேகும் படைப்புகளும் படைப்புத் தளங்களும் உலகளாவிய அங்கீகார தராசில் நிறுத்தப்படுகிறது. பூணூல் வெளித் தெரியும் எழுத்துக்கள் அங்கீகார தராசுத் தட்டின் மேசையில் அடுக்கப்படுவதே இல்லை. ஆயினும் வேறு மதச் சின்னங்கள் வலிந்து அணிவிக்கப்பட்ட எழுத்துக்களுக்கு எந்தத் தராசிலும் ஏறி நிற்க வேண்டிய அவசியமே இல்லை.
பூணூல் அணிந்த எழுத்துக்கள் பெரும்பாலும் பகடிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. சில நேரம் பகடிக் காயாகவும் தான். அப்படி பகடிக்காயாக பயன்படுத்தப்பட்ட பிராமண எழுத்து ஏதாவதொன்று சிறு உத்தரணி அளவு துளி நன்மையை தன் உள்ளங்கையில் எப்போதாவது ஏந்துகிறது. ஆனால் அச்சிறு துளியைக் கூட உறிஞ்சவிடாத சமகால போலி முற்போக்கு இலக்கியம் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ப்ராமண எழுத்தாளனிடமிருந்து அதைப் பிடுங்கி தான் உட்கொள்ள துடியாய்த் துடிக்கிறது. போகட்டும். பூணூல் வெளித்தெரியும் எழுத்து உஞ்சவிருத்தி செய்தாவது பிழைக்க வேண்டி இலக்கிய வெளியெங்கும் வலம் வந்தாலும் ஒரு பிரதிக்கான விலைகூட அதன் திருவோட்டில் சேந்திவரவியலாது. இங்கெ பிராமண எழுத்தாளனின் தோளில் தொங்கும் பூணூல் எந்தச் சிறியதொரு சமூக தாக்கத்தையும் தரும் வலிமையற்றதென்பதை ஊரெங்கும் உரத்துச் சொன்னாலும் எடுபடாது. அழிவிற்கான அணுகுண்டு வெடித்துச் சிதறி சதா ஊளையோசை கேட்டுக்கொண்டிருக்கும் இவ்விலக்கிய மண்ணில் தெய்வீக வெண்கலமணியின் ஒலி எந்தக் காதில் தான் விழப்போகிறது.
இந்த மண்ணில் வலிந்து அணிவிக்கப்பட்ட சிலுவை தொப்பிச் சின்னங்கள் தாங்கிவரும் எழுத்துக்கள் செய்த செய்து கொண்டிருக்கிற இனி செய்யப்போகும் தாக்கங்களை முப்பிரி நூலின் முப்பரிமாண எழுத்தால் எக்காலத்தும் செய்யவியலாதென்பதே உண்மை. அதனால்தான் அது திறந்த மார்பில் தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு சிதைந்து போகிறது. அப்பூணூலில் பிற்போக்கு எனும் ஒற்றைச் சொல் பிசினை கட்டாயப்படுத்தி பூசிவிடுகிறார்கள். அதனால் அது பிரிக்கவியலாமல் ஒட்டிக்கொண்டு மெல்ல நைந்து பிரிப்பிரியாய் பிய்யத் தொடங்குகிறது. இம்மண்ணில் தான் சிலுவையை பாரமாகச் சுமக்கப் பழக்கப்பட்ட எழுத்துக்கள் வெகு சுலபமாக தேவாலய உச்சிவரை தூக்கிச் செல்லப்பட்டு நிரந்தர இளைப்பாறுதலும் கொடுக்கப்படுகிறதெனின் அதுதான் மறுக்கவியலா தமிழிலக்கிய நிஜம். ஆமென்.
லுங்கியும் தொப்பியும் மீசைமழிக்கப்பட்ட வளர்தாடி கொண்ட எழுத்துக்கள் அரசின் மற்றும் படைப்புலகத்தின் அங்கீகாரத்தையும் அன்றாட கஞ்சிக்கான உத்தரவாதத்தையும் வெகு சுலபமாய் பெற்றுவிடுகிறது. முற்போக்கு எழுத்தென முத்திரை குத்தப்படும் இலக்கியங்களுக்கான மெக்கா மெதினா யாத்திரைக்கான செலவுகள் இந்துக்கோவில்களின் வருமானத்திலிருந்தே கொடுக்கப்படுகிறதென்பதுதான் இன்றைய தமிழிலக்கிய இயங்கியல் தத்துவம்.
இருந்தாலும் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எழுத்துக்களுக்கு பூணூலோ சிலுவையோ தொப்பியோ அணிவிப்பவர்கள் வாசகர்கள் அல்ல..
ராகவபிரியன்
No comments:
Post a Comment