மாஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதை..1.. .தூக்கு வாளி கூழ் நானும் நண்பன் சந்துருவும் பாத்திரக் கடைக்குச் சென்றோம்.. அது ஏழைகளுக்கான பாத்திரக் கடை அல்ல..அவன் தன் குழந்தைக்கு மதிய உணவுக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்ப ஒரு டிபன் பாக்ஸ் வாங்க வேண்டும்..அந்தக் கடையின் பாத்திரங்களில் எல்லாம் பலவகையான தின்பண்டங்கள் இனிப்பு கார வகைகள் நிரம்பி இருந்தன.. தேங்காய்சாதம் புளி சாதம் எலுமிச்சை சாதம் கறிகாய் கூட்டு வகைகள் சாம்பார் ரசம் மோர் எல்லாம் இருந்தன.. ஒரு மூலையில் சோறு சின்னக் குன்றென குவித்து வைக்கப்பட்டிருந்தது.. பாத்திரக் கடைக்குப் பதிலாக ஏதாவதொரு ஹோட்டலுக்கு கூட்டி வந்து விட்டாயா என்றேன்.. அவன் எல்லா பண்டங்களையும் பார்த்துக் கொண்டே வந்தான். கடை ஊழியர்கள் தங்கள் டிபன் பாக்ஸ்களை திறந்து எங்களிடம் காட்டினார்கள். எந்த பாக்ஸிலும் மதிய உணவு இல்லை.. அவர்களிடம் கேட்டேன்.. பள்ளிக் குழந்தை மதிய உணவு எடுத்துச் செல்ல ஒரு டிபன் பாக்ஸ் இந்தக் கடையில் கிடைக்காதா என. என்னை பாத்திரக் கடைக்கு கூட்டிச் சென்றவனிடம் பாத்திரக் கடை முதலாளி கேட்டார்.. நீங்கள் பணக்காரரா இல்லை ஏழையா? சந்துரு என்னை புரியாமல் பார்த்தா...
Posts
தெருவில் சுற்றும் கோல்டன் ரெட்ரீவர்....சிறுகதை ----------------------------------------------------------------- எங்கள் வீட்டில் அப்போது நாய் வளர்து வந்தோம்.. அது கோல்டன் ரிட்ரீவர் நாய். அதை வாங்கத்தான் இப்போது அன்பு எனும் அன்பழகன் என் முன் நிற்கிறான்.. சார் உங்க வீட்டு நாய் ரொம்ப அழகா இருக்கு. விலைக்குத் தருவீங்களா... இது ரொம்ப விலை உசந்த நாய்ப்பா... நம்ம ஊர் ராஜபாளையம் நாய் மாதிரி இல்ல..இதோட முடியெல்லாம் கோல்டன் கலர்ல இருக்கும்..அதுவும் இல்லாம இத நான் விக்கறதுக்காக வாங்கலப்பா... போய்ட்டு வா... கோல்டன் ரிட்ரீவரின் தொடர் குரைத்தல் சப்தத்திலும் கத்திப்பேச வேண்டியதானது.. அந்த அன்பு நாங்கள் எது வளர்த்தாலும் மிருக வகைகள் தான் அதை வாங்க வந்துவிடுவான்.. விலையுயர்ந்த ஆடு கோழி சமயத்தில் மாடுகள் கூட நாங்கள் வாங்கி வருவோம்..சில காலம் வளர்த்துவிட்டு பிறகு கொஞ்சம் அதிக விலை வைத்து விற்று விடுவோம்.. ஆனால் இந்த நாயை அறுபதாயிரம் கொடுத்து திருவனந்தபுரத்திலிருந்து வாங்கி வந்தேன்.. அந்தக் கதையைத் தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகிறேன்.. நாங்கள் ஆடு வாங்கினால் ட்ரையினில் புக் செய்து வீட்டிற்கு கொண...
கச்சி வரதனும் காலப்பனவனும்..2 தெய்வீகவியல் எது என்பதன் கேள்வி அறிவுசார் அலகென உலவிக்கொண்டிருக்கிறது. இறையியல் வேறா இல்லை தெய்வீக இயலும் இறையியலும் ஒன்றுதானா? இக்கேள்வியுடனேயே இன்றைய கோவில் பயணிப்போர் புனித பயணங்களை மேற்கொள்கின்றனர். இறையியலில் சுற்றுலா இன்பங்களைத் துய்க்க அனுமதி உள்ளதா எனும் மருட்கையை புறந்தள்ளவியலவில்லை. நிகழின் தெய்வீக இயல் காலப்பரிணாம வளர்ச்சியில் சில உடன்பாட்டு நேர்செய்கைகளின் சமரசத்தை உள்வாங்கியுள்ளதை மறுதளித்தல் கடினம்.. தெய்வதரிசனம், கோயில் செல்வது, நேர்த்திக் கடன் நிறைவேற்றல், திருப்பணிக்கு உதவுதல், குருவென ஒருவரை வரித்து கொண்டு வாழ்வின் அன்றாடங்களை அவர்கள் வகுத்தளித்த வகையில் வாழ்வது மற்றும் இன்னபிறவும் தெய்வீக இயலில் உள்ளடக்குதல் சாத்தியப்படுமா எனும் ஐயம் எழாமலும் இல்லை.. இப்படியான மரபுவழி தொன்மங்களின் அறுதி உண்மைகளை கட்டுடைத்து எங்கிருந்தாலும் மனதில் தெய்வத்தை நினைத்து எவ்வுயிர்க்கும் தீங்கின்றி வாழ்வதாக பறைசாற்றுவது அல்லது பாவிப்பது தெய்வீகவியல் நிகழ் கால துன்பவியல் சூழ் நிறுவனமயமானதைச் சொல்வதாகவே தோன்றுகிறது.. இறையியல் என்பது தெய்வீகவியலைக் கட்டுடைத...
எனது இந்தியாவில் என் இந்துக் கடவுள்களின் கண்ணியம் காப்பாற்றப்படவேண்டுமென கனவு காண்கிறேன்.. என் வீட்டு முற்றத்திலோ திண்ணையிலோ இல்லை புழற்கடையிலோ மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்ய வேண்டுமென்பதும் என் கனவு.. அடர் போக்குவரத்து நெரிசலில் நான் மாத்யானிகம் செய்ய வேண்டும்... விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குகையில் சாயம் சந்தியா வந்தனம் செய்கையில் விமானம் வானிலேயே தாமதித்து வட்டமிட வேண்டும்.. அதை இந்த சூடோ செக்கூல போலிக் கண்கள் செய்வதறியாது பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.. இந்தக் கனவை, என் விதியை என் உள்ளமும் என் பிறப்பும் என் சனாதனமும் நித்தமும் வேண்டுகின்றன.. என் பாரத அன்னை நாடே நீ கடந்துவந்த அவமானங்களோடும் உன்னைத் துண்டாடிய தீவிர அமைதி மார்கத்தோடும் இன்னமும் உன் தேசீய கீதத்தை தாய் வணக்கத்தை உதாசீனம் செய்கையில் அனலென கொதிக்கும் மனதோடும்.. இந்த மண்ணின் ஒரு துளியாகிய நான்.. என் கனவை உன்னிடம் மனம் திறந்து கொட்ட வேண்டும்.. உன் மடியில் உன் மேல் ஒடும் நதிகளில் ஒரு குமிழென பிறந்தேன். சடுதி நான் உடைவதற்குள் என் கனவை உன்னிடம் சொல்லிவிடுகிறேன்.. உன் திருவிழாக்களில் எனக்கும் வாழ்த்துக்கள் வரவேண்ட...
வரலாற்றாய்வாளர் David E. U. Baker தொகுத்த Tamil Brahmans: The Making of a Middle-Class Caste நூலில், Dravidar Kazhagam உறுப்பினர்கள் பார்ப்பனர்களின் வீடுகள் மற்றும் உணவகங்களைத் தாக்கியதோடு, தனிப்பட்ட பார்ப்பனர்களையும் தாக்கியதாக பதிவு செய்யப்படுகிறது. சில சம்பவங்களில் ஆண்களின் குடுமி மற்றும் பூணூலை வலுக்கட்டாயமாக வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இல்லாவிட்டாலும், அவை பார்ப்பனர்களுக்கு அவமானகரமான அனுபவங்களாக இருந்ததாக நூல் குறிப்பிடுகிறது. 1958 – பெரியாருக்கு எதிரான வழக்கு Collected Works of Periyar பதிவின்படி, பசுபதிபாளையம் (கரூர்), குளித்தலை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் பெரியார் தனது உரைகளில் பார்ப்பனர்களை உடல்ரீதியாகத் தாக்குமாறு தூண்டியதாக அரசு வழக்குத் தொடுத்தது; திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்ததாக அந்தப் பதிவு கூறுகிறது. பூணூல்–குடுமி மீது நேரடி தாக்குதல் பார்ப்பனர்களின் சமூக அடையாளங்களாகக் கருதப்பட்ட பூணூல் மற்றும் குடுமியை வலுக்கட்டாயமாக அகற்றும் தாக்குதல்கள் நடந்ததாக Baker-ன் ஆய்வு பதிவு செய்கிறது...
ஒரு சொல்லும் நானும்.. சிறுகதை.. நேற்றிரவு எனது அன்றாட வாழ்வின் சுழற்சியில் கிடைக்கும் தூக்கம் பாதியிலேயே உறைந்துவிட்டது. ஒரு சொல் அல்லது வாழ்வின் தவிர்க்கவியலா தலைமுறையாய் நெருக்கும் வேலை பற்றிய பழம்சொல் உறக்கத்தின் இழையின் முனையொன்றைப் பிடித்துக் கொண்டு விடமறுத்து மதம் கொண்டிருந்தது.. யாழினி நம்பவியலாமல் மஞ்சள் இரவு விளக்கொளியில் எதையொ புரட்டிக்கொண்டு கணிணியின் முன் இருப்பவனைப் கண்கள் கசக்கியபடி பார்க்கிறாள்.. அருகில் வருகிறாள்.. நான் பார்த்துக்கொண்டிருக்கும் பிரதியை ஊடுறுவின அவளின் கண்கள்.. அவளின் பார்வை என் பிரக்ஞையைத் துண்டு துண்டாய் வெட்டியது. நான் சொல்லைப் பிரதியில் தேடவில்லை. சொல்லை தூர அனுப்பிவிட்டு பிறகான அவசிய உறக்கத்தைப் பிடிக்க கணிணியின் முன் அமர்ந்திருக்கிறேன் என்பது யாழினிக்குப் புரியவில்லை.. யாழினி சட் டென படுக்கையை மடித்து வைத்தாள். அவளின் கைபேசியின் உறையை விருட்டென உருவியதில் ஜன்னல் வழி நிலவு திரையில் குதித்து ஒளிரத் தொடங்கியதில் நேரம் காணக்கிடைக்காத ஆத்திரத்தில் நீலகிரி மலைச்சாலையின் இரவு யானையென அடுப்படிக்குள் நுழைந்தாள்.. அவளின் தேனீர் தயாரிக்கும் நுட்பத்தின் ...
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/15 நேற்று இறந்த இலைஇன்று மண்ணாகவில்லை மற்றும்அது உதிர்ந்து பின் அதே இடத்தில் அதே வடிவில் உயிர்தெழுதலைக் காட்டுவதை ஒப்புக்கொள்ள மாட்டான் அறிவு ஜீவித அண்ணன்... மரத்தின் இரகசியமான வேர் மொழியில் வெட்டிப் புதைத்தவை துளிர்ப்பைக் கொண்டிருக்க ஆழத்தில் புதைந்த ஆற்றல்கள் என்றோ ஒரு நாள் எரிமலை துவாரத்துவழி நெருப்பாய் பிறப்பதை எந்த அண்ணனாலும் பரிசோதனைக் கூடங்களில் நிரூபிக்க வியலாது.. ஆறு கடலில் தன் இறுதி மரணக் குளியலை முடித்து துளித்துளியாய் வானில் எழுந்து தலை துவட்டுவதைத்தான் என் அண்ணன் மழையெனும் முட்டாள் எனச் சொல்கிறான்.. ஆனால் அது மறுமையின் இன்னொரு புரிதல் துளியென புலம்பிக்கொண்டிருக்கிறான் ஒரு முட்டாள்.. மறுமையின் நிஜத்தை அமைதி மார்க்கத்தார் எல்லோரும் ஒரு நாள் வந்த இடத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் அந்த அதிபுத்திமான் தமிழகம் மீண்டும் தேசீயத்திற்கு திரும்பும் என்பதை ஒப்புக் கொள்வதில்லை.. கல்லறையின் அமைதிக்குள் ஷேக்ஸ்பியர் புதைக்கப்படவில்லை விதைக்...