Posts

Image
  ஒரு முறை அலுவலகம் கிளம்ப கோபாலய்யருக்கு லேட்டாகிவிட்டது.. சட்டையைத் திருப்பிப் போட்டுக்கொண்டு போய் விட்டார். சினிமாவில் மனைவி கணவனுக்கு பவ்யமாக சிரித்த முகத்துடன் பட்டன் போட்டுவிடுவாள். பிறகு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து கையசைத்து வழியனுப்புவாள்..ம் அதெல்லாம் சினிமாவில்..நிஜமான அக்ரஹார வாசலில் வழியனுப்புகையில் நடக்குமா என்ன? கோபாலய்யருக்கு இவையெல்லாம் கனவாகவே இருக்கும் கோபம் வேறு.. ஏதோ ஒரு நிறைய நேரம் கிடைத்த நாளொன்றில் யாழினியிடம் சைகையில் முத்தம் ஒன்று கேட்டார். அவள் கரண்டியை வீசியெறிந்ததில் மீந்திருந்த சூடான வத்தக் குழம்பின் சிறு துளி கண்ணில் விழுந்தது. கரண்டி முகத்தைத் தாக்கியது.. அன்று கண்ணில் எரியத் தொடங்கிய வத்தக் குழம்பெரிச்சல் இன்னும் வற்றவே இல்லை. இப்படியான காலையைக் கடந்து அலுவலகத்திற்குள் அவசரமாக நுழைந்தால் எதிரே மேலதிகாரி இந்த கொதிக்கும் கோடையில் டை கட்டவில்லையா என கேட்கிறார்..கோபாலய்யரின் பூணுல் வேறு வியர்வையில் நனைந்து அரிப்பை உடலெங்கும் அதிகப்படுத்திக்கொண்டிருந்தது.. அக்கொடும் அப்போதில் மேலதிகாரி பின்னால் பார்க்கும்படி சைகை செய்தார். திரும்பிப் பார்த்தால் யாழினி...
Image
  எழுதவியலா நீண்ட இடைவெளிகளில் அள்ளிக் குவித்திருக்கும் சோர்வு அளவுகள் அற்றது. எதையாவது எழுதியாக வேண்டுமென்ற உந்துதல் காலைத் தேனீர் சுவைக்கையில் தொடங்கி இரவு பிய்ந்த பாயின் முதுகு குத்துதலில் முடிந்துவிடுகிறதா எனில் இல்லை..தூக்கத்திலும் கூட அது தூங்காமல் அருகிலேயே அமர்ந்து திடீரென ஒரு அறையை ஐம்பது நிமிட இடைவெளியில் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.. இன்று மகளிர் தினமென்பதால் போராடி வென்ற ஒரு மகளிரைப் பற்றி எழுதி முக நூலில் பதிவிட்டு விடுவதென காலைத் தேனீர் ஒரு சொட்டை தரையில் சொட்டி அதன் மீது சத்தியம் செய்தாகிவிட்டது. ஆனால் யாரைப் பற்றி எழுதுவதெனும் யோசனை குமிழ் காயாமல் உடையாமல் மனமெங்கும் சுற்றிக்கொண்டே இருந்தது. எவ்வளவு ஊதி ஊதி பார்த்தும் யோசனைக் குமிழ் உடையாமல் உருண்டு உருண்டு திரிஷாவிடமே வந்து நின்றது.. ருஷ்ய புரட்சியின் க்ளாரா ஜெட்கின் தொடங்கி பிரேம லதா வரை மகளிர் தின கொண்டாட்டங்களுக்குக் காரணமான வெற்றி பெற்ற பெண்கள் வரிசையை மனதில் நிற்க வைத்தாகிவிட்டது.. முதலில் இனவெறியை எதிர்த்து போராடிய ரோசா பார்க்ஸ்.. அடுத்து இஸ்ரேலின் கோல்டா மேயர் இவர்கள் மனதில் வருகிறார்கள்..இவர்கள் என்பதுகளில...
Image
  பால் கணக்கை காரைச் சுவற்றில் கரியுபகரணத்தால் சரியாகப் பதிவு செய்யும் அந்த நாள் அப்பாவழி பாட்டி சொன்னார்கள்... அன்றாட விடியல் நேர நடை பயின்றால் நன்மை நம்மை நாடி வருமென... அன்றிலிருந்து விடியும் முன்பே குந்தி கோலம் போடும் கூந்தலில் துண்டு சுற்றிய யுவதிகள்.... பொமரேணியன் இழுக்க தேங்கித் தேங்கி எத்தித் தத்தி நடக்கும் அரைக் கால்சட்டை தாத்தாக்கள்.. செய்தித் தாள்கள் தூவப்படாத இஞ்சித் தேனீர்கடைகள்.... நாற்கரச் சாலை புழுதி போர்த்திய ஆலமரத்தடியில் பிளாஸ்டராப்பாரிஸ் பொம்மை செய்த களைப்பு நீங்க போர்வை மூடி முயங்கி முணகும் வட மானில கலைஞர் தம்பதிகள்... அவர்கள் படைத்த அற்புத கடவுள் மற்றும் விலங்கு பொம்மைகள்.. எல்லாம் கடந்த பின்பும் நடந்து கொண்டே இருப்பவன் இன்னமும் ஓய்வாய் அமர சொந்தமாய் ஓரடி நிலமில்லை.. பாட்டி சொன்ன நன்மை என்பதன் நற்பொருள்தான் என்ன? ராகவபிரியன்
Image
  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இங்கே முதலில் பதிவிட்டுவிடுகிறேன்.. பல் துலக்குகிறோமோ இல்லையோ எக்ஸ்ட்ரா லார்ஜ் என அச்சிடப்பட்ட பற்பசையைத்தானே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் இப்பதிவு எக்ஸ்ட்ராவாக எதையும் கொண்டிருக்கவில்லை.. மரணமற்ற நிலை என்பதைத் தவிர. மரணமற்ற வாழ்வு எக்ஸ்ட்ரா தானே.. எட்செட்ரா இல்லையே.. போகட்டும்.. கீழே உள்ள பத்தி.. வேதங்களுக்கான ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யத்திலிருக்கும் ஒரு சில வரிகளைக் கொண்டது.அதில் ஆச்சாரியர் இப்படிச் சொல்கிறார்.. "இது போலவே மானுட வாழ்வும் அதன் தொடக்கத்தை உணராதது. வேதங்களைப் போல தொடக்கங்கள் அற்றதெனவும் அதைக் கூறலாம்.. மானுடம் மரணமற்ற வாழ்வையும் கொண்டுள்ளதெனின் அதுதான் நிஜம். ஆனால் எல்லா மானுடங்களும் மரணத்தை வெல்லவியலுமா எனில் இல்லையென்றே கூறுதல் தகும். அப்படியான மரணத்தை வென்று மரணமற்று வாழும் புகழ் வாழ்வு இன்னொரு பிறப்பற்றிருக்கிறது. எனினும் மீள்பிறப்புள்ள வேறொரு மானுடம் இந்த மரணமற்ற நிலையுடைய மானுடத்தை அனுபவித்துணர்தல் கடினம்.. இதைத் தான்...
Image
  A Sixty-Seventh Orbit: Notes from the Existential Ledger ------------------------------------------------------------- Birthday wishes— are not balloons, not sugar-script on melting cream— But they are entries in the damp ledger of existence. Sixty-seven revolutions around this cosmic not merely survival— but the faint graphite mark of having nudged society a millimeter to the left of silence. Thus, the tribe applauds. Thus, the species signs its receipt. Wishes are an existential fact. This is true. And yet— in the basement of metaphysics they are contraband, smuggled across the doctrine of negated meaning. Friedrich Nietzsche left us a hammer to test these idols— to ask whether gratitude is only a polished echo inside an empty cathedral. Once, in the culture of blue-lit walls, a single word— Thanks— was flung like a coin into the algorithmic fountain. That was a strategy. That was etiquette. That was my former self. But the law of metaphysical refusal whispers: even that lone s...
Image
  பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது இருத்தலிய நிஜத்தின் பதிவேடுகள்..அறுபத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்ததற்காக மட்டுமல்ல.. சமூக வாழ்வியலில் ஏதோ ஒரு சிறு பங்களிப்பையாவது பதிவு செய்ய இயன்றததற்காகவும் தான் சக மானுடத்தின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள் இருத்தலிய நிஜம். இது மெய்.. ஆனால் மெய்யியலில் வாழ்த்துக்கள் என்பது இடு பொருள் மறுப்பின் தத்துவமாக பார்க்கப்படுகிறது. நீட்ஷே அதனால் தான் இருத்தலிய நிஜத்தின் அவசியம் பற்றிய தத்துவங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.. வாழ்த்துக்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவின் மூலம் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை பதிவு செய்துவிடுவது முக நூல் பண்பாட்டுத் தளத்தின் உத்தியாக பார்க்கப்பட்டது. அதனால் உங்கள் ராகவபிரியனும் அதையே பின்பற்றினான். ஆனால் மெய்யியல் தத்துவத்தின் பொருள் மறுப்பின் விதி, இந்த ஒற்றை நன்றி எனும் வார்த்தையைக்கூட இருத்தலிய போதாமையை உணர்த்துவதாகக் கூறுகிறது.. ஜீன்பால் சாத்ரே இருத்தலியல் என்பது இருத்தலின் பயனைச் சொல்வதல்ல என்று சொல்லிச் சென்றது அதிர்வைத் தருகிறது.. வாழ்த்து என்பது இருத்தலிய நிஜத்தின் ஒப்புகை பதிவு. நன்றி என்பதே இருத்தலிய...
Image
  அன்பு நண்பர்களுக்கு அட்வான்ஸ் அறுபத்து ஏழாவது பிறந்த நாள் வணக்கங்கள். எதிர் வரும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் அறுபத்து ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு அனாமிகா ஆல்பபெட்ஸ் மூலம் வெளியிடப்பட்ட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களின் பிடிஎப் [PDF] வேண்டுவோர்.. உங்கள் ராகவபிரியனின் கைபேசி எண் 9442536901 க்கு பிறந்த நாள் அன்பளிப்பாக ரூ 100 அனுப்பி உங்களின் இமெயில் முகவரியையும் அனுப்பித் தந்தால் உடன் பிடிஎப் [PDF] புத்தக வடிவம் என்றென்றும் நன்றியுடன் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மேலான ஆதரவை நாடும் அன்பன் ராகவபிரியன் அச்சுப் புத்தகங்கள் வேண்டுவோர் அனாமிகா ஆல்பபெட்ஸ் பதிப்பக நிறுவனர் எனது இலக்கிய அன்னை திருமதி லதா ராமகிருஷ்ணன் அவர்களை lathaa.r2010@gmail.com எனும் இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ரூ 270/ மற்றும் தபால் செலவு சேர்த்து ரூ 300/ அனுப்பித் தந்தால் புத்தகங்கள் உங்கள் முகவரி தேடி வாசற் கதவைத் தட்டும். எந்தப் புத்தகச் சந்தையிலும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் புத்தகங்கள் கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய வாசகர்களுக்கு உங்கள் ராகவபிரியனின் எழுத்...