பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது இருத்தலிய நிஜத்தின் பதிவேடுகள்..அறுபத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்ததற்காக மட்டுமல்ல.. சமூக வாழ்வியலில் ஏதோ ஒரு சிறு பங்களிப்பையாவது பதிவு செய்ய இயன்றததற்காகவும் தான் சக மானுடத்தின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள் இருத்தலிய நிஜம். இது மெய்.. ஆனால் மெய்யியலில் வாழ்த்துக்கள் என்பது இடு பொருள் மறுப்பின் தத்துவமாக பார்க்கப்படுகிறது. நீட்ஷே அதனால் தான் இருத்தலிய நிஜத்தின் அவசியம் பற்றிய தத்துவங்களை விட்டுச் சென்றிருக்கிறார்..
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Friday, February 20, 2026
வாழ்த்துக்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவின் மூலம் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை பதிவு செய்துவிடுவது முக நூல் பண்பாட்டுத் தளத்தின் உத்தியாக பார்க்கப்பட்டது. அதனால் உங்கள் ராகவபிரியனும் அதையே பின்பற்றினான். ஆனால் மெய்யியல் தத்துவத்தின் பொருள் மறுப்பின் விதி, இந்த ஒற்றை நன்றி எனும் வார்த்தையைக்கூட இருத்தலிய போதாமையை உணர்த்துவதாகக் கூறுகிறது..
ஜீன்பால் சாத்ரே இருத்தலியல் என்பது இருத்தலின் பயனைச் சொல்வதல்ல என்று சொல்லிச் சென்றது அதிர்வைத் தருகிறது.. வாழ்த்து என்பது இருத்தலிய நிஜத்தின் ஒப்புகை பதிவு. நன்றி என்பதே இருத்தலிய நிஜத்திற்கான ஒப்புகைப் பயன்.
ஆதலால் இவ்வாண்டு ஒவ்வொரு வாழ்த்துக்கும் தனித்தனியாக நன்றியைப் பதிவு செய்ய முடிவானது. இருத்தலிய நிஜத்தின் ஒப்புகைப் பதிவை பதிவு செய்தாக வேண்டுமெனும் தீர்மாணம் இதயக் கடலின் நீர்மூழ்கியென மிதந்து அடியாழப் படுகை வரை சென்றது. அங்கே மெய்யியலின் பொருள் மதிப்பு விதியை புறந்தள்ளும் பவளப் பாறைகளை புறம் தள்ளி நன்றி எனும் முத்துச் சிப்பிகளை அள்ளிவர இயன்றது..
இந்த அறுபத்தேழாவது பிறந்த நாளில் முக நூல் மூலமும் நேரிலும் உள்பெட்டியிலும் மின்னஞ்சல் மூலமும் உங்கள் வாழ்த்துக்களால் இந்த எளிய உங்கள் ராகவபிரியனின் இருத்தலிய நிஜத்தை கனக்கச் செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனும் வெண்மை பளீரிடும் உள்ளத்து முத்துவை பரிசளிக்கிறேன்..
இந்த எளியவனின் கண்ணில் பட்ட வாழ்த்துக்களுக்கான நன்றியினை உளமார்ந்து நெஞ்சின் ஆழத்திலிருந்து பீறிட்டடிக்கும் நன்றி ஊற்றிலிருந்து நன்றி எனும் ஒரு செம்பு உயிர் நீரை உங்களின் கண்கள் பருகத் தர இயன்றிருப்பதில் நிஜம்மாகவே பெருமிதம் கொள்கிறேன்..
இனி உங்கள் ராகவபிரியன் ஒருபோதும் மரிக்கப்போவதில்லை.. அவனின் எழுத்தும் தான்..
வாழ்த்துக்கள் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அரங்கன் அருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்..
என்றென்றும் நன்றியும் அன்பும்..
ராகவபிரியன் தேஜஸ்வி..
Subscribe to:
Post Comments (Atom)
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
No comments:
Post a Comment