அடர்ந்த நாத்திகப் பனிமலை உச்சிகளில் அமர்ந்து கொண்டு உங்கள் மூடிய தோல் காலணிகளின் மேல் போர்வையைப் போர்த்துகிறீர்கள்.. எங்களின் சந்தியாவந்தன பஞ்சபாத்திரத்தில் பனிக்கட்டிகள் உறையச் செய்தது நீங்கள் தான் எனக் கத்தும் உங்கள் வாயிலிருந்து ஓசைகளுக்குப் பதில் புகைதான் வருகிறது.. உங்கள் காலணிகளின் கயிறுகளை இறுக்கிக்கொண்டு எங்கள் பூணூலால் எங்கள் கழுத்தை இறுக்குவதாக இறுமாந்து போகிறீர்கள்.. பின் எதற்காக மூச்சுவிட இயலாத பனிச்சாலையில் தடம் பதிக்க நினைக்கிறீர்கள்..? நாத்திகத் தடங்கள் அற்பாயுசுகொண்டவை.. அறிந்து கொள்ளுங்கள்.. கைலாய உச்சியில் கொழுந்துவிட்டெறியும் ஆத்திக தீபத்தை உங்களால் ஒருபோதும் ஊதி அணைத்துவிட இயலாது.. கைலாயத்தில் மீந்த உங்கள் பச்சை மாமிசத் துண்டுகளை உலர்த்த இயலாதென்பதால் பரம்குன்றத்தின் தூணில் கோர்த்துலர்த்த முயலுகிறீர்கள்.. நாத்திக பனிமலையின் டார்டரி எருதின் கூந்தல்களைச் சீவிமுடித்து பூ வைத்து சூடம் காட்டி படையலிடுகிறீர்கள்.. பின்னர் அரசியல் அறுக்கும் களத்தில் இழுத்து வந்து அதன் கழுத்தைச் சீவிக்கொட்டிய குருதி நெய்யில் பஞ்சதீபமேற்றச் சொல்லி ஆணையிடுகிறீர்கள்.. கொள்ளையடிக்கவும் ச...
Posts
உலகளாவிய வாசகர்களே.. உங்கள் மீதான என் நம்பிக்கை அந்தகப் புழுவென மண்கூட்டிற்குள் கிடக்கிறது.. சுற்றிச் சுற்றிப் பறந்து உதாசீனக் கொடுக்குகளால் அவ்வப்போது குத்திக்குத்தி வளர்த்து உருவாக்கிவிட்டீர்கள்.. சின்ன சிறகுவிரித்து முக நூல் மண் குகைக்குள் பறந்து திரியும் கலையை சுமாராகக் கற்றுக் கொண்டுவிட்டேன்.. அத்தனைச் சிறிய குகை வானில் எத்தனை நிலவுகளை மார்க்கின் ஒரு முறை சுற்று அனுமதியில் தொட்டுத் திரும்பினேன் தெரியுமா..? ராஜாளிகளுக்கு சிலை செய்யும் உங்கள் கைகள் நாளை இந்தச் சின்னக் குளவிக்கும் மெழுகுச் சிலையொன்றையாவது வடித்தமைக்குமென அறிவேன்.. அறிவீர்களா ராஜாளியின் சிறகுகள் அதை நிலா வரை எடுத்துச் செல்லும் வலிமையற்றவை.. என்பதை.. ஆனால் உங்கள் மீதான என் நம்பிக்கை குளவியின் சிறகுகள் உங்களை ஒரே தாவலில் எட்டிப் பிடிக்கும் வலிமை உள்ளவை.. ஏனெனில் நீங்கள் தானே அதனின் வானத்து நிலா... ராகவபிரியன்
இன்று உலக மஹாகவி சுப்ரமணிய அய்யர் பாரதி பிறந்த நாள்... திருநெல்வேலி கலெக்கடர் விஞ்ச் துரைக்கும் பாரத மாதாவின் தலைமை தமிழ்ப்புதல்வன் வ.உ.சிதம்பரம் பிள்ளைவாளுக்கும் நேருக்கு நேர் நடந்த சொற்போரைப் பார்க்கிறார் பாரதி.. இன்று சிறுபாண்மை மக்களின் ஓட்டுக்காக இந்திய தேசியத்தை இந்து ஆன்மீகத்தை அறுபடை வீடுகளில் முதலாம் வீடான அழகன் முருகனின் படைவீட்டை திருப்பரம் குன்றத்தை சிக்கந்தர் மலை என நாகூசாமல் சொல்லும் கயமையை பாரதி இப்படி அன்றே பாடியிருப்பதாகத்தான் நினைக்கிறேன். விஞ்ச் துரையையும் விஞ்சி இண்டி கூட்டணி பாராளுமன்றத்தில் வைத்த வாதங்களுக்கு...மாண்புமிகு இந்துமானமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதில்கள் இந்தப் பாடலை ஏனோ இன்று காலையிலிருந்தே என் மனதில் ஓடச்செய்கிறது... விஞ்ச் கேட்பது:-- "நாட்டிலெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை [ இந்து] நாட்டினாய் - கனல் - மூட்டினாய் வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன் - வலி - காட்டுவேன். கூட்டங்கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய் ஓட்ட நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் - பொருள் - ஈட்டினாய். கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய்...
GAVEL'S ECHO The barricade wall was created And the baton charge was fabricated The gavel's echo was vibrant and potent But the litigant was thin and insipid The powerful lunatic throws the ferment of justice in the dusty political corner The Kartika torch was lit on the Deepa stone By our ancestors from time immemorial But the stone is now shedding blood In the silent unleashing of state terror.... The justice temple bells of that Deepa stone was stolen even before they could ring.... And in every shaking step to break the barricades echoes of saffron rising from cracked bells.. Say the rulers...for their political profit. But the flames of our tradition would be lit On top of every sacred temple hill with justice... Bharath Mattha will chant Vande Mataram And dance inside that eternal flame ...at any cost... Ragavapriyan Thejeswi
முன்பிருந்த என் ஊரில் ஒவ்வொரு விடியலிலும் நான் அருந்திய தேனீர் கடையில் எனக்கான தேனீர் ஆறிக்கொண்டிருக்கலாம். இப்போது பூட்டிக் கிடக்கும் என் வீட்டின் ஊஞ்சலைச் சுற்றி கூடு கட்ட குளவி ஒன்று சுற்றிக்கொண்டிருக்கலாம்... ஐம்பதாண்டுகளுக்கு முன் நான் சுற்றிச் சுற்றி வந்த என் காதலிக்கு இன்று ஒன்றிரண்டு பற்கள் காணாமல் போயிருக்கலாம்.. தினமும் என் வீட்டு வாசலில் வீசப்பட்ட செய்தித் தாள்கள் இன்னமும் பிரிக்கப்படாமலே கிடக்கையில் அதனுள் பூஞ்சைகள் பூத்துக் கிடக்கலாம். அன்று நான் குளித்த தெளிந்த ஆறில் தற்காலத்தின் நுரைகள் கரையாமல் கலங்கிய நீரில் மிதந்தோடிக் கொண்டிருக்கலாம்.. என்ன செய்ய..? என் அன்றாடத்தின் முகத்தில் ஓங்கிக் குத்திய விதியின் முஷ்டித் தாக்குதலில் குருடாகிப் போனதால் உங்களிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. சதா துலாவும் கைகளால் என் எதிரே நீங்கள் வைத்திருக்கும் எதிர்காலத் தேனீர்க் குவளையை நான் தட்டிச் சாய்த்துவிட நேரலாம்.. கேட்கக் கூச்சமாகத்தான் இருக்கிறது.. யாராவது கொஞ்சம் என் கைகளில் அதை எடுத்துத் தருகிறீர்களா...? ராகவபிரியன்
A POEM BY RAGAVAPRIYAN THEJESWI Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) My Banana Tree has grown tall In that I have started budding Soon, there would be a cluster of Red Bananas Though it would be easy for me being up there above to pluck They peel off from below Not being aware of emerging from inside. I watch it all from up here The vendor woman carrying the basket brimming with red bananas Moon-faced long stem’s body shines all over in soft sweat Unable to lie down and doze off under the shade of the plantain tree I have got inside and turned into a shoot once again. Anyhow, you are going to cut me and tie me at the entrance Please wait till I give forth bunches Please don’t slice the leaves I am tied in the scraps that curl round your fingers that are slicing me. With the power of the tuber buried in the soil a Phoenix Banana baby would spread its wings and caress you with its beak And, for sure You would relish it! எனது வாழைமரம் உயரமாகிவிட்டது நான் இப்போது ...
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும் அமைப்பியல் தத்துவங்களை உள்ளடக்கியது. கடும் புயல் வேள்வி நெருப்பை ஊதி வளர்க்க அதில் நம்பிக்கை நெய்யை ஊற்றச் செய்யும் அணுகுமுறையைக் காட்டும் தெய்வீகப் பார்வை அது. இருண்ட வாழ்வின் வானத்தில் தீராது கொட்டும் அடர் மழையின் காலம் ஆகச் சிறியதெனச் சொல்லியபடி மேகம் மறைத்த ஆதவன் தரும் வெளிச்ச காலம் வெகு தொலைவில் இல்லை எனக் காட்டும் இயங்கியல் பார்வை இது. ஆதவனுக்கான ஹவிஸ்களை சமர்ப்பிக்கும் வேள்வித் தத்துவ கோட்பாடு புயலின் துயரை நொடியில் துடைக்கும் வல்லமை உடையது. அழிக்க வேண்டியதை அழித்து உருவாக்க வேண்டியதை புதிதாக உருவாக்குவது தான் இந்து ஆன்மீகத்தின் புயற்கோட்பாட்டுப் பார்வை. வேள்விகளில் சமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்கள் மானுட உளவியல் கோட்பாட்டுடன் ஒத்திசைவை தருவது இந்து ஆன்மீகத் தத்துவத்தின் கூடுதல் மரபியல் செயல்பாடெனில் அதுதான் நிஜம். ஆதவன் மானுட புத்தியின் குறியீடு. வேள்வியின் அக்னி ஆசைகளின் வெளிப்பாடு. சமித்துக்கள் ஆன்மாவை ஆசைகளாக்கி வேள்வியில் ச...