Posts

Image
  பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...6 அரங்கனைக் காண்பது எனும் தத்துவம் பக்தியின் ஆழ் நிலை மனதின் பார்வைகளைப் பொறுத்தது...அது உலக மனிதர்கள் காணும் சராசரி பார்வைகளின் புரிதல் எனும் உளவியல் கூறுகளையும் கடந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட நிலை...ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மனித மனங்களுக்கு எட்டாத அரங்கனின் உருவ நிஜத்தை அவனின் இருப்பை எங்கும் எல்லாமுமாய் பாவித்திருப்பவனை பக்தி வரலாற்றில் பதித்தே சென்றிருக்கிறார்கள்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இந்த அரங்கனை தரிசிக்கும் ஆகச் சாதாரண பக்தன் திருக்கோவிலூர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம் புரிதலுக்கும் பார்வைக்கும் அப்பாற்பட்ட அரங்கனைத் தான் கண்டதை இந்த நாயினும் கடையேனுக்குக் காட்டிக் கொடுக்கிறார்...அரங்கனை நுகர்தலும் அவனை வியத்தலும் சுலபமல்ல என்பது புரியும் போது ஆழ்ந்த அரங்க பக்தியின் வானமும் அதன் பரிணாமங்களும் வியப்பின் எல்லைகளை நீட்டித்துக் கொண்டிருப்பதையும் அங்கே அரங்கனையும் காணமுடியுமென்பதையும் மொழியின் சில சொற்களுக்குள் அடக்கிவிட முடிவதில்லை... திருவயிந்தரபுரத்தில் செங்கமல வல்லித்தாயார் ரங்க நாயகியாய் திருவரங்கனைக் காணவேண்ட...
Image
  பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும் 5 பக்தியின் இரு நிலைகள் கடினத்தன்மை கொண்டவை...உயிரைப் பணயம் வைத்து அரங்கன் மேல் ஆழ்ந்த பக்தி கொள்வது...இதில் சுயலாபத்திற்கோ தன்னலத்திற்கோ இடமிருப்பதில்லை...இன்னொரு நிலை... பக்தி செய்து பார்பதால் கிடைக்கும் பலனை நினைத்துச் செயலாற்றும் நிலை...இரண்டாவது நிலையில் வேடங்கள் தேவைப்படும்...முதல் நிலையில் வாழ்வின் அடுத்த நொடிகூட நிச்சயமற்றிருக்கும்...இருப்பினும் மனமெங்கும் அரங்கன் நிறைந்து நிற்பான்...கிடப்பான்...இருப்பான்....அப்படியான ஆழ் நிலை பக்திக்கு ஆட்பட்ட பராசரபட்டர்...தன் அன்னையிடத்தில் வருகிறார்...அம்மா...அரங்கனின் அத்யயனோத்சவம் நடந்து கொண்டிருக்கிறது...ஏகாதசி வேறு...முதலாம் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி நிறைய பெரிய அவசரம் பெருமாளுக்குத் தயாராகி வருகிறது.... கல்வெட்டின் வாசகங்களை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்... [ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் சூழந்த புணரி அகழ் சூழந்த புவியில் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டில் திருவெ...திருவாய்மொழி கெட்டருளும் பொது திருநாள் தொறும் அமுது செய்தருளும் அட்டமுது நூறுக்கு வெண்டும் அரிசிக்கும் பருப்ப...
Image
  பனவனும் மார்கழியும் அரங்கனும் அரையர் சேவையும்...4 ஆன்மீக முதலீடு செய்திருப்பவன் அரங்கன் மட்டுமே...இவ்வுலகில் ஆன்மீகம் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் அரங்கனின் முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே...அது போன்றவர்கள் உயர்ந்த குணங்களையும் உயர்ந்த சிந்தனையையும் அரங்கன் சேவையே வாழ்வின் உயர்விற்கு வழி என்ற உண்மையின் நிலையையும் மனதில் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்...சம்பாதிப்பதற்கு எத்தனையோ சுலபமான வழிகள் உள்ளன...நிறைய சம்பாதித்தவர்கள் நிஜமாகவே அரங்கனின் சேவையில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி வழிவிடவேண்டும்..இல்லையேல் அரங்கனின் அளவிலா திருவிளையாட்டுகளில் தோற்று வாழ்விழக்கவேண்டிவரும்...அரங்கனின் பூஜைகளை பற்றியும் அரங்க சேவையைப் பற்றியும் அறியாத ஆகம ஆன்மீக அடைப்படையறிவற்றர்கள் வெறும் பிறப்பால் கோவில் பூஜைகளில் ஈடுபடுவது பேராபத்தானது என்பதை உணரவேண்டும்... வன்முறைகளால் அரங்கனின் அடியவனையும் அரங்க பக்தர்களையும் இப்போது மட்டுமல்ல எப்போதுமே வீழ்த்திவிடமுடியாது... 1371 பரிதாபி வருடம் கோபணார்யர் சத்யமங்கலத்தில் 102 வயதான ஆச்சாரியர் நிகம்ம...
Image
  படைப்பொன்றின் இடைச்செருகல்களாய் புகழ்தொன்மச் சிறுபுனைவுகளை இணைத்து புரியாத மொழியின் புதிர்வரிகளால் ஆக்கப்படும் ஆக்கங்கள் எண்பதுகளில் மேலை இலக்கியங்களில் பின் நவீனமாகக் கருதப்பட்டது நிஜம்...இடைச்செருகும் தொன்மங்களின் தேர்வின் அளவு கோள்கள் படைப்பாளனின் வாசிப்பின் ஆழத்தைக் காட்டுவதாக வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் அல்லது பிரமித்துப் போவார்கள் என்பதை ஊகத்தால் தனதாக்கி வெளிவந்து தோல்விகளைத் தழுவி...பின் நவீனமென்பது அதுவல்ல என்பதை உரத்து இலக்கிய உலகிற்குச் சொல்லிச் சென்றது யாருக்கும் கட்டுப்படாத காலம்...எண்பதுகளின் இறுதி இலக்கியப் படைப்புகள்...காலத்தின் அசுரப் பிடியில் சிக்கி நெளிந்து கொண்டிருக்கின்றன...தொன்மங்கள் என்பது எழுத்துருவமற்ற சொற்சேர்க்கைகளின் நீட்சி...தொடர்ந்து...சில ஆயிரவருடங்களுக்குப் பின் எழுத்துருவம் பெற்று...சமுதாயக் கூட்டத்தின் சில பிரிவுகளால் இன்னமும் வாழ்வின் சில கணங்களில் உச்சரிக்கப்படுபவை...தொன்மங்கள் படைப்பாளியின் வாசிப்பின் ஆழத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை...செம்புலப்பெயல் நீர் போல என்ற ஒரு தொன்மத்தை இடைச்செருகலாய் கொண்ட படைப்பின் படைப்பாசிரியர் சங்க இலக்கிய...
Image
 RAGAVAPRIYAN THEJESWI HAS SO FAR PUBLISHED 14BOOKS IN ENGLISH AND TAMIL ON LITERATURE AND RELIGION...
Image
  பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...1 பனவனின் வாழ்வியல் பக்தியுடன் துவங்கி பக்தியினாலேயே கட்டமைக்கப்பட்டு பக்தியாய் முடிவு பெறும்...இது கோட்பாடல்ல...சித்தாந்தமும் அல்ல...பனவனின் வாழ்வியல் உண்மை...திருவரங்கத்தில் பிறந்த பனவன் அரங்கனின் பக்தியெனும் கண்ணினுன் சிறுதாம்பினால் கட்டப்படுகிறான்...பிறகான அவனின் விடுதலையென்பது அரங்கனிடமே காணிக்கையாகிக்கிடக்கும்...திருவரங்க பனவன் அரையராகவே அரங்கன் மேல் அனுதினமும் எல்லா இடங்களிலும் நீக்கமற தாள நயத்துடன் ஆழ்வாரின் பாடல்களை உரத்துப் பாடித்திரிகிறான்....ஒரு சில நேரம் உரத்தும்...ஒருசில நேரங்களில் மெளனமாயும்...அப்படியான அரங்க பனவனின் அபரிமிதமான பக்தியை மையப்படுத்தி நிறைய கதைகளை சுற்று மாந்தர்கள் வாழ்வின் சுற்றுக்களில் சுழலவிட்டிருப்பார்கள்...அதைப்பற்றிய கவலைகளையெல்லாம் அரங்கனிடம் சமர்பித்துவிட்ட இந்த சின்னஞ்சிறிய பனவனை நேற்று மதியம் மூன்று மணியளவில் ஆப்த நண்பரின் கைபேசி அழைப்பின் மூலம் திருவரங்கம் வரச் சொல்லுகிறான்...திருவரங்கன்... இன்றிலிருந்து பகல்பத்து தொடங்குகிறது...நேற்று மாலை திருநெடுந்தாண்டகம்...பக்தியியலின் தொன்மம் ஆடல்பாடல் வட...
Image
  உலகளாவிய இலக்கிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக இலக்கிய கர்த்தாக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...ராகவபிரியன் பின் நவீனவிய கவிதையியல் அதன் கூறுகளை இறுகக்கட்டிக் கொள்வதாகத் தெரிகிறது...தளர்வுகள் அறிவிக்கப்படப்போவதான எதிர்பார்ப்பை பின் நவீனவிய கவிதை வாசகனுக்கு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது...கவிதைக்கான குறிப்புகளை அவ்வப்போது பதிவுசெய்துகொண்ட மரபுக் கவிஞன் எதுகை மோனையில் புதிய வார்த்தைகளை களமிறக்கினான்...குறிப்புகளற்ற நிகழ்வுத் தளங்களை உத்தியின் மூலம்... உவமைகளை மாறுபடுத்திக் காட்டிய யுக்தியின் மூலம்... புதுக்கவிதை வாசகனை பிரமிக்க வைத்தது...பாஸிடிவிஸம் அல்லது நேர்மறை வாதம் சமுதாய நிகழ்தேவைகளை உள்ளடக்கி சற்று கோபமான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டால் நவீனவியம் என வாசகனை நம்பிக்கை கொள்ள வைத்தது...ஆனால்..ஜீலியா கிறிஸ்டோவா என்ற மொழியியல் ஆராய்ச்சி மாணவி ஒத்திசைவான பிரதிகளின் நகலெடுப்பை சற்று காலமாற்றத்திற்குட்பட்ட மொழிமாற்றம் செய்தால் பின் நவீனவியம் கிடைத்துவிட்டுப் போகிறதென்று ஒரு அதிர்ச்சியை மொழியின் மீது... கவிதையியலின் மீது அனாயாசமாய் வீசிப்போகிறார்...பண்டைய கவிதையிய...