யாருமற்ற சுவரதில் நாட்காட்டித் தாள்களென கிழிபட்டுக்கொண்டிருக்கிறேன்.. புதிய ஆண்டொன்றில் கிருதஞ்ஞதையென என்மீதான பரீட்சைகளுக்காக குழந்தைக் கைகளில்.. எறியப்படுகிறேன்.. அதன் குழகாக சுமந்து செல்லப்படுகையில்.. என் ஆகப்பெரிய வானம் பிஞ்சுக் கைகளால் வருடப்படும் சின்ன பரப்பென சுருங்கும்.. என் நாட்கள் சுமந்த ஆணித் தடங்களின் துவாரத் துரு பிஞ்சு விரல்களின் வருடல் பாதைகளில் வேகத் தடைகளென கிடக்கிறது.. வானத்தின் வேகத் தடைகள் குழந்தை வேகத்தை கட்டுப் படுத்துமோ....? ராகவபிரியன்
Posts
ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...1 ஒரு ஆணின் வாழ்வென்பது நினைவு தெரியும் பாலபருவத்திலேயே தொடங்கிவிடுவது பெரும் துயரம்..மேலும் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவரமுடியாத விரல்களை விடுவித்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் கொடுமையான கால கட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை ஐந்து வயதிற்குள்ளாகவும் கூட சம்பாதித்துக் கொண்டுவரவேண்டிய நிலையில் தள்ளப்பட்ட அறுபதுகளின் மத்தியில் தனக்குப் பின் எட்டுக் குழந்தைகள் பிறக்கப்போவதையறியாமல் தனது பதின்மூன்றாவது வயதில் திருவரங்கம் ஐந்தாவது பிரகாரத்திலிருக்கும் பூந்தோட்டத்தில் அந்தச் சிறுவன் ஒரு நாளைக்கு 0.50 பை விற்கு எடுபிடியாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறான்.. விடுமுறை நாட்களில் அவனின் காலம் அரங்கனின் பிரசாதங்களிலும் தோட்டத்திலும் அதன் வழியாக தாய் தந்தையுடன் கைபிடித்துக்கொண்டு கையில் தின்பண்டங்களும் விளையாட்டுப்பொம்மைகளும் பிடிவாதங்களுமாய் வரும் பக்தர்களின் பணக்காரக்குழந்தைகளின் துள்ளல் நடையை கவனிப்பதிலும் கழியும்...பிள்ளை சோர்ந்து உறங்கும் பொழுதுகள் அந்தப் பிள்ளைக்கு வாய்க்கவில்லை..அவன் கொண்டு தரும் ஐம்பது பைசாவிலும் பிரசாத மிச்சத்திலும் பசியாறும் அவன...
எனது புத்தக அவதாரம் அவதை நிறைந்தது.. ஊற்று தேடி அள்ளப்பட்டுவிட்ட காவிரி கொதிமணலில் நடப்பதானது.. யுகங்களாய் ஓடிக் களைத்த நதி மீண்டும் புத்தக வடிவையெடுப்பதற்காக சுவைத்த உதட்டு பாண மிடறின் மீந்த அமிர்தத் துளியது... எனது மொழி பிரவாக சப்தமெனில் புத்தகம் அலறுவதாகும்.. எனது வார்த்தைகள் வரிகள் கவிதையெனில் புத்தகம் தேங்கிப்போகும்.. எனது பக்கங்கள் நகர்த்தமுடியா பொழுதின் ஆழ்மன சிம்ம உறக்கம்.. எனது புத்தக அட்டை உங்கள் மனக்கொக்கியில் தொங்கப்போகும் வண்ணச் சட்டை.. கடைகளில் நான் புத்தகங்களின் நடுவில் பாதிமுகம் காட்டப்போவதில்லை.. நூலகங்களில் எனை நீங்கள் தேடவேண்டியதில்லை.. மற்றவர்கள் எனைக் கடன் கேட்டால் புதிதாக அவர்களுக்கு எனைப் பரிசாக்குங்கள்.. அவர்கள் விரல்கள் எனைப் பிரிக்கையில் மகிழ்வின் மடல் திறக்கும் வாச சப்தம் நாசித் துவாரங்களில் நறுமணமாய் எதிரொலிக்கும்.. என்னிலும் உன்னிலும் அவர்களிலும்.. வாசத்தின் விலை சுவாசமெனில் உயிரதன் உயிர்பிற்கு அவசிய..மது.. புத்தகமோ கவிதையோ நானென நினைத்தால் அவதார நோக்கம் சிதையலாம்.. என்னையதில் தேடாதீர்கள்.. இது ரசவாதமல்ல.. என் புத்தகம் வாங்க உங்கள் நிழலென ஒட்டியும்...
ஒரு கோவிலின் புனிதமென்பது தொடர்ந்து காப்பாற்றப் படவேண்டிய ஒன்று..தொன்று தொட்டு ஆயிரமாயிர வருடங்களாய் பின் பற்றப்படும் நடைமுறைகள் ஆகமவிதிகள் நிரூபிக்கப்பட்ட நன்மைகளை மக்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்கிவந்திருக்கின்றன..அது போன்ற புனிதமிகு ஆகம விதிகளை பின் பற்றி பூஜைகள் செய்யப்படும் கோவில்களில் பூஜாவிதிகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.. கோவில் பூஜைகளைச் செய்யும் உரிமை அந்த குலத்தில் அல்லது குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டும் தரப்படுவதில்லை...ஆகமங்களை கசடறக் கற்றிருக்க வே ண்டும்..தீட்சை பெற்றிருக்க வேண்டும்..நியமங்களையும் நித்ய கர்மாக்களையும் தவறாது கடை பிடிக்கவேண்டும்...நமது மதத்தின் தத்துவங்களில் தர்மம் சார்ந்த நெறிகளில் போதிய ஞானம் பெற்றிருக்க வேண்டும்...சம்ஸ்கிருத அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்..பூஜைகளின் கால நேர நிர்ணயங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்..அது தான் சரியான தகுதியென்று வைகானஸத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...அப்படியின்றி தன்னலத்திற்காக கோவில் பூஜையை பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுதல் மேற்கண்ட தகுதிகள் இருந்தாலும் மஹா பாவம்..என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன....
பொங்கல் அரங்கன்
நக்கீரரே புகழ்ந்து போற்றிய[ இடஒதுக்கீட்டை சிறிதும் எதிர்பாராமல்] தன் கவித்திறமையால் சங்க இலக்கியங்களில் இடம்பிடித்த ப்ராமண கவியான கபிலர்..குறிஞ்சித்திணையைப் பாடுவதில் வல்லவர்...புற நானூற்றுப்பாடலொன்றில் பொங்கல் விழாவை அருமையாகக் குறிப்பிடுகிறார்.... "கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு மனைச் செறிந்தவளே...வாணுதல் இனியே... காய் நெல் கவளம் தீற்றிக் காவு தொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி வருதலானார் வேந்தர்..."[ கபிலர்] இப்படியெல்லாம் போற்றதலுக்குரிய பொங்கல் திரு நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவரங்கத்தை முகம்மதிய படையெடுப்பு புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலம்..கொடிய வரலாற்று நிகழ்வின் காயங்கள் இன்னும் ஆறாத...நமது கலாச்சாரத்திற்கு விடப்பட்ட ஒரு துயர சவாலால் நமது பண்டிகைகள் களவாடப்பட்ட காலகட்டத்தில் அரங்கனின் தரிசனம் சுவரெழுப்பி மூடப்பட்டிருந்தது..உற்சவ மூர்த்திகள் தமிழக எல்லைகளைக் கடந்து காடேகிவிட..நமது ஆச்சாரியர் ஸ்ரீமான் நிகம்மாந்த மஹாதேசிகன் மனம் வெதும்பி கொள்ளிடம் கடந்து ஆசிரம் அமைத்து தங்குகிறார்...பக்தியின் மிகையென எதுவுமி...
யானையின் காடு
யானைகளின் காட்டுக்குள் தான் கும்கிகளும் பிறக்கின்றன.. எதோ ஒரு யானையது என்ற காதம்பகம் கொடியது.. யானைத் தடங்களின் நடுவே வெள்ளையும் இடைக்கோடுகளும் இடல் வேகப் பதாகைகள் நடல் இடை மறித்து தண்டவாளங்கள் செலல் யானை தின்னிகளின் கும்கி வியூகங்கள்.. கும்கிகளுக்கும் மத்தகங்களும் தந்தங்களும் பதித்த பிரம்ம பட்டரைகளை மூடமுடியாத வலியின் போர்ப்பிளிறல்கள் காடுகளெங்கும் எதிரொலிக்க.. வலிந்து திணிக்கப்பட்டு தடதடத்து வரும் ஒரு தண்டவாள யமனை யானைத் தன்காலால் உதைக்கும் அப்பொழுதில் துண்டாடப்படுவது துயரம்.. கும்கிகளுக்குத் தரப்படும் பச்சையங்களும் கவளங்களும் காடுகளெங்கும் நிறைந்திருக்கையில் வீடுகளிலும் வீதிகளிலும் துதிக்கையால் ஒரு புத்தகத்தின் அச்சிட்டப் பக்கத்தைச் சுருட்டி மத்தகத்திற்குக் கடத்துவதென்பது நம் காலத்தின் இலக்கியக் கொடுமை.. கும்கிகளுக்கெதிரான ஒரு ஈ.புத்தகம் பிறக்கப்போகும் பிரசவ பூமியை சுற்றிச் சுற்றி குலவையிடும் யானைக் கூட்டம்... {திருச்சியில் ...18.02.2018ல் வாருங்கள் ... கோடுகளற்ற காடுகள் படைப்போம்..} ராகவபிரியன்