FOR RAGAVAPRIYAN'S "ZEST WITH LITERATURE"Rs 100 AND"RASAVATHA KAVITHIGAL"Rs,100 INTAMILcontact ragavapriyansrajagopalan@gmail.com.
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்டி நிலையத்தில். சக ஊழியர்கள் அவன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவனென்பதால் அவனை டூட்டியில் விட்டுவிட்டு திருனெல்வேலி நாகர் கோவில் எனும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்.. அது கைபேசி உடலுடன் ஒட்டப்படாத காலம். தொலைக்காட்சிப் பெட்டி என்ற சொல்கூட வழக்கில் இல்லாத நகர்த்த கடினமான காலமது..காட்டிற்குள் தனித்து விடப்பட்ட ஒரு மானின் மருண்ட பார்வையுடன் நிலையத்தைச் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். நேற்றிரவிலிருந்து அவன் பணியில் இருக்கிறான். விடியல் பனிச்சூழலும் பசியும் நகர்த்தவியலா நேரமும் அவன் தோளில் தேனீர் அருந்தியாக வேண்டிய சுமையை ஏற்றத் தொடங்கியது. சுமைகள் நாவிலிருந்து தோளில் ஏறுகையில் ஒருபோதும் சறுக்குவதில்லை.. நிலையத்தின் அருகில் இருப்பது ஒரே ஒரு தேனீர் கடை.. அது காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இயங்கும். மாலையிலும் அப்படித்தான். வேறு வழியில்லாமல் அங்கே அவன் தேனீர் அருந்தும் போது அதில் கலந்திருக்கும் எருக்கஞ்செடியின் காய்ந்த குச்சிகள் வ...
Comments
Post a Comment