05/01/2018 அன்று முக நூலில் வெளிவந்த இந்தக் கவிதைக்கான அன்பு நண்பர் பிரபல கவி தஞ்சைத் தவசியின் பின்னூட்டம்..கீழே தரப்பட்டிருக்கிறது..
உனக்கு ஒரு மைதானம் இருந்தது..
அதைச்சுற்றி மின்சார வேலியிட்டிருக்கிறாய்..
அதில் சிக்கிய சில நாய்களும் எலிகளும்
நிணவாடையடிக்க அகற்றப்படாமல் கிடக்கின்றன...
அங்கே நிறைய மைதானங்கள் இருக்கின்றன...
சில வேலியிட்டபடியும்...இல்லாமலும்..
எனக்கும் ஒரு மைதான ஆசையிருப்பதால்
இடைத் தரகர் இன்றி
பார்த்துப் போக வந்தேன்...
சில நாய்கள் நான் புதிது என்பதால்
குரைக்கத் தொடங்கின...
உடனே எழுந்து வானில் நிலாவானேன்..
நாய்க்கடித்தால் முப்பதாறு ஊசிபோட்டுக்கொள்ளும் பயம்..
வேறொன்றுமில்லை..
நாய் குரைக்கும் சப்தம் கேட்டு
யாருமற்ற உன் மைதானத்திலிருந்து
இருமுகிறாய்...
அதை இடி என்கிறாய்...
உன் வயோதிகம் அறிந்த பக்கத்து மைதான
தூய நிலவரிப்பட்டா உள்ளவர்கள்..
உன் வேலிதாண்டி உள் நுழைந்து
ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள்...
நீ எழும்ப முடியாத்தைப்பார்த்ததும்
நான் வானிலிருந்து கொஞ்சம் கீழிறங்க
அப்போது
குரைக்கும் நாய் சத்ததிலிருந்து
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா..
என்ற குரல் கேட்கிறது..
நிலாவைப்பார்த்து நாய் குரைத்தால் என்ன
நரி ஊளையிட்டால் என்ன...
என் குழந்தைக்கு
உன் மைதானத்திலிருந்து
நிலாச்சோறு ஊட்டப்போவதில்லை....
ராகவபிரியன்
No comments:
Post a Comment