ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/18 இந்த எறும்பிற்கு இன்றைக்கான பருக்கை பெரும் கனமாகிவிட்டது.. மழைக்கால பெருவெள்ளத்தில் நீந்தவியலா கால்களில் பட்ட ஒற்றை சோற்றுப் பருக்கைக்கான காயங்கள் வலிக்கிறது.. மெல்ல உந்தி பருக்கையைத் தூக்குகையில் எத்துனை எத்துனை வாய்கள் பங்கிற்கான போராட்டத்தில் எல்லாப் பக்கமும் இழுக்கின்றன.. இந்த எறும்பின் மீளவியலா பசித்த காலத்தைப் பிடுங்கிவிட்டால் புற்று திரும்பும் பற்றைத் துறந்தாக வேண்டும்.. எந்நேரமும் எனக்கு முன்பிறந்த கனத்த மானுட கட்டை விரலொன்று அவனின் பருக்கைப் பொழுதில் அறியாமல் ஊர்ந்ததால் இவ்வுடல் தேய்த்து ஆன்ம விடுதலைத் தரக் கூடலாம்.. இருப்பினும்.. எனக்கான காலத்தின் இப்பருக்கை காய்ந்து இழுக்குமளவு இலகுவாகும்.. அதையென் புற்றிற்கு நொண்டி நொண்டி நகர்த்திச் செல்லும் வரை என் பிடியையும் ஏன் என் பிராணனையும் கூட விட்டுவிடுவதாய் உத்தேசமில்லை.. ராகவபிரியன் தேஜஸ்வி...