ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6 1. வாழ்வுக்கடல் நடுவின் மரமொன்றில் இவனின் சொந்தக் கூடமைதல் வேண்டும்.. அகழ்தல் இலகுவான வாழ்வின் தரைப்பகுதி தருக்களில் வேர் அரிக்கும் கரையான்கள் ஏறக்கூடும். குரூர மந்திகள் கூட்டைப் பியக்கத் தாவ சில காகங்கள் தலை சாய்த்து... இடவலமாய் அழுத்தித் தேய்த்து... சுய அலகை சுத்தம் செய்ய அமரக்கூடும்.. இவனின் மெலிந்த கிளை தொங்கும் குடுவைக்கூட்டை விஷ நாகங்கள் தவழ்ந்தேறி.. தன் பிளவு நாவால் தீண்டக்கூடும். ஆதலால்.. சதா அலைவீசும் கடல் நடுவின் தனிமைத் தருவில் புயல் தாங்கி செயல் கூடும் கூடமைந்தால்... வாழ்வின் தருவெங்கும் பழம் உதிக்கும். இளைப்பாற இடமின்றி கூடமைக்கத் தடுமாறும் பிராமணனும் குருவியும்... பறந்தலையும் வானம் ஒன்றன்றி வேறல்ல.. ஆமாம்..ஒன்றன்றி வேறல்ல.. இன்று.. கூடமைக்கும் நெற்தோகை தற்சந்தை விலையதிகம். மயிற்பீலி பிளந்து அளந்து வடிவமைக்கும் இவனின் அலகுகளில் வலியதிகம்.. தேடித் தேடிச் சேர்த்த பனையோலை தென்னங்கீற்று நுகர்வலைச்சல் இவனின் சிறகுதிர்ந்த இறகுகளை அயர்த்திப் பார்க்கும்.. எனினும் இரு அறையே போதும் தான். இணையிருக்கும் வாழ்வின் இருள் போக்க மின்மினிகள் பி...
Posts
நின்றதெந்தை ஊரகத்து இருந்ததெந்தை பாடகத்து.. அன்று நான் பிறந்திலேன்... பிறந்தபின் மறந்திலேன்.. [ திருமழிசைபிரான்] ஆச்சர்யம் என்பதன் பொருள் ஆச்சர்யமானது. அதே போன்றதுதான் ஆத்மாவைப் பற்றிய அறிவும். ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யங்களைப் பற்றிய அலகுகள் வெவ்வேறானவை. சிலர் ஆகச்சிறந்த படைப்பைக்கூட அலட்சியமாக நினைப்பார்கள். சிலருக்கு வாரமலர் கவிதைகள் கூட ஆச்சர்யமளிக்கும். அப்படித்தான் ஆத்மாவைப் பற்றி எவராவது பேசினால் அது ஆச்சர்யமளிக்குமென உபநிஷத் பேசுகிறது.. ஸ்ரவணாயாபி பஹூபிர்யோ ந லப்ய: ஸ்ருண்வந்த்தோபி பஹவோ யம் ந விதயு.. ஆச்சர்யோ வக்தா ருஸலோஸ்ய லப்தாஸ்சர்யோ ஜ்ஞாதா குஸலா நுஸிஶ்ட: ஆத்மாவைப் பற்றிய தத்துவங்கள் எவருக்கும் புரிபடாத ஒன்று. ஆத்மாவைப் பற்றி பேசுபவன் ஆச்சர்யத்திற்கு உரியவன் என கடோபனிஷத் சொல்கிறது. ஆத்மாவைப் பற்றி குருமூலம் கற்றறிருந்திருந்தாலும் அவன் வியப்புக்குரிவன் தான் என அறியத்தருகிறது மேற்கண்ட ஸ்லோகம். அதைத்தான் பகவான் கிருஷ்ணர் கீதையில் இப்படிச் சொல்கிறார்... ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதே நம் ஆச்ஸ்ர்யவத்வததி ததைவ சாந்ய: ஆச்சர்யவச்சை நம ந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வாப்யே நம் வேத ந சைவ கஸ்சித்: ...
சில நடைபயிற்சிகள் சிக்கல்களில் கொண்டு சேர்த்துவிடுகின்றன. எல்லைகளையும் மணித்துளிகளையும் நிர்ணயித்துக்கொண்டு நடைபயில்வது தேக நலனின் எல்லையை நீட்டிக்கத் தான். எனினும் பேச்சின் எல்லைகளை நிர்ணயிக்கத் தவறிவிடுவது நடையின் முடிவில் வீடிற்கு பதில் சிக்கலில் கொண்டு சேர்த்து விடும். விடிந்தும் விடியாத பொழுதில் காஞ்சி வீதிகளில் நடக்கத் தொடங்குகிறான் இவன். வழமைபோல் நெற்றியில் பட்டையும் சிகப்பு வர்ண உடையும் முடியற்ற தலையின் பின்புறம் இளைத்து வெளுத்த குடுமியும் உடன் வர தலை குனிந்து நடந்து கொண்டிருக்கிறான்.. அவ்வப்போது நீண்ட தாடியைத் தடவிக்கொள்கையில் தனகென கொள்கையெதுவும் இல்லையென்பதையும் குறிப்புணர்த்தியபடி நகர்ந்து கொண்டிருக்கிறான். திருப்பதி தேனீர் கடையில் எல்லோருமே நின்றுகொண்டுதான் தேனீர் அருந்தவியலும். கடைவாசலில் இரண்டு எவர்சில்வர் வட்ட மேஜையும் அதில் சில மீந்த தேனீர் காப்பி காய்ந்துகொண்டிருக்கும் வட்டாக்களும் இருக்கும். அரை நாட்டுச் சர்க்கரை தேனீர் வாங்கிக்கொண்டு எவர்சில்வர் வட்ட மேஜையில் வைத்து ஆற்றத் தொடங்குகிறான் இவன்.. அருகில் ட்ராக் பேண்ட்டும் டீ சர்ட்டும் கழுத்தில் தொங்கும் சிலுவையும...
இறையை உணர்தல் அல்லது அரங்கனை அறிதல் என்பது அமைதியின் தேடல் அல்ல. அமைதியின் தேடல் கூட இறைமையின் வடிவமெனச் சொல்லாம். ஆனால் இறையை உணர்தல் என்பது ஆன்மீக அனுபவ அறிவு நிலையின் உச்சம். அமைதியின் தேடலும் இறையினை தேடுதலும் வெவ்வேறானவையென உரத்தே சொல்லவியலும். இறையியல் தத்துவங்கள் எந்த மதத்தினுடையதாக இருப்பினும் அதை சுயமுன்னேற்றத்திற்கு பயன்படுத்துதல் அனுமதிக்கப்படாத ஒன்று. அப்படியான பயனை நோக்கிய நகர்வு இறையை உணரும் தேடலின் திசையைத் தொலைத்தல் போன்றது.. வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட ஆன்மீகச் சடங்குகளின் வழி அருவமான அரங்கனின் உருவத்தைக் காண்பதென்பதும் இயலாத ஒன்று. ஆயினும் தொடர் ஆழ்மன இயங்காற்றல் ஓரளவு அரங்கனின் உருவக் கோட்டுருவை அகக் கண்ணில் கொண்டு நிறுத்தவியலும். அவ்வாறான இயங்கு நிலையில் கிடைக்கும் மனச்சலனமற்ற நிலை அமைதி நிலையாகாது. புறவய சிந்தனைகள் ஆழ்மன இயங்கு நிலையை கலைத்துப் போடும் ஆற்றல் கொண்டவை. மேற்சொன்னவற்றின் நுண்மக் கூறுகளை அறிந்து கொண்டால் அரங்கனை அறியவியலும். அதுபோன்ற புறவய சிந்தனைகளின் தொடர் தாக்குதல் ஆழ்மன இயங்கு நிலையை சற்றே அசைக்கத் தொடங்கியதின்று. மெல்ல புறப்பட்டு காஞ்சியின் இய...
ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக இந்துமதத்திலிருக்கும் தொழில் சார்ந்த கூட்டு வாழ்வு முறைமையை சாதியெனும் ஒற்றைச் சொல்லை அடையாளம் கண்டு சாதீய வெறுப்பெனும் ஆலகால விஷத்தை ஆட்சியதிகாரத்தை வைத்து மெல்ல மெல்ல இந்திய சமுதயாத்தின் நாடி நரம்புகளில் செலுத்திச் சென்றுவிட்டான். இந்தியாவை கொள்ளையடிக்க வந்தவர்கள் பொருளாதார அறிவுசார் ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி மானுடத்தை மந்தைகளாக்கினால்தான் ஆட்சிசெய்யவியலும் என்பதை புரிந்து இந்து நாட்டின் மக்களை மதம் மாற்றி மந்தைகளாக சிறு சிறு பகுதிகளில் அடைத்துவிட்டார்கள்.. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் இலக்கியங்களை மொழியறியாமலே தவறான குரூர புத்தியால் விளைந்த குயுக்தியால் அவர்களின் வாழ்வைச் சிதைக்க வாழ்வாதாரத்தை சூறையாட அவர்களின் குடும்பப் பெண்களை கவர தவறாக மொழிமாற்றம் மொழியாக்கம் மொழிபெயர்ப்பு செய்து ஒரு நூற்றாண்டுகளாய் வெறுப்பை வளர்த்து அந்தப்பிரிவின் வாழ்விடங்களை அவர்களின் அடையாளங்களை அவர்களின் உயிரைக்கூட பறித்த செயலை இன்னமும் மொழி கால தேச அரசியல் வழிகளில் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பெண்களை காதலெனும் குரூர ஆயுதத்தால...
The Englishman, to sustain his policy of divide and rule, looked upon the ancient occupational communities of Hindu society and branded them all with a single word—caste. Then, through the machinery of power, he slowly infused the deadly venom of caste hatred into the arteries and veins of Indian civilization. Those who arrived to plunder India understood a cruel truth: that humanity could be ruled only when reduced to herds. Exploiting economic and intellectual disparities, they fractured the people of this sacred land, converting faiths, dividing communities, and confining men and women within countless fenced enclosures of identity. Without even knowing the language of a people, through malice born of distorted intellect, they mistranslated, misinterpreted, and misrepresented the literature of a particular community. For more than a century, they nurtured hatred, ravaged livelihoods, coveted the women of those families, erased homes and identities, and even took lives. Yet, to...
THE ARTICLE IN TAMIL WHICH HAD ATTRACTED WIDE SPREAD APPRECIATION AND ALSO THREATS FROM THE TAMIL LITERARY FIELD HAS BEEN TRANSLATED TO ENGLISH BY AI AND GIVEN A POETIC EDIT BY YOUR RAGAVAPRIYAN THEJESWI At that time, he was pursuing his P.U.C. studies. The years were 1977–78. Every day he journeyed by train from Tiruvarur to Poondi College, a ceaseless pilgrimage upon rattling rails. Cinema was then the sole nourishment for the hunger that gnawed at the hearts of the young. It was the dawn of a new dream-age, when Kamal Haasan and Rajinikanth had begun to eclipse even the towering shadows of Sivaji Ganesan and M.G.R. The film industry, meanwhile, was growing weary of pouring the same old liquor into differently shaped bottles, striving in vain to intoxicate audiences like him. Yet he had not seen 16 Vayathinile. Those were the days when the films of Adoor Gopalkrishnan, Satyajit Ray, and Mrinal Sen left him bewildered and restless with their incomprehensible brilliance. Among Ta...