Posts

Image
  கோபாலய்யரின் சோம்பலை பேட்ரியார்க்கியென கடுமையாக சாடிக்கொண்டிருந்தாள் யாழினி மாமி. ஒரு நாளாவது கிட்ச்சன்ல எப்புடி கஷ்டப்படறோம்னு ஒங்களக்குத் தெரியறதா எனக் கத்திக் கொண்டிருந்தாள்.. ஊஞ்சலில் அமர்ந்து விஜய்யின் வேட்பாளர் பட்டியலை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் கோபாலய்யர். யாழினியின் கூச்சலில் கோபம் உச்சத்திற்கு ஏறியது.. தோ பாரு யாழி.. எங்கிட்ட அனாவசியமா கத்தாதே.. நேக்கு சமையல் ரொம்ப நன்னா பண்ணத் தெரியும். நீ கிச்சன விட்டுக்கொடுக்கமாட்டே அதான் நான் உள்ள வரல. பிஜேபி திமுக இருக்கறதுனாலதான் தமிழ் நாட்டுக்குல்ள வரலன்னு சொல்றாளோன்ணோ.. அது மாதிரி தான்.. நான் உள்ள வந்தேன் என்னோட கிச்சன் ஆர்டிஸ்ட்ரிய பார்த்து மூக்குல சூடான இரும்புக்கரண்டியால சுட்டுப்பே ஆமாம்.. சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் கோபமாய் வந்த அய்யர் இரண்டு மூன்று கிண்ணங்கள் சில ஸ்பூன்கள்,,, கலக்குவதற்கான விக்கர்.. இன்னபிற... எல்லாவற்றையும் எடுத்து வைக்கத் தொடங்கினார்.. என் சமையலறையில் நீ கேக்கா இல்லை பேக்கா என சப்தமில்லாமல் ஹம் செய்யத் தொடங்கினார்.. வியப்புடன் அய்யரைப் பார்த்துக்கொண்டிருந்த யாழினி ஏன்ணா கோவிச்சுண்டேளா.. நேக்கு ...
Image
  போஸ்டர் கணக்குகள்.. சிறுகதை -------------------------------------------- கோபாலய்யருக்குக் கோபம். வாசலில் இருசக்கர பழைய வண்டியை உதைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது களைத்து யாழினி ரெடியாகிவிட்டாளா எனவும் பார்த்துக்கொண்டிருந்தார். யாழினியோ மடிசாரை கடந்த ஒரு மணி நேரமாக கட்டிக்கொண்டிருந்தாள்..இன்னமும் திருப்தியில்லாத குரலுடன்..தோ வந்துட்டன்.. செத்த இருங்கோ.. வண்டிய ஆப் பண்ணிடாதேங்கோ.. எனக் கத்தினாள்.. இப்படித்தான் கோபாலய்யர் 1977 ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சிக்காக போஸ்டர் ஒட்ட பழைய சைக்கிளை கிளப்பினார். இரண்டு சக்கரங்களிலும் காற்றுப் போயிருந்தது. அப்போது அய்யருக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. ஒரு வழியாய் பஞ்சர் சைக்கிளில் போய் ஒரு போஸ்டரை பேரூர்ந்து நிறுத்தத்தில் ஒட்டியதும் காத்திருந்த ஒரு மாடு அதைத் தின்று விட்டது.. ஆனால் எதிர்கட்சிகள் ஜெயித்துவிட்டன..கிளம்பும் போது வண்டி மக்கர் செய்தால் நல்ல சகுணம் என்பதை இந்த வருட பஞ்சாங்கத்தில் சேர்க்கச் சொல்லி குட்டி சாஸ்திரிகளிடம் சொல்ல வேண்டுமென நினைத்தார்.. அப்போது எமர்ஜென்சியை எதிர்த்து எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்திருந்தன.. அதையும்...
Image
அந்தக் காட்டு வழியில் மீண்டும் அவன் நடக்கத் தொடங்குகிறான். ஏற்கனவே பாதையோரம் பட்டா போட்டு படுத்திருப்பவர்கள் அவன் மீது கல்லெறியத் தொடங்குகிறார்கள்.. ஒவ்வொன்றாய் எடுத்து முடிவற்ற பாதையின் முள்ளடர்ந்த புறம்போக்கு இடமொன்றில் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கத் தொடங்குகிறான்.. மெல்ல மெல்ல உயர்ந்த கற்குவியல் பொறுமையின் மேகம் தவழும் தெய்வீகக் குன்றமென உயர்ந்து நிற்கிறது.. அவ்வரலாற்று உச்சியில் எக்கண்ணும் எட்டாவிடத்து நிரந்தர குடிசையில் நிலவொளியில் நித்ய வாசம் செய்கிறான்... அது காலப்போக்கில் குன்றக் கோவிலாகிவிட்டது... பட்டா உடையோர் பம்முவார்களா என்ன? எவரும் நெருங்கவியலா அவ்வுச்சிக்கோவிலில் காற்றில் ஆடியபடி கவி நடனமிடும் காலத்தை வென்றெரியும் தூங்கா விளக்கொளியின் மீதுதான் இப்போது கைவலிக்க கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.. கற்கள் தாக்கினால் குன்று என்ன குனிந்தா நிற்கும்...? ராகவபிரியன்  
Image
கோபாலய்யர் கிணற்றிலிருந்து நேராக சில்லென தண்ணீர் கொட்டும் குழாயைத் திறந்தார்.. காற்றுதான் வந்தது.. யாழினி மாமிக்கு சிரிப்பு வந்தது.. ஏன்ணா.. மோட்டார் போட்டுட்டு பைப்ப ஓபன் பண்ணனும்ணா.. நீங்க அபிஷ்ட்டுன்னு அப்பப்ப ப்ரூப் பண்றேளே.. சொல்லியபடியே மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தாள்.. சட் டென அதீத சில்லிட்ட தண்ணீர் ஏந்திய கைகளில் கொட்டியதும் கோடையின் வெப்பம் மட்டுமல்ல அய்யரின் மனமும் குளிர்ந்தது.. கை கால்களை நன்றாக தண்ணீரில் கழுவிக்கொண்டார். இரண்டு கைகளாலும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக்கொண்டார்.. வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு முகத்திலும் உடலெங்கும் பட்டை பட்டையாய் விபூதி பூசியபடி சந்தியா வந்தனம் செய்யத் தொடங்கினார்.. யாழினி மாமிக்கு அய்யரின் மாற்றம் அதிசயமாய் பட்டது.. ஏன்ணா..என்னாச்சு.. நித்ய கர்மா பண்றதுன்னு எப்போ முடிவு பண்ணேள்.. அது ஒன்னும் இல்லடி.. எலெக்ஷன் வருதோன்னோ.. அதான். கவர்மெண்ட் மாறனுமோன்னோ.. அதான்.. மாற்றம் மட்டும் தானே மாறாததுன்னு எல்லோரும் சொல்லிண்டிருக்காளோன்னோ.. அதான்..ஏப்ரல் ஒண்ணாம் தேதி இங்கிரிமெண்ட் வரனுமோன்னோ..அதான்.. ஓம் பூர்புவஸுவ:.. என்று காயத்ரி மந்திர...
Image
  மானுடத்தின் வாழ்வியல் பொழுதுகள் ஒவ்வொரு நொடியும் தவறாமல் பதிவிடப்படுகிறது. இவ்வுண்மையை மானுடம் அறிந்திருக்கிறதா என்பது தான் புதிர். சித்ரகுப்தனால் இம்மையின் கணக்குகள் மறுமையில் சரிபார்க்கப்படுகிறதாம். நன்மை மிகுந்திருக்கும் கணக்கின் மானுடம் சொர்க்கம் செல்கிறான். இனியொரு பிறவி அவனுக்கில்லையென கருணீகர் புராணம் சொல்கிறது. மானுட வாழ்வியல் கணக்குகள் துல்லியமாக சித்ரகுப்தனால் கணக்கிடப்படுகிறது. அவைகள் அழிக்ககியலா பதிவேடுகளில் பதியப்படுகிறதெனவும் அறியவருகையில் வியப்பு இமையை இறுக்கிப் பிடிக்கிறது.. தீமை மிகுந்து நிற்கும் கணக்கின் மானுடம் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். முற்பிறப்பின் தீமைக்கான பலன்களைச் சுமந்தே ஆகவேண்டும். அப்படியான இன்னொரு பிறப்பில் அனுபவிக்கும் துன்பங்கள்தான் கர்மா என நம் புராணங்கள் சொல்கின்றன. அந்த முற்பிறவி தீராதீமையின் எச்சங்களில் ஒரு கடுகளவு நன்மை செய்தவன் காஞ்சியில் பிறக்கிறான். அல்லது காஞ்சியில் இருக்கும் சித்ரகுப்தர் கோவில் வாசலையாவது கடந்து செல்லும் பாக்கியம் பெறுகிறான். கடந்த எட்டு மாத காஞ்சியின் வாழ்வில் சித்ரகுப்தன் கோவிலைக் காணும்போதெல்லாம் ஒரு கோபம் விருட்டென ...
Image
  உன் குளியலறை நறுமண சவுக்காரக் கட்டியில் ஒட்டியிருக்கும் பாம்பு தவ நிலை ஒற்றை முடி உன்னிலிருந்து உதிர்ந்ததாகவும் இருக்கலாம்.. உன் கழிவறை சுத்தம் செய்ய சுவரில் சாய்த்து வைத்திருக்கும் விளக்கு மாற்று ஈர்க்குச்சிகள் உன் தென்னை மர உச்சத்திலிருந்து உருவப்பட்டவைகள் தான்.. கழுவிச் சுத்தம் செய்ய குடம் குடமாய் நீர் வெளியேற்று தொட்டிக்குள் சதா மிதந்து கொண்டிருந்த உன் வாழ்வுக்கப்பலின் திசைமாணி இதோ தரை தட்டி நிற்கிறது.. இனி உன் செரித்த காலங்களை அதன் நாற்றங்களை வெளித்தள்ள வெளியேற்றுத் தொட்டியின் விசைப் பொத்தானை ஆயிரம் முறை அழுத்தினாலும் வெளியேற்று நீர் வாரா உன் தொட்டியில் அவை சுற்றிக் கொண்டேதான் இருக்கும் நேற்று பெய்த மழையில் வாழ்வின் வெட்ட வெளியில் காயப்போட்ட நீ எடுக்க மறந்த உன் வீட்டு சாம்பார் தூளுக்கான மிளகாய் வத்தல் நனைந்து உன் கழிவறையெங்கும் மிதக்கிறது பார்.. பறிக்கப்பட்ட திராட்சை பந்தல்களின் மேல் போர் தொடுப்பதால் சுற்றிச் சுற்றி வந்து மொய்க்கும் ஈக்களை முற்றாக அழிக்கவியலாது.. இனி உன்னால் கழிவறையிலிருந்தும் குளிக்காமல் வெளியேற வியலாது.. புரிந்து கொள்.... நிர்ணய நாள் வரை வாழ்ந்து முடிக்க...
Image
  DOMESTIC JNANPITH DISSONANCE Once, in an hour that had slipped its own shadow, Gopālayyar found himself late for the office. In a haste that belonged not to the body but to some unseen misalignment of fate, he wore his shirt inside out and departed. In the flickering realms of cinema, a wife serene, composed, a soft crescent of devotion upon her lips would fasten the husband’s buttons with ritual grace, plant upon his cheek a ceremonial kiss, and dispatch him into the day with a benediction of waving fingers. But such orchestrations belong to celluloid heavens; in the austere thresholds of an agrahāram, do such gestures descend into lived mornings? For Gopālayyar, these were no more than dream fragments....half-remembered, never embodied. His temper, too, walked beside him like an uninvited twin.... On a day when time lay stretched and permissive, he had, by gesture alone, entreated Yāzhini for a kiss. The response was swift, elemental.... a flung ladle, a stray drop of scalding ...