ஈஸ்வர அய்யர் மஞ்சள் கலர் ஜிப்பாவை அணிந்து கொண்டார். அது கொஞ்சம் பளபளப்பாக காணப்பட்டது. உடனே கழற்றி நன்றாக சுருட்டி ஒரு முறுக்கு முறுக்கினார். கசங்கலாக மாற்றி மீண்டும் அணிந்து கொண்டார். கண்ணாடியில் தாடியை நீவிவிடும் ஸ்டைலில் மூத்த எழுத்தாளரின் மெல்லிய கை நடுக்கத்தை பழக்கப்படுத்திக்கொண்டார்.. ஆடியின் உள்ளே ஆடியபடி தன் பிம்பத்தின் பின்னால் யாழினி அயர்ன் பாக்ஸை ப்ளெக்கில் சொருகி சூடுபடுத்துவதைப் பார்த்தார். என்னடி பண்ற... ஏன்ணா புத்தகச் சந்தைக்குப் போகப்போறேள் ங்கறத்துக்காகத்தானே நன்னா அயர்ன் பண்ணி ஒங்க அதிர்ஷ்ட ஜிப்பாவை பளபளன்னு வச்சிருந்தேன். ஏன் இப்புடி கசக்கி கண்றாவியா போட்டுண்டிருக்கேள்..கழட்டுங்கோ... ஒரு செகண்ட்ல மறுபடியும் அயர்ன் பண்ணித்தந்துடறேன்.. ஒன்னும் வேண்டாண்டி... நான் என்ன பொஸ்தகம் வாங்கவா போறேன். என்னோட பொஸ்தகமெல்லாம் யாராவது வாங்கறாளான்னு பார்க்கத்தாண்டி போறேன். அபிஷ்ட்டு.. பொறப்படறப்ப எதுத்தாப்ல வராம...அபசகுணம் மாதிரி அயர்ண் பண்றாளாம்.. இல்லண்ணா ஒங்கள பார்த்தா எதாவது புது எழுத்தாள பொண்ணோ ஆண்டியோ ஒங்களண்ட ஆட்டோகிராப் கேப்பா.. அப்புடியே ஒரு போட்டோ எடுத்துக்கறேன்பா..ஒ...
Posts
சென்னை புத்தகச் சந்தையின் இருப்பைப் பற்றிய கூக்குரல்கள் இன்றைய இளம் தலைமுறைகளின் காதுகளில் விழுகிறதாவெனத் தெரியவில்லை.. இலக்கியம் கலாச்சாரம் பண்பாடு அன்பு பரிதாபம் கோபம் அக்கறை போன்றவைகள் பூசப்பட்ட எழுத்துக்களின் முதல் வரியைக்கூட சமகால இளம் தலைமுறையினர் எவரும் படிப்பதாகத் தெரியவில்லை. இப்போது கோடிக்கணக்கான மானுட கண்கள் வாசிக்கும் ஒரே ஒரு புத்தகம் முகநூல் மட்டும் தான் என்பது உலகளாவிய உண்மை. அப்படியான முகநூலில் எந்தவிதமான எழுத்து அதிக வாசகர்களிடம் ஈர்ப்பைத் தருகிறதென ஆராய்ந்ததின் விளைவை இங்கே தருகிறேன். அரசியல் மற்றும் சினிமா பற்றிய சிற்றின்ப எழுத்துகள் அதிக வீச்சுடன் நிறைய வாசகர்களை சென்றடைகிறதென்பதைத்தான் மறுக்கவியலவில்லை. அதுவும் குறிப்பாக தமிழ் இளம் தலைமுறை வாசகர்கள் அதிகம் வாசிப்பது சினிமா மற்றும் நடிப்பிலிருந்து பாய்ச்சல் அரசியல் நிகழ்த்தும் நவீன சமூக விழிப்புணர்வு பற்றிய எழுத்துக்களே.. போகட்டும்... ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் எனும் ஆங்கில சினிமா அதாவது ப்ளாக்பஸ்டர் சினிமாக்களின் நாயகி உலக இளைஞர்கள் அத்துனை நபர்களுக்கும் தெரிந்திருப்பது எப்படி என்பது தான் அதிதீவிர ஆராய்ச்சிய்க்குப...
Ragavapriyan Thejeswi 's English e-books and paperbacks are available in various genres on Amazon . Additionally, e-books in Tamil and English are available on Amazon and Pustaka . Ragavapriyan Thejeswi's poem "Alchemical" is published by Anamika . Alphabets are also available from the author. Readers and book sellers could contact Ragavapriyan Thejeswi at Mobile...9442536901 E-mail...ragavapriyansrajagopalan@gmail.com.
ராகவபிரியனின் மின்னணு புத்தகங்கள் அமேசானிலும் புஸ்தகாவிலும் கிடைக்கும். அனாமிகா ஆல்பபெட்ஸ் மூலம் வெளியிடப்பட்ட உங்கள் ராகவபிரியனின் பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள் புத்தகத்தின் அச்சுப்பிரதிகள் தேவையெனின் வாசகர்களும் உலகளாவிய புத்தக விற்பனையாளர்களும் ராகவபிரியனை நேரில் தொடர்பு கொள்ளவும்.. தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் இந்திய மணிப்படி காலை 0900 முதல் இரவு 0900 மணிவரை. கைபேசி எண் 9442536901 email. ragavapriyansrajagopalan@gmail.com
1980 களில் சினிமா என்பது மட்டுமே இளைஞர்களின் கனவாக இருந்தது. பெரும்பாலும் ஏழைமாணவர்களே அரசு கலைக்கல்லூரிகளில் படித்தார்கள். மாணவிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கல்லூரி படிப்பு படித்த காலமது. பெரும்பாலான வகுப்பறைகள் காலை நேர காட்சிகள் அறிமுகமான அக்காலத்தில் காலியாகவே கிடந்தன என்பதை இப்போது நம்புதல் கடினம். எட்டுமணிக்கெல்லாம் நண்பர்கள் திருவாரூரின் பேரூர்ந்து நிலையத்தில் கூடிவிடுவோம். அதற்கு முன்பே சீனியர் மாணவர்களின் குழாமும் அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும். எங்கள் கலைக்கல்லூரியின் ஒற்றை இலக்கப் பெண்கள் குழாம் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரிடத்தில் கூடுவார்கள்.. கல்லூரியின் பஞ்சவர்ணக் கிளிகள் அமரும் கனவு ஏரியின் நடுவில் இருக்கும் ஒற்றை மரம் அப்பேரூர்ந்து நிறுத்தம். அவ்விடம் நோக்கி மெல்ல எங்கள் கல்லூரி மாணவ மிதவைக் குழாம் எல்லா திசைகளில் இருந்தும் நகரும். அந்நகர்வதென்பது கனவு மெய்மையியல் தூரிகை வரைந்த எங்களின் பொறாமை மிகு சர்ரியலிச வாழ்வின் அழிக்கவியலா ஓவிய நாட்கள். எங்கள் நண்பர்களில் ஒரே ஒரு பணக்கார நண்பன் மட்டும் இருந்தான். அவன் அடிக்கடி சென்னை சென்று ஏதாவதொரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்...
05/01/2018 அன்று முக நூலில் வெளிவந்த இந்தக் கவிதைக்கான அன்பு நண்பர் பிரபல கவி தஞ்சைத் தவசியின் பின்னூட்டம்..கீழே தரப்பட்டிருக்கிறது.. என்றென்றும் நன்றியும் அன்பும் தவசி சார்.. உனக்கு ஒரு மைதானம் இருந்தது.. அதைச்சுற்றி மின்சார வேலியிட்டிருக்கிறாய்.. அதில் சிக்கிய சில நாய்களும் எலிகளும் நிணவாடையடிக்க அகற்றப்படாமல் கிடக்கின்றன... அங்கே நிறைய மைதானங்கள் இருக்கின்றன... சில வேலியிட்டபடியும்...இல்லாமலும்.. எனக்கும் ஒரு மைதான ஆசையிருப்பதால் இடைத் தரகர் இன்றி பார்த்துப் போக வந்தேன்... சில நாய்கள் நான் புதிது என்பதால் குரைக்கத் தொடங்கின... உடனே எழுந்து வானில் நிலாவானேன்.. நாய்க்கடித்தால் முப்பதாறு ஊசிபோட்டுக்கொள்ளும் பயம்.. வேறொன்றுமில்லை.. நாய் குரைக்கும் சப்தம் கேட்டு யாருமற்ற உன் மைதானத்திலிருந்து இருமுகிறாய்... அதை இடி என்கிறாய்... உன் வயோதிகம் அறிந்த பக்கத்து மைதான தூய நிலவரிப்பட்டா உள்ளவர்கள்.. உன் வேலிதாண்டி உள் நுழைந்து ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள்... நீ எழும்ப முடியாத்தைப்பார்த்ததும் நான் வானிலிருந்து கொஞ்சம் கீழிறங்க அப்போது குரைக்கும் நாய் சத்ததிலிருந்து நிலா நிலா ஓடிவா நில்ல...
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வதானால் அதிகாரபூர்வமாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. ராகவபிரியனின் படைப்புகளைத் தடை செய்தால் அவருக்கு நாளை நோபல் கிடைக்க வழி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. மிக்க நன்றியும் அன்பும்.. ராகவபிரியன்..