Posts

Image
  In the gloom of conscience the bush of the criminal act is humming in silence. The alibi of blood stains and cloths echoing the huge cry of the girl. No one reached the spot even after the information... Every time.. The search is optional for the police . Empathy is the geometry connecting the self with the unknown Suddenly, it collapses like a bridge built on ice cubes .. The compassion of convenience has become an act of ethics just for applause. Accountability has become a torn assurance of the amnesic bureaucracy .. The public scrolls past the suffering of an unknown as quick as possible, The grief is not theirs. Empathy has not died But has been forced into exile . whenever accountability disappears... Ragavapriyan Thejeswi
Image
  நானொரு புல்தான்... என்னை மிதிக்கும் கால்களின் வெப்பத்தில் சுகம் காணும் சின்னவன்.. மிருகக் கால்களின் வேகமிதிப்பில் காடுகளின் முட்டாள் தனத்தையும் அதிலுள்ள கடுமைகளையும் உள் வாங்கி உணர்பவன்.. தாவர உண்ணிகள் தொடர்ந்து மிதிக்கையில் என்னுள் பச்சையங்கள் கந்தகமாகின்றன. மாமிச உண்ணிகள் கனமாய் மிதிக்கையில் அவை தீப்பற்றிக் கொள்கின்றன.. எந்தச் சமாதான மழையாலும் காய்ந்த காட்டுப் புல் தீயைத் தணிக்கவியலாதென்பதை நீங்கள் அறிவீர்கள்.. எனக்கான பூமித் தரையை நான் விரைந்து ஆக்கிரமித்துவிடுவதால் மனிதர்கள் என்னை மிதித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.. மிதிப்பது மனித குணமென்றும் வழி விடுவதே புல்லின் கடமையென்றும் கவியெழுதி விடுகிறார்கள்.. காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன் என பாரதியே எனக்கு மரியாதை செய்ததால் நான் கவிஞர்களை மன்னித்துவிடுகிறேன்.. விளையாட்டுத் திடலில் விளையாட்டு வீரர்களின் மிதியலிலும் பூங்காக்களில் குழந்தைக் கால்களின் மிதியலிலும் நான் புத்தாடை உடுத்திக் கொள்கிறேன்.. என் மீதான பனித் துளியை எழுதாத கவிஞர்கள் எந்த மொழியிலும் இல்லை... நான் விலகி நின்று வழி விட்டதைத் தான் நீங்கள் இப்போது பாதை என்கிறீர்க...
Image
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்தின் பார்வை வேறிடம் அகன்றுவிடக் கூடாத செயல்பாடுகளில் சில நேரம் தன்னையே இழந்தும் விடுகிறான். பிறந்தவுடன் தாயின் பார்வைக்காக தனது இருத்தல் அழுகையை துவக்குகிறான். பிறகு வளரிளம் பருவத்தில் எதிர்பாலின பார்வை படுவதற்காக அலையத் தொடங்குகிறான்.அவனின் அலைச்சலுக்கு இப் பிரபஞ்சமே போதாமல் போவதுதான் வாழ்வியலின் இருத்தலிய புதிர்நிறை யதார்த்தம். அடுத்ததாக அங்கீகாரத்திற்கான ஏக்கப் பார்வைக்காக ஏங்கத்தொடங்குகிறான். வாழ்வின் இருத்தலிய நீட்சிக்கான பொருளீட்டும் வாய்ப்புகளின் பார்வைக்காக கூனிக்குறுகி நிற்கவும் அவன் தயங்கியதில்லை. மானுட முதுமையின் இருத்தலிய அவலம் மரணத்தையும் விஞ்சிய கொடுமை. அவனின் முதுமையில் அன்பிற்கான கரங்களை கண்டுவிடத்துடிக்கும் பஞ்சடைந்த பார்வையின் இருண்மைக்குள் வெளிச்சத்தின் கால்கள் எப்போதும் நுழைவதே இல்லை. மானுடன் தன் இருத்தலை வெளிப்படுத்த அடர் காடுகளுக்குள் கூட ஆயுதங்களின்றியும் நுழைவான். சுவாசக் காற்று சுற்றவியலா ஆகாய வெளிக்குள்ளும் அவன் புகத் தய...
Image
இலக்கிய வலதுசாரிகள்...4 படைப்பிலக்கியம் என்பதும் ஏற்கனவே படைக்கப்பட்ட இலக்கியத்தின் பிழைகளை திருத்தி சரியாக படைப்பதும் இலக்கியச் சேவைதான். படைக்கப்பட்டு புகழ்பெற்ற ஒரு இலக்கியத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பிழைகளை எடுத்துச் சொல்லும் திறன் இலக்கிய படைப்பாற்றல் திறனுக்குச் சற்றும் இளைத்தது அல்ல. படைக்கப்பட்ட நிஜ இலக்கியம் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் எனச் சொல்லும் சிந்தனை ஆய்வு படைப்பாற்றல் இலக்கிய படைப்பெனவே கருதுதல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிடும். தமிழிலக்கியத்தில் வள்ளுவர் வலதுசாரி இலக்கியப் பிதாமகர் என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது. அவரின் ஒரு திருக்குறளை பிற்காலங்களில் தவறாக திரித்து கடவுள் மறுப்புச் சிந்தனையை புகுத்திய இலக்கிய மொள்ளமாறித்தனத்தம் ஆங்கிலேயரின் கைக்கூலி உதவியுடன் அரங்கேறியிருக்க வேண்டும். அப்படியான கீழ்தரமான இலக்கிய திரிபு வேலையொன்றை தைரியமாக அம்பலப்படுத்திய பெருமை வலதுசாரி இலக்கியத்தின் புகழ்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் நேதாஜி எனும் வாரஇதழ் நடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையே சாரும். ஒரு உதாரணம் தருகிறேன். மதிப்புமிகு வீரம் மிக்க தேவர் திருமக...
Image
அவையடக்கம் பற்றிய ஒரு பழைய கவிதையை வாசிக்க நேர்ந்தது. வாழ்க்கையின் தன்நிலையிலிருந்து மானுடம் தன்னை முற்றாக விலகியிருக்கச் செய்தல் கடினம். சபையின் கைத்தட்டல்கள் ஒன்று கூடி தான் எதையோ சாதித்துவிட்ட எண்ணங்களை சேறாகிய இதய மண்ணில் விதைத்துவிட நேரலாம். வாழ்வின் சக மானுட செயல்பாடுகளில் கடுகளவு விஞ்சி நிற்கும் ஒரு சிறிய சாதனையே தான் எனும் அகம்பாவத்தை மனித மனதிற்குள் விதைத்து விட இயலும். அது அறிவார்ந்த சபையில் மெல்ல இதயச் சேறிலிருந்து துளிர்த்து வார்த்தைகளிலோ இல்லை உடல் மொழியிலோ தன் ஆணவத் துளிர்களை அசைத்துக் காட்டிவிடும். அப்படியான அகங்கார வெளிப்பாட்டைத் தவிர்த்தல் கடினம். அது தொடர்ந்த பயிற்சியினாலும் யோகத்தாலும் தான் சாத்தியப்படும். இதைத்தான் ஒரு பண்டைய விருத்தப் பாடல் இப்படிச் சொல்கிறது... உற்றதொகை நான்கு இலக்கத்து ஐம்பதின் ஆயிரம் என்று உரைத்தவட மொழி வேற்பின் ஒரு கடுகின் அளவில் பெற்றிடும் அங்கிசம் நூற்றில் ஒரு பங்கின் பொருளைப் பேர் உலகில்.........................................என்றே வெற்றி நெறி செந்தமிழை உணர்ந்து அருளும் பெரியோர் வீற்றிருக்கும் சபைதனில் யான் விளம்பியபுன் ...
Image
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5 ஓடித்து வீசப்பட்ட ஆங்கிலேய சட்டம் எழுதிய கையிலிருந்து போலி மதச்சார்பின்மை எனும் வெட்டி வீசிய கூரிய நகம் மீண்டும் முளைத்து குழந்தைகளின்மகிழ்வு முகத்தைக் கீறத்தொடங்கியிருக்கிறது. கவிதை வார்த்தை சுடு செங்கற்களால் இலக்கிய அதிகாரம் அடுக்கி சமாதிகளைப் பூசும் கொத்தன் ஒருவன் பிணத்தின் கழற்றவியலா வைர மோதிரமொன்றை உருவி அணிந்து கொண்டு தன் மட்டைத் திராவல் கருவியை தூர வீசியெறிகிறான். மாளிகைகளைக் கட்ட அவனின் கைகளுக்கு நீளம் போதாததால் சமாதிகளைக் கட்டிவிட்டு விரல்களுக்கு மோதிரம் தேடி துழாவிக்கொண்டிருக்கிறான். அவன் வீசியெறிந்த திராவல் கருவி குழந்தைகளின் தீபாவளி உடையணியும் சுதந்திரத்தை பறிக்க சதா எதையாவது தேய்த்துக்கொண்டிருக்கும் கண்ணீர் குழைத்த சிமெண்டெடுத்து சமாதி கட்டும் தொழிலறிந்த விரல்களற்ற அதிகாரகக் கொத்தனின் காலடியில் போய் விழுகிறது. விரல்களற்ற முகவருடல் அன்பை மூளைவரை எடுத்துச் செல்வதில்லை. வெற்று உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம் நிலைக்காமல் வழுக்கி விழத்தான் செய்யும். மழலைகளின் மகிழ்ச்சியை பிடுங்கித் தின்றபின் அமரும் அதிகாரக் கொத்தனின் அரியணையின் சலவைக் கற...
Image
  To get the e.books and paper packs of Ragavapriyan Thejeswi kindly contact Pustaka.in