Posts

Image
  எனது பிரதி தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது. இலக்கிய அதிகாரக் கைகள் அதன் தலையை வாசக கடலுக்குள் அழுத்துகிறார்கள்.. மூச்சு நின்றபின் விட்டு விடுவார்கள்... பின் பிணமாகவேணும் சரித்திரக்கூட்டம் சுற்றி நின்று வே டிக்கைப் பார்க்க வாசகக் கடல் கண்டிப்பாக ராகவபிரியனை மேலெழுந்து மிதக்க வைக்கும்...
Image
  The first page and step of a first standard girl in CBSE is a nightmare If her world of LKG and UKG were in Matriculation. The homework and class work, if done without a cane beat will be a miracle. If her teacher and mother have no patience.. The playground and the PT period, if enjoyed without studies, will be a celebration If the principal and correspondent are free from school business.. The fancy dress competition and personality disguise dressing will not crush the mind and body of the child If the parents and society are not worried about their social platforms.. Ragavapriyan Thejeswi
Image
  About Oru Panavanin Rengaprama Parikathangal மனிதப் பிறவி அரிது என்று ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். அந்த அரிய பிறவியைப் பெற்றவனின் வாழ்வு, வெறும் இன்ப துன்பங்களின் சுழற்சியல்ல; அது பரம்பொருளை உணர்ந்திடும் ஒரு புனிதப் பயணம். எது நிகழ்ந்தாலும், அதற்கு பின்னால் ஒருவித ஆன்மிகப் பாடமே மறைந்திருக்கும். அந்தப் பாடங்களை உணர்ந்தவரின் வாழ்க்கை, நமக்கெல்லாம் வெளிச்சம் தரும் விளக்காகி விடுகிறது. இந்த நிஜக் கதை, அந்தப் புனிதப் பயணத்தின் சான்றிதழாகும். இங்கு நிகழும் உரையாடல்கள், சாதாரண மனுஷரின் சந்தேகங்களும் துன்பங்களுமல்ல; அவை ஆன்மாவின் ஆழத்தில் எழும் வினாக்களாக, சத்தியத்தின் வாயிலில் விடைகளை எதிர்நோக்கும் சாகசங்களாகவும் அரங்கனே மனித வடிவில் வந்து உரையாடும் அற்புத நிகழ்வுகளாகவும் உள்ளன. இறைநம்பிக்கையின் துளி, மனித மனத்தின் இருட்டில் விழும் போது, அந்த ஒளி எவ்வாறு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது. திருக்கச்சி நம்பிகள் பிராமணாரா எனும் கேள்வியை பனவனிடம் அரங்கன் கேட்க பக்தி நிகழ்வியல் நிஜம் நடப்பியலாகிறது; அக்கேள்வி உள்ளத்தில் ஜொலிக்கும் அறிவின் நெருப்பைத் தூண்டுவதும் ஆகு...
Image
  உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்... மீண்டும்... காலத்தின் கொடுமையான பொழுதுகள் முதுமையில் வருவது சபிக்கப்பட்ட மானுடத்தின் மேய்சல் ஓய்ந்த பசு முட்டியிட்டு அமர்வதான தொழுவ வாழ்வாகிவிடுகிறது. அசைவதென்பதே சிக்கலாகிவிட்ட குறுகிப்போன தொழுவத்தில் இளைமையையும் வளமையையும் மீந்திருக்கும் வாழ் நாளையும் அசைபோடுதல் பற்கள் விழுந்துவிட்ட தாடைகளுக்கு எளிதானதல்ல. இதயம் கனத்து மரத்துப்போன வாழ் நாளின் பசித்த பொழுதில் ஒரு சிப்பம் நறுக்கு வைக்கோல் வீசியது போல் சில கவிதைகள் விருட்டென தும்பறுத்து மேய்வதற்கு தயாராகச் சொல்லும். அப்படியான சில வரிகள் ஆகச் சாதாரணமாக இருந்தாலும் அடைந்து கிடக்கும் மீந்த வாழ்வின் வழிகளை திறந்து வைக்கும் திறன் மிகுந்தவை. முதுமை எழுதும் விரல்களை ஒன்றிணைத்து இயக்கச் சக்தியை சீராக செலுத்தும் வகைமையற்று வளைந்து கிடக்கும் பொழுதில் குடும்ப நாசீசியம் தொழுவத்தைச் சுத்தம் செய்ய தூங்கும் பசுவிற்கு மூங்கில் அடிகளை முதுகில் விளாசுகையில் விடியல் கூட சற்று தாமதித்தே தன் கிரண வீச்சைத் தொடங்கும். கால் கொளம்புகளின் பிளவுகளில் அப்பிய சாணமும் சேறும் நாற்றமும் நடையை நொடித்துக் காட்டும் பொழ...
Image
  A POEM BY RAGAVAPRIYAN THEJESWI Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) I planned to steal Pournami, the Full Moon stretching my hands a little I touched the sky... The rays oozing and the secret spot revealed Fear made me shiver Holding it with both my hands I kept it inside my shirt. Just one day is enough... That day none could have ‘Nilaachoeru’. None could peep inside the wells and haul the Moon in bucket. Even the ‘Alli’ flowers would postpone their blossoming by a day... No need for those coming to the Kaveri bank in the early hours of morning to attend to the Nature’s call to go searching for bushes. The fortune-teller would excavate the skull of the eldest born without apprehension While scaling the wall of the small house and jumping on the other side no need for the headgear towel. Just for a day let this Full Moon be with me.... Why not Oh what _ Someone is inserting their hand into my shirt pocket... How to shrink the stretched hand...? ஒரு பெளர்ணமி...
Image
  எழுத்தாளர்களின் ஐடியாலஜி அல்லது உளக்கருத்தியல் அவர்களை இரண்டு தனிக்குழுக்களாக அடையாளப்படுத்திக்கொள்ள கட்டாயப்படுத்துகிறது நிகழ் நடப்பியல் எழுத்துலகு. முதலாவதாக இலக்கியம் சார்ந்த அல்லது இலக்கியத் தரமான அல்லது பண்டைய ஆலமரத்தடி தேனீர் அருந்தகங்களின் மரச் செதுக்கல் திண்ணைகளின் குழுஅமர்வுகள் ப்ராமண அல்லது ப்ராமணீய எழுத்தாளர்களெனும் அடையாள அட்டையைச் சுமந்து தங்களின் மீளுருவ ப்ராமணீய எழுத்தின் உளக்கருத்தியலை பரவலாக்குகிறார்கள் என்பது ஒருவிதமான குற்றச்சாட்டு முறையீடெனவும் நிகழ் நடப்பியல் அடையாள அட்டைகள் ஒவ்வொரு வலதுசாரி எழுத்தாள கழுத்திலும் நிரந்தமாக தொங்கவிடப்படுகிறதென நிகழ் நடப்பியல் எழுத்துலகம் சொல்கிறது. இரண்டாவதாக ப்ராமணீய ஆலமரத்தடி தேனீரகங்களில் பண்டைய சம்ஸ்கிருத வாசம் இன்னமும் தூக்கலாக வீசுவதாகக் கருதி அதற்கு மாற்றாக சற்றே மாறுபட்டு நீரற்ற அல்லது பாழ்படுத்தப்பட்டு வறண்டு போன ஆற்றங்கரை மேலைத் தேய இடது சாரி சோமபாண அருந்தகங்களிலோ இல்லை அரசாங்க அனுமதி பெற்ற தமிழ்த்தேய பரவலாக்கப்பட்ட வெகுஜன அருந்தகங்களிலோ அல்லது மின்னணு பட்டைக் குறியீட்டு பதாதைகள் ஏந்தி முக நூலில் ஒன்றிணைந்து ப்ராமணீ...
Image
  ஸ்ரீ ஸ்துதி ...3 மானுட வாழ்வியல் கூறுகளில் அளவிடவியலாதது புகலிடமென்பது. மனிதன் தன்னை எவ்விடத்திலாவது புகுத்திக்கொள்ள வேண்டும். இடம் என்பது அன்றாட இயக்கத்திற்கான புகுதல் தரும் வெளியோ இல்லை அவசிய ஓய்விற்கான அல்லது உறக்கத்திற்கான உள்ளோ அல்லது இல்லோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னின் புகலிடம் தனக்குச் சொந்தமானதாக இருத்தல் வேண்டுமெனும் எண்ண உந்துதலில் உள்ளும் வெளியும் தனதன்றி உழன்றும் ஓடியும் வாழ்விழத்தலுக்கான புகலிடம் அமைத்துக்கொள்வது தான் சாமாணிய மானுட யதார்த்தம். ஏழைகளின் வாழ்வியலில் சொந்தம் என்னும் சொல்லின் ஆழம் தனிமனித சிந்தையின் அளவீடுகளுக்குள் அடங்கக்கூடியதெனின் பணத்தாள்களின் சந்தம் இல்லையெனின் சொந்தம் எதுவும் இல்லையென்பதே பொருள். வாழ்வியல் அறம் சார்ந்த சிந்தை சொந்த இல்லத்தைச் சொந்தம் கொண்டாடுவதில்லை அல்லது சொந்தம் கொண்டாடவியலா சூழல் இல்லை என்பது மானுட எண்ண இயக்கவியல் விதிகளில் உள்ளதா என்பது அதிதீவிர ஆய்விற்குட்பட்டது. அறவாழ்வின் இல்லப் புகலிடத்தில் துறவாசிரம வாழ்விடப் புகலிடம் அமைத்தல் என்பது ஆன்மீகத்தின் பயிற்சியினால் சாத்தியமாகக்கூடலாம். ஆனாலும் துறவறம் புகுதலுக்கா...