Posts

Image
கடவுள் உணரப்படவேண்டும் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய மொழி இலக்கியக் கவிதாயினி சிலியைச் சேர்ந்த கேப்ரியலா மிஸ்ட்ரெல்..ஆன்மீக உணர்வுகளை எழுத்தாக்குவதற்கும்..அந்த எழுத்துக்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவதற்கும் அசாத்திய திறமையும் மொழி வல்லமையும் எழுத்தாளுமையும் வேண்டும்..இவையணைத்தும் இறைவனருளால் தனக்கு எளிதாக வாய்த்திருக்கிறது என்று சொல்லும் கேப்ரியலா மிஸ்ட்ரெல்.... 1920ல் சிலியில் ஒரு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராய் பணியேற்கிறார்..அப்போது ஓரளவு ஆன்மீக இலக்கிய கவிதாயினியாக உலக அரங்கில் அறியப்பட்டிருந்த கேப்ரியலாவை..அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாப்லோ நெரூதா என்ற மாணவன் தயங்கித் தயங்கி உள் வந்து அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறான்..கவிதை என்பது உணர்வின் வெளிப்பாடெனில்..கடவுள் என்பதும் உணர்வின் ஒரு கூறு தானே...கடவுளுக்குத் தரும் முக்கியத்துவம் ஏன் கவிதைக்குத் தரப்படுவதில்லை எனக் கேட்ட நெரூதாவை தன் மடியில் அமர்த்திக் கவிதைகளையும் கடவுளையும் அந்தப் பள்ளியிலிருந்த ஒரு ஆண்டு முழுவதும் இலக்கிய அன்னையாக அவருக்குக் கற்றுத் தருகிறார்..பின்னாளில் நோபல் பரிசு...
Image
நேற்று இரவு என்னைக் கைபேசியில் அழைத்த இந்தியன் ரயில்வே மாத இதழின்[மாதம் இரண்டு லட்சம் பிரதிகள் உலகெங்கும் வாசகர்களைச் சென்று சேர்கிறது] ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்கள் தமிழின் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியனுப்பும் படி கேட்டுக்கொண்டார்கள்..நான் அவர்களிடம் ஏற்கனவே ஏ கே ராமானுஜம் அந்த அரிய பணியை செவ்வனே செய்து சென்றிருக்கிறார் என்றேன்...ஜனவரியில் இந்தியன் ரயில்வே இதழுக்கு நான் எழுதியனுப்பிய கபிலரைப் பற்றிய கட்டுரையை மே இதழில் பிரசுரித்திருக்கும் தகவலையும் தந்தார்கள்..தொடர்ந்த எனது ஆங்கில படைப்புகளை வெளியிட்டு என்னையும் தமிழையும் கெளரவிக்கும் இந்தியன் ரயில்வே மாத இதழுக்கும் அதன் ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்களுக்கும்..அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...வணக்கங்களுடன்..அன்பன்...ராகவபிரியன்
Image
வாசக சீதையின் மரண நிமிடங்கள் சுற்றி இடது எழுத்து அரக்கிகளின் முரண்பனுவல் மாநாடு.. அசோக மரத்தின் வலது கிளையில் ஒரு கவி வானரன்.. நம்ப மறுக்கிறாள் சீதை.. நீ வலதா இடதா.. கவலையில்லை.. எழுத்தின் தூதன் என்பதை நிரூபிக்கச் சொன்னாள்.. வானரன் சொல்கிறான் என்பதுகளில் மராட்டிய தலித்திலக்கிய வேள்வித் தீயை தமிழ் வானிலிருந்து இடது அரசுரர்கள் குலைத்தபோது... கீழிறிந்து அவர்களை நோக்கிக் குலைத்திருக்கிறேன்.. அட.... கேட்டு வாங்கிப் போட்ட மொக்கை படைப்புகளால் எழுத்தரண்மனைகளை பரதஇடவர்கள் ஆக்கிரமிக்க மாற்று நவீன மர உரியின்றி நீயும் நானும் வலது புரமாய் கானகம் ஏகினோம்.. நிராகரிக்கப்பட்ட நம் இலக்கியப் பூணூல் என் வலது தோளில் கிடந்ததே.. அட ஆமாம்... சீதா...பேசும்மா... உன்னைக் கொத்த வந்த பின் நவீன காக்கையை விரட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடினேனே.. அதை அருமையான கவிதையென்றாயே... இன்னுமா நம்ப மறுக்கிறாய்... மெளனமாய் இடது தோளிலிருந்த கூந்தலை வலது தோளில் மாற்றியபடியே.. நீ ராம தூதனா ராமனே தானா...இல்லை கலப்பட ராவணனின் மாயையா....? சொல் ... வாசக சீதை மேலும் சொல்கிறாள்... சொல்லாவிட்டால் உனக்கான லைக்குகளை இ...
Image
ஒரு மகத்தான மனித செயல் எதுவெனில் அரங்கனுக்கான பூஜைகளை நியமமாகச் செய்வதுதான் என்று பார்த்தனின் சாரதியாய் கீழிறங்கி வந்து உபதேசிக்கிறான் கண்ணன்.ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகப் படைக்கப்பட்டவையென அறுதியிட்டுக் கூறும் எம்பெருமான் கலியுகத்தில் மனித வாழ்வின் அவசியங்களுக்காகவும் அவனின் அவதைகளைக் களைவதற்காகவுமே பூஜைமுறைகளை வகுத்தளிக்கிறான்..அதற்காக ஒரு கணப்பொழுதில் வைகானஸரை தன் இமையிலிருந்து படைத்துவிடுகிறான்..குழுமியிருந்த முனிசிரேஷ்டர்கள் திகைத்துப்போகிறார்கள்..பகவான் அவர்கள் யாரும் பூஜைமுறைகளை சரியாக வகுத்தளிக்கத் தயங்கியதால் தான் வைகானஸர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறான்...பதறிப்போன முனிவர்கள்...அரங்கனிடம் அவர்கள் அரங்கனுக்கான பூஜையில் தவறிழைத்துவிட்டால் ..அதனால் உருவாகும் அரங்கக்கோபாக்னி ஈரேழு பதினாங்கு உலகங்களையும் பொசுக்கிவிடும் என்பதால் தான் தயங்கியதாகக் கூறுகிறார்கள்.. கலியுகமல்லவா...தற்போது அரங்கனுக்கான பூஜைகளைச் செய்வோர் பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்..அரங்க பூஜைக்கான அடிப்படை வேத அறிவோ பயிற்சியோ இன்றி...அரங்க பூஜைக்கான நியமங...
Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...தற்போதைய நவீன அக்ரஹாரங்களில் பழமையின் சிறப்புகளை அதன் மிச்சங்களை அடுத்த தலைமுறைக்காக அழியாமல் பாதுகாத்து தளும்பிச் சிந்திவிடாமல் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய பணியை நடாத்திக்காட்டும் ஒரு சில அக்ரஹாரங்களில் அல்லூர் அக்ரஹாரமும் ஒன்று...எந்தத் தொழில் செய்தாலும் எந்த ஊரில் நாட்டில் இருந்தாலும் பெருமாள் மற்றும் சிவன் கோவில் உத்சவங்கள்..எல்லைக் கோவில் உத்சவங்கள் அனைத்திற்கும் அல்லூர் பெரியவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து உத்சவங்கள் சிறப்பாக பழமை மாறாமல் புனிதம் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக ஒற்றுமையாய்ச் செயல்படும் பொறுப்புணர்வின் அதிசயம் நமது கலாச்சாரம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பாதுக்காக்கப்படுமென்ற நம்பகத்தன்மையின் ஈரத்தைக் காய்ந்துவிடாமல் உயிர்த்திருக்க வைத்திருக்கிறது...நிஜம்...கட்டுரையல்ல... அக்ரஹாரப் பெரியவர்கள் ஒரு சில இடங்களில் நடப்பது போல் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தி தெய்வீகத்தைச் சிதைக்காமல் விழாக்களை நடத்தும் வித்தையறிந்தவர்கள்...இதுபோன்ற அரிய பண்பாட்டின் அடையாளத்தை இன்னமும் சிதையாமல் தன்னலமற்று பொலிவு...
Image
ஆன்மீக நிகழ்வொன்றால் உலகையே மாற்றிவிட முடியுமெனும் நம்பிக்கை பொ ஆ மு சுமார் பத்தாயிரவருடங்களுக்கு முன்னால் பிறந்ததாக சைவ சமயம நூல்கள் சொல்கின்றன..சைவதாஸ உப நிஷத்தில் சிவனுக்கும் ருத்ரனுக்கும் உள்ள வேறுபாடுகள் பொ ஆ மு இருபதாயிர வருடங்கள் முந்தைய இலக்கிய அதிசய வரையறைகள்...இத்தனைப் பழமையான ஆன்மீக வரலாற்றில் இந்தியக் கோவில்களும் அதன் வழிபாட்டு முறைமைகளும் உத்சவங்களும் வாழ்வியலின் புரியமுடியா தத்துவ விளக்கங்களின் நிதர்சனங்கள் எனில் உங்களால் மறுக்க முடியாதென்பது நிஜம்.. சித்திரை வைகாசி மாதங்களின் பிரம்மோத்சவங்களின் ஆதிமுதல் பிரம்மோத்சவ நாளை அதன் நிகழ்விடத்தைத் தேடிக் கண்டடைய முயன்ற என் பிரயத்தனங்களை நீங்கள் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குவீர்கள் என அறிவேன்..இருந்தும் எனது ஆன்மீகத் தேடலின் நீள் பயணத்தில் சற்று இளைப்பாறுகையில் திருப்பறாய்த்துறையின் என் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்த விவேகானந்தா ஆரம்ப மற்றும் உயர் நிலைப் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன...வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான அந்தச் சிவன் கோவில் வளாகத்தில் இருந்த இந்தச் சிறுவனின் பள்ளிக்கூட நேரங்கள் ..அவன் சுவாசித்...
ழுலியேன் வேன்சோன் [julien vinson] ப்ரெஞ்ச் உச்சரிப்பில் அவரை அப்படித்தான் அழைத்திருக்கிறார்கள்..வேன்சோன் பாண்டிச்சேரியில் பிறந்த ப்ரெஞ்ச் மொழியியலாளர்...கம்பராமாயணம் போன்ற தமிழ் இதிகாசங்களை ப்ரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்தவர்..பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான இருக்கையொன்றை நிரந்தரமாக உருவாக்கிய முன்னோடி...தமிழிலக்கியங்களின் மீதான அவரது ஆய்வுகள் நம்பமுடியாதவைகளாகவும் பிரமிக்கும் படியாகவும் இருக்கின்றன..ஒரு ஆகச் சிறந்த மிகச் சிறிய செய்தி..வேன்சோன் சொன்னது..விருத்தப் பாக்களில் என்பத்தியேழு வகைகளை கம்பர் கையாண்டிருக்கிறார் என்பது...சிறிது நேரம் உங்களால் மூச்சு விட சிரமமாயிருக்கும்...அவ்வளவும் உண்மை...நம் முன்னோடி தமிழறிஞர்கள் ஆமோதித்த செய்திதான் அது...கம்ப ராமாயணத்தை இன்றைய காலகட்டத்தில் பொறுமையாய் படிப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.. மரபுக் கவிதைகளை அதுவும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை படித்து பொருள் உணர்ந்து ஆய்வு மேற்கொள்வதென்பது...அதுவும் வேற்று தாய்மொழியுடைய ஒருவர் செய்வதென்பது...கற்பனைக்கும் எட்டாமல் என் எண்ணங்களைப் புரட்டிப் போடுகிறது..அப்ப...