Posts

Neo modernist Tamil poetry

Image
வரலாறுகளை அழகாக கவிதைகளில் செதுக்கிச் சென்றவர்கள்..நம் முன்னோர்கள்...அலெக்சாண்டரின் படையெடுப்பால் பயந்த நம் அரசர்கள் சேமித்தச் செல்வங்களை பெட்டிகளில் அடைத்து ஆறுகளின் நடுவில் அறையமைத்து அதனுள் பாதுகாத்தவர்கள்...அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை  அருமையான  கலிப்பா வாய் அமைத்துவிட்டு அந்த ஓலைச் சுவடியை அரும்பெரும் செல்வமாய் விட்டுச் சென்ற பூட்டன்....அந்தப் பாடல் இத்தனையாண்டுகள் உயிர்த்திருக்குமென கனவு கூடக் கண்டிருக்கமாட்டான்...புதைக்கப்பட்ட செல்வங்கள் புகழ் அனைத்தும் ஆற்றில் அடித்துச் ச ெல்லப்பட்டிருக்க...கவிதையொன்று காலம் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது...இன்னும் வாழும்... அது போன்ற நீண்ட மரபுடைய நம் கவிதை இப்போது பின் நவீன யுகம் நோக்கிய உலகளாவிய வீச்சை தமிழ் மண்ணில் பாய்ச்சத் தொடங்கிவிட்டது...அந்தப் பாய்ச்சலின் பாதிப்பால் ஒரு சின்ன பின் நவீன முயற்சி... வாடுபு வருத்திடும் பாலை நிலமென புகுந்தோம்.. பாலையின் நெடுந்தொலைவென அரிதினும் அரிது நம் பிணைப்பு.. மணல் குன்றுகளில் நம் நினைவுக் காற்று மோதிச் செதுக்கிய சிற்பங்கள் துணிக்கடை பொம்மைகளென உணர்வின்றிச் சிரிக்கும்.. காற்றின் சிறகெங்கும் ம...

வெளிச்சம் மட்டுமே மிச்சம்

Image
எனக்கு ஒரு கார் தயாராக வேண்டும்.. அதில் பூ வேலைப்பாடுகள் செய்திருக்க வேண்டும்.. செயற்கைப் பூக்கள் நிறம் மங்கிப்போகலாம்... இயற்கைப்பூக்களை மெல்லிய உணர்வுகளால் ஒரு மயிலிறகு கோர்த்த அரைவட்டமாய் வண்ணமாய் அலங்கரித்திருக்க வேண்டும்... எதிரே வாத்தியக் காரர்கள் இலக்கியம் வாசிக்கவேண்டும்.. அந்தச் சப்தத்தில் சர்ப்பங்கள் பூக்களிலிருந்து வெளிவரவேண்டும்... யாரோ ஒருவர் எனக்கு ஒரு மலர் கிரீடம் சூட்டுகிறார்... பதட்டத்துடன் கழற்றினால் அது ஒரு கவிதை... அருகிலிருந்த பூவேலைப்பாட்டுக் கைவினைஞர் அதை வாங்கி அணிந்துகொண்டார்... மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு... எனக்குச் சூட்டிய மாலைகளின் ரோஜாக்கள் என் எதிர்க்கவிதைக்காரர்களின் வாசல்களில் உதிர்ந்தன... பூ நாகங்கள் என் காரில் என் இருத்தலைச் சுற்றிப் பின்னிக்கொண்டன இப்போது நான் காரில் ஏறி அமர்ந்தாக வேண்டும்... யார்யாரோ கைபேசிகளில் என்னைப் படம் பிடிக்க பின்னால் இருந்த அரைவட்ட மயில்தோகை வெட்கமுடன் தலைகவிழ்ந்திருந்தது.. என் மீதும் கார்மீதும் வெளிச்சம் பாய்ச்சியபடியிருந்தனர் என் ஆசான் கவிகள்.. அவர்கள் ஏந்தி வரும் விளக்குக் கம்பத்தைச் சுற்றி மல்லிகைக் கொடி படர்வத...

பாரதி கவிதா வேள்வி...டிசம்பர் 1982

அது சூலை 1982..சிக்கல்கள் நிறைந்த ஒரு அனாதையான இருபத்து மூன்று வயது வேலையற்ற பட்டதாரி இளைஞனின் பட்டினி இழையை தொட்டுப்பார்க்கும் ஆவல் நிறைந்த காலை..தான் யாரெனும் கேள்வி வலையொன்றை எப்போதோ அவன் தனக்குள்ளும் வெளியுலகிலும் பின்னிக்கொண்டிருந்த விடிந்து வெகு நேரமாகியும் காலைபசியின்னும் தீர்ந்திராத வறுமையின் உக்கிர நிமிடங்களில் மிகவும் அழகான வசீகரமான கையெழுத்தில் ஒரு அஞ்சல் அட்டை..அவனை பாரதி நூற்றாண்டு விழாவில் ..அங்கு கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையேற்கும் கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்துக்கொண்டிருந்தது..அந்த அட்டை அன்று அவனுள் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகள் இன்றும் கூட அவனால் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை..அன்று அவனால் நம்பமுடியாமல் தான் இருந்தது...அந்த வசீகரக் கையெழுத்திற்கு சொந்தக் காரர்..கவிஞர் இளசை அருணா.... ஒன்றிரண்டு படைப்புகள் மட்டுமே சில நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாகியிருந்த அப்பெயரறியாச் சிறுவனின் இலக்கியப் பயணத்தைத் துவக்கப் போகுமிடம் எட்டயபுரத்தின் பாரதி ஓடிவிளையாடிய வீட்டின் வாசல் படிகள் என்றால் அது காலம் நிச்சயத்த கடவு என்பதைத் தவிர வேறென்ன...? அதை நினைத்து நினைத்து...

துரோகங்களை இடுப்பில் சுற்றியிருக்கும் கவிதை

Image
துரோகங்களை இடுப்பில் சுற்றியிருக்கும் கவிதை... என் முப்பாட்டனின் கவிக்காடுகள் அவனின் இடுப்பில் .. மானம் மறைத்த இலக்கிய இலையுடையாய் மாபெரும் சங்கக் கொடிவார் கட்டி இறுக்கியிருக்கும்.. தலை நிமிர்ந்து காட்டின் தெருவெங்கும் அலைவான்.. திடீர் தரைக்காற்றொன்று வார் அறுத்து வீசியெறியும் அப்பொழுதொன்றில் அவன் மானம்... அவமானம்.. அதன் பிறகே அவன் நவீன கவிதையை உடையென உடுத்தினான்.. இலைக் கவிதைகள் சருகென சுற்றிக் காய்கையில் காலாதீதத்தின் துரோகங்களில் அவ்வப்போது தன்மானமுடன் உதிரமென உதிர்வான்.. பருத்திக் காடுகளில் பட்டுப் பூச்சிகளில் மிருகத் தோல்களில் பன்னாட்டு வர்த்தக் கூடங்களில் விவாத அரங்கங்களில் பின் நவீன மானம் மறைக்க கவி நெய்தவன் அடைய முடியா இலக்கிய தேனீரில் நனைத்தெடுத்த வாரின் முனையில் கொக்கியை இணைக்க.. மானம் இனி வெளியேறும் வாசல் கதவுகளை இறுக்கிப் பிணைத்தான்.. தன் இடுப்பு வாரில் சீனத் தடுப்புச் சுவரமைத்து வெளியெங்கும் பளபளக்கும் வண்ணக் களிம்புதடவி தொடர்ந்து தேய்த்தான்.. அவன் கவிதைகள் மின்னத் தொடங்கின.. இனி இருட்டு மானம் வெளிச்சம் கண்டு வெட்கப்படாதென வீரம் பேசினான்.. ஒரு விவாத அரங்கில் அவனின் இ...

ஜெய் ஹிந்த...ராகவபிரியன்

போர்க்களங்களையே பார்த்திராத  நிகழ்கால நினைவு வெளிகளை விளையாட்டுத் திடலின் உக்கிரங்களும் வக்கிரங்களும் பெரிதும் ஆக்கிரமிக்கின்றன..குறிப்பாக பள்ளிக்கூடங்களையும் அதன் அதீத அழுத்தத்தையும் மெல்ல வெளியேற்றி இலகுவாகலம் என்று கல்லூரிகளில்  நுழையக் காத்திருக்கும் இளைஞர் சமுதாயம்  கடந்து வந்திருக்கும் காத்திரமான வருடங்களை இன்னும் கடினமாக்கி அதிக அழுத்த வன்முறைக்கு உட்படுத்தும் களம் புகுத்தும் கல்வியெனும் மாய நிகழ்ச்சூழலில்.. விளையாட்டுத் திடலின் வன்முறைகளும் வக்கிரங்களும்..செயற்கையாய்க் காட்டப்படும் சாகசங்களும்.. சின்னத் திரையில் தன் அழுத்தங்களை துடைத்து விட்டு எடையிறக்கிய மனப்பான்மையை வலிந்து பெறுகிற வடிகாலாய் மாற்றப்பட்டிருக்கிறது...அதைத் தேடிய தொலைதூர ஒட்டம் தானாகவே கொடியசைத்துத் தொடங்கிக்கொள்கிறது...தொழில் நுட்ப வளர்ச்சியென்ற பெயரில் ஒரு வயது குழந்தையிடம் எங்கிருந்தோ அதன் தாய் இதோ வந்துவிடுகிறேன் என்று பதிவு செய்த குரல்தகவல் தர...அது பொய்யென்றறியாப் பேதை மகவு தன் தளிர் நடையில் காண்போரிடமெல்லாம் தன் அம்மாவின் சுயமிப் புகைப்படம் காட்டும் கைபேசியை இப்படியும் அப்படியும் காட்டித் த...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: WORLD CUP

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: WORLD CUP : The game has unfurled the flags of harmony The flame on the stadiums up flared in hegemony The ball of peace is kept at the centre The cap...

WORLD CUP

Image
The game has unfurled the flags of harmony The flame on the stadiums up flared in hegemony The ball of peace is kept at the centre The captains putting their legs on the thunder.. centre forwarding nations are ready to kick just for thy nation's selfish economic picks Red yellow green cards are with UN's soul At last UN's whistle will blow on a peaceful goal.. When the goal keeper is wearing a beard or turban If his colour is black or brown or belonging to mountain The ball may be kicked with extra vigorous tempers Watching children in the stands may urinate on pampers.. Our humble prayerful request for the heavy weight powers Kindly play the game in humane submissive showers.. Our defending poor nations are holding as fullbacks.. Fearing the centre right and left halfs pulling their socks.. Don't strive hard to defeat any [atom]ball less nation With thou daunting power game in unrealistic reason Let us clap our hands and open the wings of pigeons over the wo...