போர்க்களங்களையே பார்த்திராத நிகழ்கால நினைவு வெளிகளை விளையாட்டுத் திடலின் உக்கிரங்களும் வக்கிரங்களும் பெரிதும் ஆக்கிரமிக்கின்றன..குறிப்பாக பள்ளிக்கூடங்களையும் அதன் அதீத அழுத்தத்தையும் மெல்ல வெளியேற்றி இலகுவாகலம் என்று கல்லூரிகளில் நுழையக் காத்திருக்கும் இளைஞர் சமுதாயம் கடந்து வந்திருக்கும் காத்திரமான வருடங்களை இன்னும் கடினமாக்கி அதிக அழுத்த வன்முறைக்கு உட்படுத்தும் களம் புகுத்தும் கல்வியெனும் மாய நிகழ்ச்சூழலில்.. விளையாட்டுத் திடலின் வன்முறைகளும் வக்கிரங்களும்..செயற்கையாய்க் காட்டப்படும் சாகசங்களும்.. சின்னத் திரையில் தன் அழுத்தங்களை துடைத்து விட்டு எடையிறக்கிய மனப்பான்மையை வலிந்து பெறுகிற வடிகாலாய் மாற்றப்பட்டிருக்கிறது...அதைத் தேடிய தொலைதூர ஒட்டம் தானாகவே கொடியசைத்துத் தொடங்கிக்கொள்கிறது...தொழில் நுட்ப வளர்ச்சியென்ற பெயரில் ஒரு வயது குழந்தையிடம் எங்கிருந்தோ அதன் தாய் இதோ வந்துவிடுகிறேன் என்று பதிவு செய்த குரல்தகவல் தர...அது பொய்யென்றறியாப் பேதை மகவு தன் தளிர் நடையில் காண்போரிடமெல்லாம் தன் அம்மாவின் சுயமிப் புகைப்படம் காட்டும் கைபேசியை இப்படியும் அப்படியும் காட்டித் திரிகிற ..கொடுமையான மன அழுத்தம் ஒரு குழந்தையின் மேல் திணிக்கப்பட்ட... அப்பட்ட கொடுங்காட்சிகளின் சமுதாய கட்டாய கட்டமைப்புகளை வலிந்து புகுத்திய இன்றைய காலச்சூழல் எவ்வளவு மணல் நிறை பாலையென நாம் அறியப்பெறலாம்...
நாம் கண்ணுறும் இன்றைய இயலாமைகளின் வெதும்பச் சித்திரங்கள் இடைவெளிகளற்று காட்சிகளாய் ஆக்கிரமிக்கும் சின்னத் திரைகளின் முன் முன்மதியம் தொடங்கி மாலைவரை இல்லத்தரசிகளின் இயலாப் பொழுதுகளாகவும்..விடியலில் இருந்து காலைவரை நடுத்தர வேலைக்குச் செல்லும் மத்தியதரக் குடும்பத் தலைமைகளின் கொடூர மணிகளாகவும்..மாலை தொடங்கி பின் இரவு வரையிலும் வேலை கிடைக்காடத இளைஞர் பட்டாளங்களின் இனிய பொழுது போக்காகவும் வலிந்து வரையப்பெற்றவையெனில் அதுதான் உண்மையென உரத்து உங்களால் உள்மனதில் எதிரொலிக்கும் குரல்வாக்கெடுப்பின் மூலம் உணரமுடியும்...
ஒட்டுமொத்த வணிகச் சிந்தையால் சீரழிந்த சமுதாயம் இனி எதிர்காலத்தின் வளமைக்கும் எதிர்காலச் சந்ததிகளின் சாதனை நிகழ்வெளிகளின் பிறப்புக்குமான நம்பிக்கையைத் தொலைத்துவிட்டு கைபேசியில் நாள்முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறது...இது களம்..போராட்டமோ ஆராட்டோ...மக்கள் தானாக மனமுவந்து கூடவேண்டும்...கூட்டப்படக்கூடாது...அதற்கான தன்முனைப்பும் தியாகமும் அக்கறையும் கொண்ட யாரும் எளிதில் பயணிக்கக் கூடிய வழியொன்றை தொடக்கக்கல்வியிலிருந்து தேடி மகிழ்வாய்த் தொடங்க...ஊடகங்கள் பெரும் பொறுப்புகளைச் சுமக்கவேண்டியிருக்கிறது...எங்கே கூட்டமிருந்தாலும் அங்கே செய்தியும் அதைக் காட்டினால் வரும் பொருளாதார சுய நலமிக்க ஆதாயங்களுமே பெரிதென கொள்கையளவில் கடைபிடிக்கிற ஊடகங்களால் எதிர்காலம் வெம்மையின் கொடுமையில் காணாமல் போகப்போகிறது...எது நிஜம் எது பொய் என்று புரியவியலாச் சூழலில் அறமும் மனித நேயமும் போலிப்போராளிகளின் இலக்கற்ற தவறான வழிகாட்டும் சுய நல வாதிகளின் பொய்ப்பிரச்சாரங்களால் சூறையாடப்படுகிறது...
நல்லவைகளைக் காட்டுவோம்..நல்லவைகளே மக்களை குறிப்பாக குழந்தைகளையும் இளைய சமுதாயத்தையும் சென்றடையும் என்ற உத்திரவாதம் தரும் கொள்கைகளை வகுப்போம்..என்ற உறுதிமொழிகளை ஊடகவியலாளர்களும் இலக்கியவாதிகளும் இதழியலாளர்களும் முதலில் பகிரங்கமாக ஏற்று அதைப் பின்பற்றினால்... ஓங்கி வளருமோர் கம்பம் ..அதன் உச்சியின் மேல் பாரத மணிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கும்...ஜெய் ஹிந்த்...வணக்கங்களுடன்..அன்பன்...ராகவபிரியன்

No comments:
Post a Comment