துரோகங்களை இடுப்பில் சுற்றியிருக்கும் கவிதை...
என் முப்பாட்டனின் கவிக்காடுகள்
அவனின் இடுப்பில் ..
மானம் மறைத்த
இலக்கிய இலையுடையாய்
மாபெரும் சங்கக் கொடிவார் கட்டி
இறுக்கியிருக்கும்..
தலை நிமிர்ந்து
காட்டின் தெருவெங்கும் அலைவான்..
திடீர் தரைக்காற்றொன்று
வார் அறுத்து வீசியெறியும்
அப்பொழுதொன்றில்
அவன் மானம்... அவமானம்..
அதன் பிறகே
அவன் நவீன
கவிதையை உடையென உடுத்தினான்..
இலைக் கவிதைகள்
சருகென சுற்றிக் காய்கையில்
காலாதீதத்தின் துரோகங்களில்
அவ்வப்போது
தன்மானமுடன்
உதிரமென உதிர்வான்..
பருத்திக் காடுகளில்
பட்டுப் பூச்சிகளில்
மிருகத் தோல்களில்
பன்னாட்டு வர்த்தக் கூடங்களில்
விவாத அரங்கங்களில்
பின் நவீன
மானம் மறைக்க
கவி நெய்தவன்
அடைய முடியா
இலக்கிய தேனீரில் நனைத்தெடுத்த
வாரின் முனையில்
கொக்கியை இணைக்க..
மானம் இனி வெளியேறும்
வாசல் கதவுகளை
இறுக்கிப் பிணைத்தான்..
தன் இடுப்பு வாரில்
சீனத் தடுப்புச் சுவரமைத்து
வெளியெங்கும்
பளபளக்கும் வண்ணக் களிம்புதடவி
தொடர்ந்து தேய்த்தான்..
அவன் கவிதைகள்
மின்னத் தொடங்கின..
இனி இருட்டு மானம்
வெளிச்சம் கண்டு
வெட்கப்படாதென
வீரம் பேசினான்..
ஒரு விவாத அரங்கில்
அவனின் இடுப்பு வாரவிழ்த்து
ஒரு கவிதைக்காக
பெயரறியா துரோகங்களால்
துடிதுடிக்க தொடர்ந்து தாக்கப்பட்டான்..
அவன் மானம்
அவனின் இடுப்பில் ..
மானம் மறைத்த
இலக்கிய இலையுடையாய்
மாபெரும் சங்கக் கொடிவார் கட்டி
இறுக்கியிருக்கும்..
தலை நிமிர்ந்து
காட்டின் தெருவெங்கும் அலைவான்..
திடீர் தரைக்காற்றொன்று
வார் அறுத்து வீசியெறியும்
அப்பொழுதொன்றில்
அவன் மானம்... அவமானம்..
அதன் பிறகே
அவன் நவீன
கவிதையை உடையென உடுத்தினான்..
இலைக் கவிதைகள்
சருகென சுற்றிக் காய்கையில்
காலாதீதத்தின் துரோகங்களில்
அவ்வப்போது
தன்மானமுடன்
உதிரமென உதிர்வான்..
பருத்திக் காடுகளில்
பட்டுப் பூச்சிகளில்
மிருகத் தோல்களில்
பன்னாட்டு வர்த்தக் கூடங்களில்
விவாத அரங்கங்களில்
பின் நவீன
மானம் மறைக்க
கவி நெய்தவன்
அடைய முடியா
இலக்கிய தேனீரில் நனைத்தெடுத்த
வாரின் முனையில்
கொக்கியை இணைக்க..
மானம் இனி வெளியேறும்
வாசல் கதவுகளை
இறுக்கிப் பிணைத்தான்..
தன் இடுப்பு வாரில்
சீனத் தடுப்புச் சுவரமைத்து
வெளியெங்கும்
பளபளக்கும் வண்ணக் களிம்புதடவி
தொடர்ந்து தேய்த்தான்..
அவன் கவிதைகள்
மின்னத் தொடங்கின..
இனி இருட்டு மானம்
வெளிச்சம் கண்டு
வெட்கப்படாதென
வீரம் பேசினான்..
ஒரு விவாத அரங்கில்
அவனின் இடுப்பு வாரவிழ்த்து
ஒரு கவிதைக்காக
பெயரறியா துரோகங்களால்
துடிதுடிக்க தொடர்ந்து தாக்கப்பட்டான்..
அவன் மானம்
இடுப்பெங்கும்
இப்போது துரோக கவிதையிலைகளால்
செதுக்கப்பட்ட ஒரு
முப்பாட்டன் சிலையென
முக நூல் தூண் ஒன்றில்
கைகூப்பி நின்று கொண்டிருக்க
அதன் மேல் தான்
இளைஞர்கள் தங்கள்
தூமையையும் விந்துவையும்
தடவிப் போகிறார்கள்...
ராகவபிரியன்

No comments:
Post a Comment