Thursday, February 19, 2026

 




இவ்வாழ்வின்

அதீத வெப்பத்தில்
என் சாயங்காலங்கள்
வியர்த்துக்கொண்டே இருக்கின்றன..
சட் டென பொட்டுப் பொட்டாய்
நினைவெச்ச ஆலம் கட்டிகள்
சில் சில் என
வாழ்வின் ஏதோ ஒரு குளிர் நாளின்
கண்மறைந்த மேகத்திலிருந்து
குதித்து
எப்போதாவது
என் முற்றமெங்கும் மகிழ்வென
கறையத் தொடங்கும்..
அன்றாட கஞ்சி
பனிக்கான கிழிந்த கம்பளி
பனைமட்டை விசிறி
அனைத்தும் வெப்பம் கூடி
கொதிக்கும் இப்போதில்....
அரிதான என் ஆலங்கட்டியுடன்
காதல் வானில்
சுற்றித் திரிந்த மேக நாட்களின்
எண்ண மிச்சம் வேறு
மின் கிட்டிலின்
சுடு நீர் தொடக்கத்தின்
பொட்டுப் பொட்டாய்
முகிழ்த்து
இதய மூடியில் மோதத் தொடங்குகிறது..
ஏழைக் குழந்தை
வாங்க நினைத்த கரடி பொம்மையை
கடைக்காரன்
எவ்வளவு நாட்கள் தான்
விற்காமலிருப்பான்..
ஆலங்கட்டி மேகங்கள்
என் முற்றத்தின் மீது
கரையாமல்
நின்று பொழிய
காற்றுக்காரன்
எல்லா நாட்களிலும்
அனுமதிப்பானா என்ன?
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...