Friday, January 30, 2026

 









இதற்கு முன் அறிமுகமற்றவர்களிடையே சுவரொன்றைக் கட்டவியலுமா. நதியின் குறுக்கே நிற்கும் நாணல் புதர் இடம் வலமாய் நீரோட்டத்தை திசைதிருப்ப முடியுமா..

இதுபோன்ற கேள்விகளுக்கு இல்லை எனும் பதில் தருவோர் வாசகர்கள்.. ஆம் முடியும் என பதிலுரைப்போர் இலக்கிய கர்த்தாக்கள்..
1980ல் ஒரு உலக இலக்கிய இருண்ட நாள்..ருஷ்ய ஸ்டாலினின் ஆதரவாளரான ஹில்மேன் ஒரு நேர்மையற்ற எழுத்தாளர் என மேரி மெகார்த்தி எனும் இலக்கிய விமரிசகர் குற்றம் சாட்டுகிறார்.
விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியோ திறமையோ அற்றவர்கள் தங்கள் தொழிலில் உச்சம் தொடுவது கடினம் தானே..
தன் மீது அவதூறு பரப்பிவிட்டதாக மேரி மெகார்த்தி எனும் பெண் இலக்கிய விமரிசகர் மீது வழக்குத் தொடுக்கிறார். அவர் இழப்பீடாக கேட்ட தொகை சில மில்லியன் டாலர்கள். அது மட்டுமல்ல.. மேரி மெகார்த்தி ஸ்டாலினை எதிர்க்கும் எதிர் இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்.. விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளவியலாத ஹில்மேன் 1984ல் இறந்து போகிறார். வழக்கும் தள்ளுபடியாகிறது.
நம் செந்தமிழ் நாட்டில் பாரதி ஷெல்லியைக் காப்பியடித்தாகச் சொன்ன இலக்கிய பிராமண எதிர்ப்பாளர்கள் நிறைய இருந்தார்கள்..இன்றும் இருக்கிறார்கள்..இனியும் இருப்பார்கள்.. ஆனால் பாரதி மரணமற்ற வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருப்பான்..
The Isles of Greece, the Isles of Greece
Where burning Sappho loved and sung,
Where grew the arts of war and peace
Where Delos rose, and Phoebus sprung
Eternal summer glides them yet…
மேற்கண்ட ஷெல்லியின் கவிதையை பாரதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே.....
எனும் கவிதையாக தழுவி எழுதினார் என மனசாட்சி இல்லாமல் குற்றம் சாட்டிய இலக்கிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நம் தமிழிலக்கிய உலகத்தோர்..
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்மீது மட்டும் அல்ல அவர் ஒரு பிராமண எழுத்தாளர் என்பதால் அவரின் எழுத்துக்கள் மேலும் பொறாமை கொண்டவர்கள் பலர். அவரின் படைப்புகள் மேலை இலக்கிய காப்பிகள் என்று கூசாமல் சொன்னது வேறு எவரும் இல்லை.. நம்...புதுமைப்பித்தன் தான்..
சாரதையின் தந்திரம் சிறுகதைத் தொகுப்பு – இதில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சிசிர் குமார் கோஷ் எழுதிய “Glimpses of Indian Life” தொகுப்பில் உள்ளவற்றைத் தழுவியதாம்.
புது ஓவர்சீயர் சிறுகதை – இது பிரேம்சந்தின் நமக் கா டரோகா சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (நான் இரண்டையும் படித்திருக்கிறேன். மோசமாக காப்பி அடித்திருக்கிறார், பிரேம்சந்தின் அருகே கூட வரமுடியவில்லை.)
காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம் – இது மார்க் ட்வெய்னின் Cannibalism in the Cars சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (மூலமும் சரி, தழுவலும் சரி, என்னைக் கவரவில்லை.)
ஏட்டிக்குப் போட்டி – இதில் பல கட்டுரைகள் ஜெரோம் கே. ஜெரோமின் Three Men in a Boat புத்தகத்திலிருந்து சுட்டவையாம்.
வீணை பவானி – பால்சாக்கின் Opera Singer சிறுகதையின் தழுவலாம்
இதுபோல எத்தனையோ அவதூறுகளைத் தாண்டி சாதித்தவர்கள் உலக இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்து தமிழ் உள்ளவரை மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இருப்பார்கள்..
இடிப்பாறை இல்லா ஏமரா [இலக்கிய] மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்..
அவதூறு ரசாயணக் கலவையை இதுவரை நேரில் பார்த்திராத ஒருவரின் முகத்தில் வீச நெஞ்சுரம் அற்ற இலக்கிய கர்த்தா ஒருவரால்தான் இன்றைய பின் நவீன இலக்கிய உலகில் இயலும்.. அதுவும் தொழில் நுட்பம் அதன் உச்சத்தில் உள்ள இக்காலத்தில்..இதுவும் வரலாறு..
ஆனால் கொடிய ரசாயணத் தாக்குதலால் முகம் சிதைந்து மூச்சிழந்தாலும்... முன் தலை முழுவதும் முடியுதிர்ந்து பின் தலையில் கொஞ்சம் மீந்திருந்தாலும்..அவதூறு சிதையில் கொடிய தீயிட்டுக் கொளுத்தப்பட்டாலும்..மரணமற்ற அமர வாழ்வு இலக்கியத்தில் விதிக்கப்பட்டிருக்கிறதெனில் பீனிக்ஸாக மீண்டும் உயிர்த்தெழுவான் அடர்முடித் தலையோடு..பாதிக்கப்பட்ட கவிஞன்/எழுத்தாளன்/இலக்கிய விமர்சகன்..
அவனின் சிதைந்த முகம் ஆகப்பொலிவுடன் வரலாற்றுச் சுவரில் புத்தம் புதியதாய் இலக்கியப் பொலிவுடன் அழிக்கவியலாமல் செதுக்கப்பட்டிருக்கும்...
காற்றுள்ள வரை இந்தக் கவிதைகளும் வாழ்ந்திருக்கும்
ஆற்றலுடன் அரங்கனருள் அற்புதமாய் பெற்றுத்தரும்..
[திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்]
ராகவபிரியன்

 






உன் ஆணவச் சிரிப்பை

என் தொடர்வண்டியின்

ஜன்னலோரம் நின்று

நிகழ்த்திக் காட்டுகிறாய்...
உன் சிரிப்பிலிருந்து உதிர்கிறது
பின்பக்கம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடி..
மெல்ல நகரத்தொடங்கிய
காலத்தின் மெளன தொடர்வண்டியை
துரத்தியபடி ஓடி வருகிறாய்..
நான் அமர்ந்திருப்பது வரலாற்றின் வண்டி..
அதில் நீ பயணிக்க வேண்டுமெனில்
முன்பதிவு செய்திருக்க வேண்டும்..
இதோ வண்டி நகரத்தொடங்கிவிட்டது..
ஓடும்வண்டியில் தொற்றி ஏற
உனக்கு அனுமதியில்லை...
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதால்
வண்டி மட்டுமல்ல
வரலாற்று மாடு கூட மண்டியிடாது..
திடீரென தும்பறுத்து
கையில் கண்ணாடியுடன்
நடைமேடையில்
என் வண்டியை ஏன் துரத்துகிறாய்..
உன் தொடர் எதிர்ஓட்டத்தின்
மூச்சு முட்டும் அச்சிறும் அப்போதில்
ஒரு முறை உன் முகத்தைப் பார்த்துக்கொள்..
உன் சிரிப்பிற்கான
என் வழுக்கை வரலாற்றின் எச்சம்..
என் மூதாதையரின் பரம்பரைச் சொத்து அது..
நீ ஏன் பொறாமைப் படுகிறாய்..?
உன் எழுத்துக்களில்
உன் தலைமுடியின் அடர்த்திகூட இல்லையே..
என்ன செய்வது..?
போகட்டும்..
இதோ வரலாற்றின் அடுத்த வண்டிக்காக
காத்திருப்போரை
பயணச் சீட்டு பரிசோதகர்
ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்...
நடைமேடை அனுமதிச் சீட்டாவது
வாங்கியிருக்கிறாயா..?
நீ வாங்கிய விருதுகள் அங்கே ஏற்கப்படாது..
தெரியுமா உனக்கு...
காலத்தின் இக்கொடிய துயரப் பொழுதில் தானா
நடைமேடை பலகையில்
தூங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன்
விழித்தெழ வேண்டும்..
தயை கூர்ந்து
அவன் முன் உடைந்த கண்ணாடியை
உயர்த்திவிடாதே..
அதன் கூர்முனையைப் பார்த்து
உன் வார்த்தைகளென நினைத்து
அவன் சிரித்துவைக்கப் போகிறான்..
நீ அட்டகாசமாய் சிரித்தது
உன் சுயவிளம்பரத்திற்காகத்தான்
என்பதை நடைமேடைச் சித்தர்கள்
நன்கு அறிவார்கள்..
தொடர் வண்டி நிலையங்களில்
தொடர்ந்து ஒலிக்கும்
வண்டி வருவதற்கான மணியோசையை
உச்சியில் தொங்கும்
தேவாலய மணியோசையால்
தடுப்பது கடினம்...
புரிந்து கொள்..
கால வண்டியில் எவர் வேண்டுமானாலும்
பயணிக்கலாம்..
ஆனால் வரலாற்று வண்டியில்
ஜன்னல் இருக்கை கிடைக்க
முன் பதிவு அவசியம்..
ராகவபிரியன்

Wednesday, January 28, 2026

 



சாதீய அடையாளம் தமிழ் எழுத்தோடும் எழுத்தாளனோடும் ஒட்டியே பிறக்கிறது. குறிப்பிட்ட ஒரு அடையாள முத்திரை தவிர்த்த மற்ற அடையாள சின்னங்களைத் தாங்கி வெளியேகும் படைப்புகளும் படைப்புத் தளங்களும் உலகளாவிய அங்கீகார தராசில் நிறுத்தப்படுகிறது. பூணூல் வெளித் தெரியும் எழுத்துக்கள் அங்கீகார தராசுத் தட்டின் மேசையில் அடுக்கப்படுவதே இல்லை. ஆயினும் வேறு மதச் சின்னங்கள் வலிந்து அணிவிக்கப்பட்ட எழுத்துக்களுக்கு எந்தத் தராசிலும் ஏறி நிற்க வேண்டிய அவசியமே இல்லை.

பூணூல் அணிந்த எழுத்துக்கள் பெரும்பாலும் பகடிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. சில நேரம் பகடிக் காயாகவும் தான். அப்படி பகடிக்காயாக பயன்படுத்தப்பட்ட பிராமண எழுத்து ஏதாவதொன்று சிறு உத்தரணி அளவு துளி  நன்மையை  தன் உள்ளங்கையில் எப்போதாவது ஏந்துகிறது. ஆனால் அச்சிறு துளியைக் கூட உறிஞ்சவிடாத சமகால போலி முற்போக்கு இலக்கியம் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ப்ராமண எழுத்தாளனிடமிருந்து அதைப் பிடுங்கி தான் உட்கொள்ள துடியாய்த் துடிக்கிறது. போகட்டும். பூணூல் வெளித்தெரியும் எழுத்து உஞ்சவிருத்தி செய்தாவது பிழைக்க வேண்டி இலக்கிய வெளியெங்கும் வலம் வந்தாலும் ஒரு பிரதிக்கான விலைகூட அதன் திருவோட்டில் சேந்திவரவியலாது. இங்கெ பிராமண எழுத்தாளனின் தோளில் தொங்கும் பூணூல் எந்தச் சிறியதொரு சமூக தாக்கத்தையும் தரும் வலிமையற்றதென்பதை ஊரெங்கும் உரத்துச் சொன்னாலும் எடுபடாது. அழிவிற்கான அணுகுண்டு வெடித்துச் சிதறி சதா ஊளையோசை கேட்டுக்கொண்டிருக்கும் இவ்விலக்கிய மண்ணில் தெய்வீக வெண்கலமணியின் ஒலி எந்தக் காதில் தான் விழப்போகிறது. 

இந்த மண்ணில் வலிந்து அணிவிக்கப்பட்ட சிலுவை தொப்பிச் சின்னங்கள் தாங்கிவரும் எழுத்துக்கள் செய்த செய்து கொண்டிருக்கிற இனி செய்யப்போகும் தாக்கங்களை முப்பிரி நூலின் முப்பரிமாண எழுத்தால் எக்காலத்தும் செய்யவியலாதென்பதே உண்மை. அதனால்தான் அது திறந்த மார்பில் தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு சிதைந்து போகிறது. அப்பூணூலில் பிற்போக்கு எனும் ஒற்றைச் சொல் பிசினை கட்டாயப்படுத்தி பூசிவிடுகிறார்கள். அதனால் அது பிரிக்கவியலாமல் ஒட்டிக்கொண்டு மெல்ல நைந்து பிரிப்பிரியாய் பிய்யத் தொடங்குகிறது. இம்மண்ணில் தான் சிலுவையை பாரமாகச் சுமக்கப் பழக்கப்பட்ட எழுத்துக்கள் வெகு சுலபமாக தேவாலய உச்சிவரை தூக்கிச் செல்லப்பட்டு நிரந்தர இளைப்பாறுதலும் கொடுக்கப்படுகிறதெனின் அதுதான் மறுக்கவியலா தமிழிலக்கிய நிஜம். ஆமென்.  

லுங்கியும் தொப்பியும் மீசைமழிக்கப்பட்ட வளர்தாடி கொண்ட எழுத்துக்கள் அரசின் மற்றும் படைப்புலகத்தின் அங்கீகாரத்தையும் அன்றாட கஞ்சிக்கான உத்தரவாதத்தையும் வெகு சுலபமாய் பெற்றுவிடுகிறது. முற்போக்கு எழுத்தென முத்திரை குத்தப்படும் இலக்கியங்களுக்கான மெக்கா மெதினா யாத்திரைக்கான செலவுகள் இந்துக்கோவில்களின் வருமானத்திலிருந்தே கொடுக்கப்படுகிறதென்பதுதான் இன்றைய தமிழிலக்கிய இயங்கியல் தத்துவம். 

இருந்தாலும் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எழுத்துக்களுக்கு பூணூலோ சிலுவையோ தொப்பியோ அணிவிப்பவர்கள் வாசகர்கள் அல்ல.. 

ராகவபிரியன்



 





அது 1982 ம் வருடம். பிகாம் முடித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியாய் கோவில் காளையென வீதிகளில் திரிந்துகொண்டிருந்த காலம். உதயம் கையெழுத்துப் பிரதி மாத இதழ் ஆசிரியர் என்ற தகுதியும் ஒன்றிரண்டு கவிதைகள் நாளிதழ்களில் வெளிவந்திருந்த இறுமாப்பும் திமிள்களாய் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்த பொழுதுகள்..கூர்த்த கொம்புகளில் எவராவது புல் சுற்றிவிடுவார்கள் பசியாறலாம் என்றலைந்த அலட்சியமான நாட்கள்..

இவனின் திறமைமீது நம்பிக்கை கொண்ட திருவாரூர் கலைக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஹூசைன் இவனிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். யாரிடம் தெரியுமா.. ?ஒருதலை ராகம் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்களிடம் தான். அதுபோது நம்பிக்கை இமயமலை போன்சாய் வடிவில் இருந்தாலும் இவன் கையில் வாங்கியவுடன் தன் உயரத்தைத் தானே மீறத் தொடங்கியது.
கடிதத்தில் அடுத்த படத்திற்கு பாடல் எழுத இச்சிறுவனை பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார்...அது கண்ணதாசன் எனும் பாட்டுப்பகலவன் மறைந்த சினிமா வானின் சாயங்காலப் பொழுதின் சிவப்பு நாட்கள்..
இப்ராஹிம் அவர்களின் முகவரியில் கால் வைக்கிறான்.. இவனின் கிழிந்த சட்டைப் பையில் நாளிதழில் வெளியான கவிதை நகல்களும் உதயம் கையெழுத்துப் பிரதி ஒன்றும் மூலதனமாய் மடித்து வைக்கப்பட்டிருந்ததை ஒரு முறை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான்..
எக்மோர் ரயில் நிலையத்தின் பழைய கரி எஞ்சினுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் ஒழுகிக் கொண்டிருந்த சொட்டருவியில் குளித்த ஈரம் தலையில் மட்டுமல்ல இமைமுடிகளிலும் தங்கி காயாமல் இருந்தது. ஆனால் வயிறு காயத்தொடங்கியிருந்தது..
வெள்ளை லுங்கியும் முண்டா பணியனுமாக இப்ராஹிம் வெளியில் வருகிறார்.
இவன் கடிதத்தை அவரிடம் கொடுக்கிறான்..
அடுத்த படத்திற்கான பாடல் கதைவசனம் இசையமைப்பு ஒளிப்பதிவு என அனைத்தையும் இவன் தலையில் கட்டப்போவதாக அந்த ஒரு நொடியில் கனவு காண்கிறான்.
கதாநாயகி ரூபா தன் தோழிகளுடன் திருவாரூர் கல்லூரியின் மாடியிலிருந்து இறங்குவது போல் காட்சி அமைப்பதாக கற்பனை செய்கிறான். இறங்குவது போல் இருக்கக்கூடாது. ஏறுவது போல் இருக்கட்டும் என்று யாரோ உரத்துக் கத்துகிறார்கள்...
தம்பி ஒங்க பேரு என்னங்க...
பேரைச் சொல்கிறான் இவன்..
டிபன் சாப்டீங்களா...
இல்லைங்க...இன்னும் டீ கூட குடிக்கல..
சரி திருவாரூர்லேர்ந்து எப்புடி வந்தீங்க தம்பி..
அதற்குள் இப்ராஹிம் அவர்களுக்கும் இவனுக்குமான தேனீர் கொடுக்கப்படுகிறது..
சட் டென கோவில் காளைக்கு நந்தியென தகுதி உயர்வு கிடைத்துவிட்டதான பெருமித பார்வையுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன் சொன்னான்..
திருட்டு ரயில்ல தாங்க...
ராகவபிரியன்

Monday, January 26, 2026

 





நேற்று காஞ்சியில் காய்கறி வாங்கச் சென்றாக வேண்டியிருந்தது. திருச்சியில் நான் பிரபலம் என்பதால் காய்கறிக் கடைகளில் கூடியிருக்கும் வாடிக்கையாளர்கள் சட் டென விலகி பக்கத்துக் கடைக்குச் சென்றுவிடுவார்கள்.. தெனாலிராமனைத் தெரியாத விஜயநகர காய்கறி கடை எதாவது இருக்கிறதா என்ன.. ஆனால் காஞ்சியில் இருந்தது. நேற்று காஞ்சி காய்கறிகடையில் கூட்டம் அப்பிக்கொண்டிருந்தது.. கொஞ்ச நேரம் தள்ளி நின்றுகொண்டிருந்தேன்.

காய்கறிக் கடைக்காரர்..அய்யா ஏன் தள்ளி நின்று கொண்டிருக்கிறீர்கள்..
உ..ரா.பி.. வெண்டைக்காய் முனை உடைத்துப் பொருக்கி எடுக்க வேண்டும்.. கூட்டம் குறையட்டும்..அதான்..
கா. க.. ஐயா முனை உடைத்து காய் வாங்க அனுமதி இல்லை..வேறு கடை பாருங்கள்..
சொல்லிவிட்டு கொஞ்சம் கூட கருணையின்றி விரட்டினார். ஒரு பிரபலம் காய் வாங்க வந்ததை ரீல்ஸ் எடுத்துப் போட்டால் போதுமே.. கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாமே... அவரின் அறியாமை வியப்பில் ஆழ்த்த..
உ.ரா.பி.. என்னைத் தெரியவில்லையா..
கா.க...சொல்லுங்கள் ஐயா.. இங்கே கூட்டம் அதிகம்..பொருக்கி எடுக்க வழியில்லை. என் கடையில் காய் புதிது..கனி புதிது.. சுவை மிக்க நவகாய்கள் என்னாளும் அழுகாத இளம் காய்கள்..
இந்த இடத்தில் தான் தெனாலி ராமனின் அறிவு அட்டகாசமாய் மின்னியிருக்கும்..வயதான நட்சத்திர மின்னும் சக்தி மங்கத்தானே செய்யும்..போகட்டும்..பரிதாபமாக..
உ.ரா.பி..நீங்கள்... தமிழ் எழுத்தாளரா...
கா. க... கொஞ்சம் எழுதுவேன்.. சரி எதுக்குக் கேட்கிறீர்கள்..
உ.ரா.பி...இல்லை என்னைத் தெரியவில்லையே அதனால்தான் கேட்கிறேன்..
கா.க. வேலை நேரத்தில் தொந்திரவு செய்கிறீர்கள்..உங்களைத் தெரியவில்லை...ஆனால் ஒரு வரி உங்களுக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..
சொல்லிக்கொண்டே காய்கறி வியாபாரத்தையும் கனக்கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தார்..
உ.ரா.பி...சொல்லுங்கள்..
கா.க...we are all in the gutters but some of us are looking at the stars...
குதிரைவாங்கச் சென்ற தெனாலி ராமன் விஜய நகரவீதிகளில் குதிரையின்றி கம்பிரமாக வானத்தைப் பார்த்தபடி திரும்பி நடக்கத் தொடங்கினான்...
ராகவபிரியன்

Friday, January 23, 2026

 




Crown Transfer... Short story..

On a winter day, there was a skirmish between two groups on a cricket ground. The dispute centers on who should lead the team in this crucial league match.
One of the group members, an all-rounder in that group, came to his captain and tapped him on his shoulder and said..K is the fittest person for planning and maneuvering the match at this level of competition. And the win is assured.
K was tall, fit, and from a wealthy family, too. His face was so terrorizing and the opposite team would gift the wickets even before taking guard. K was wearing a white cricket wicket-keeper costume and was presumed to be the captain of the team. The group member also told so many encapsulating stories about his skill to change the course of the game and get the desired results.
But the captain, who was wearing a crown, thought for a minute about his past heroics with the team management to get to this place. No one in the group could have known about his kneeling and reaching the tough cut corners for wearing the crown.
For a human to take away a sitting crown from his head is always the hardest one. But the tide, even rain, will not hesitate to come during a cricket match. So the captain has to transfer the crown to the head of K...
The allrounder now called K..
Majestically and silently, K came and stood before the captain.
Captain asked...How many matches have you won as captain?
K replied...none.
Captain again asked.. If you have not won any matches, then why are people recommending you to lead the team when so many captains are already in the team?
K paused for some seconds and replied.. if the enemy of you and me are one and the same, then I will not lead the team..
The captain has transferred the crown to K's head and said.. Jananayakan would be given the U/A certificate before the match.
Ragavapriyan Thejeswi..

Thursday, January 15, 2026

 




முந்திரிப் பொங்கல்...சிறுகதை..

பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்டி நிலையத்தில். சக ஊழியர்கள் அவன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவனென்பதால் அவனை டூட்டியில் விட்டுவிட்டு திருனெல்வேலி நாகர் கோவில் எனும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்.. அது கைபேசி உடலுடன் ஒட்டப்படாத காலம். தொலைக்காட்சிப் பெட்டி என்ற சொல்கூட வழக்கில் இல்லாத நகர்த்த கடினமான காலமது..காட்டிற்குள் தனித்து விடப்பட்ட ஒரு மானின் மருண்ட பார்வையுடன் நிலையத்தைச் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.
நேற்றிரவிலிருந்து அவன் பணியில் இருக்கிறான். விடியல் பனிச்சூழலும் பசியும் நகர்த்தவியலா நேரமும் அவன் தோளில் தேனீர் அருந்தியாக வேண்டிய சுமையை ஏற்றத் தொடங்கியது. சுமைகள் நாவிலிருந்து தோளில் ஏறுகையில் ஒருபோதும் சறுக்குவதில்லை..
நிலையத்தின் அருகில் இருப்பது ஒரே ஒரு தேனீர் கடை.. அது காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இயங்கும். மாலையிலும் அப்படித்தான். வேறு வழியில்லாமல் அங்கே அவன் தேனீர் அருந்தும் போது அதில் கலந்திருக்கும் எருக்கஞ்செடியின் காய்ந்த குச்சிகள் வெளியிடும் புகையின் நெடி தேனீரில் கலந்திருக்கும். அது தேனீரின் சுவையை முந்திக்கொண்டு மூக்கின் வழி முதலில் வயிற்றிற்குள் சென்றுவிடும். பிறகான அவனின் அடுத்த பசியின் காலம் நிர்ணய எல்லைக்களைத் தாண்டி உணவு கிடைக்கும் வரைநீண்டுகொண்டேயிருக்கும்....
இன்று பொங்கல் என்பதால் அந்தக் கடையின் வாசலில் கோணிக் கதவு தொங்கியபடி இருந்தது. கோணிக்கதவுகளை உடைத்துக்கொண்டு உட்செல்ல எந்தத் திருடனும் முயற்சி செய்வதில்லை. அடுத்த வண்டி வருவதற்கு இன்னும் அரை மணி இருக்கிறது. அதற்குள் கடைக்குள் யாராவது இருந்தால் தேனீர் கிடைக்குமா என வினவும் திருட்டுத் தனத்துடன் கோணியை சற்று விலக்கி உள்ளே பார்த்தான். அங்கே சுள்ளிப் புகையின் நெடி மட்டும் தான் மீதமிருந்தது. சுள்ளிப் புகையின் நெடியை மீறி அடிக்கும் மனித வாசம் தூக்கி வர காற்று ஒரு சில கிலோ மீட்டர்கள் பயணித்தாக வேண்டும்.
மீண்டும் திரும்பி நிலையத்திற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான்.. தூரத்தில் பொங்கலோ பொங்கல் என்று கோரஸாக கத்தும் சப்தம் கேட்டது. அது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நான்கைந்து குடிசைகளே உள்ள மாவூர் கிராமத்திலிருந்துதான் கிளம்பி வந்திருக்க வேண்டுமென நினைத்தான்.
அவன் அம்மா பொங்கல் வைத்தால் வெல்லம் கலந்த பொங்கல் வைக்க மாட்டாள். சீனிச் சர்க்கரை கலந்த இனிப்புத் தூக்கலான பொங்கல் தான் வைப்பாள். பால் பொங்கி வழியும் போது பொங்கலோ பொங்கல் என அவனும் உடன்பிறந்த பத்து சோதரங்களும் சப்தமிடுவார்கள்..எல்லோருடனும் சேர்ந்து கத்தும் போது அந்தச் சப்தத்தை காற்று பத்து கிலோமீட்டர் வரை கூட தூக்கிச் செல்லும்.
பொங்கல் பானையைச் சுற்றி விபூதியால் அம்மா பட்டை போட்டிருப்பாள். பானையைச் சுற்றி ஒற்றை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்து கட்டியிருப்பாள். அவன் உத்தியோகத்திற்குப் போனபின்புதான் எல்லோருக்கும் வயிறு நிறைய சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் கிடைக்கத்தொடங்கின. மண்பானை வெங்கலப்பானையாக உருமாற்றம் கொண்டு புதுப்பிறப்பெடுத்தும் நடந்தது.... புது பொங்கல் பானைக்கு இஞ்சிக்கொத்தும் மஞ்சள் கொத்தும் கூட அப்போதிலிருந்துதான் கிடைத்தன.
அவனுக்கு முன் அவன் அண்ணன் சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான். அப்போது இந்த தொடர் வண்டிநிலைய ஊழியன் வேலையில்லாமலிருந்த பாலைநில வாழ்வின் காலம். வேலையற்ற பண்டிகை காலங்களில் சுற்றுகையில் கடைகளும் மனிதமும் இதயமும் மூடியே கிடப்பதைப் பார்த்திருக்கிறான்.
இவன் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலை தொடங்கும் போது வீட்டிற்கு வருவான். ஒரு சின்ன டபராவில் கொஞ்சம் பொங்கல் மீதம் வைத்திருப்பாள் அம்மா. எவ்வளவு குறைவான அளவெனினும் அதில் முந்திரிப் பருப்பின் ஒரு சின்னத் துண்டாவது துழாவினால் கிடைக்கும். கண்ணீர் பொங்க அம்மா இவன் அதை சாப்பிடும் போது பார்த்துக்கொண்டிருப்பாள்.. இவனுக்கும் கண்ணீர் குபுக்கென பொங்கும்..
இன்றும் அந்த நினைவில் இவன் கண்ணீர் துளி ஒன்று பொங்கி கன்னத்தில் வழிந்தது..
கண்ணைத் துடைத்துக்கொண்டான். நிலையத்தை அடைந்தான். சோர்வாய் தனது இருக்கையில் அமர்ந்தான்.
ஐயா... எனும் குரல்..
யாரு... கேட்டபடியே வெளியில் வந்தான்.
அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் தேனீர் கடையின் உரிமையாளாரான முதிய பெண்மணி அமர்ந்திருந்தாள். அவர் அருகிருக்கும் மாவூரைச் சேர்ந்தவர்.
என்னங்க... அவன் குரலின் சப்தம் அவனுக்கே கேட்கவில்லை..
ஐயா.. கொஞ்சம் பொங்கல் சாப்டறீங்களா... எனக் கேட்டுக்கொண்டே கொண்டு வந்திருந்த அலுமினிய தூக்கிலிருந்து ஒரு கரண்டி வெல்லச் சர்க்கரைப் பொங்கலை இலையில் வைத்துக் கொடுத்தாள்..
கண்ணீர்த் துளி சிந்த கை விரலால் பொங்கலைத் துழாவினான் அவன்..
உள்ளே முந்திரிப் பருப்பு எதுவும் கிடைக்கவில்லை..
அத்துவான மனித வாடையற்ற இவ்விடத்தில் அதுவும் இந்த தமிழர் திரு நாளில் ஒரு கரண்டி பொங்கல் கொடுப்பது அன்னை ஆதிபராசக்தியாகத் தான் இருக்க வேண்டுமென நினைத்தான்...
ரொம்ப நன்றிங்க. ஒரு ரயில் வந்திட்டிருக்கு. போனப்பறம் சாப்டறேன்.. சொல்லிவிட்டு கையில் பச்சைகொடி சிகப்புக்கொடிகளை எடுத்துக்கொண்டு நடைமேடையில் நடக்கத் தொடங்கினான்..
அம்மா அவனுக்காக மீதம் வைத்திருக்கும் ஒரு சிறு துண்டு முந்திரிப்பருப்பின் சுவை அவனைச் சுற்றிவரத் தொடங்கியது..
ரயில் போனதும் அந்த ஆதிபராசக்தி கொடுத்த வெல்லச்சர்க்கரைப் பொங்கலையே பார்த்துக்கொண்டிருந்தான்..
இப்போது எங்கிருந்தோ எறும்புகள் மெல்ல ஒவ்வொன்றாய் பொங்கலைச் சுற்றிவரத் தொடங்கின...
ராகவபிரியன்

Tuesday, January 13, 2026

 



இந்துக்களின் போகிப் பண்டிகையை பொங்கல் கொண்டாட்டங்களை 16 ம் நூற்றாண்டிலேயே அப்போதைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் நசுக்கத் தொடங்கினார்கள்.. அக்பர் தீன் இலாகி என்ற மதச்சார்பின்மையைக் கடைபிடித்தார் எனும் பொய்யை வரலாறாக்கி நம்ப வைத்த கயமையை இந்த போகியிலாவது தீக்கிரையாக்குவோம்..

அன்றைய அக்பர் காலத்தில் தான் அவரது மகனான ஜஹாங்கீருடன் ஒன்றாக படிக்க வைக்கப்பட்டான் அக்பரின் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு மதம் மாற்றப்பட்ட ஏழைத்தாயின் மகனான துல்லா பட்டி எனும் பஞ்சாபின் ராபின்ஹூட். அந்த வீரமிகு இந்துப் போராளி இந்துக்களின் அறுவடைக் கொண்டாட்டங்களான லோரி திருவிழாவை நியாயமற்ற வரிவிதிப்பால் நசுக்கிய அக்பரை எதிர்த்துப் போரிட்டான். அது மட்டுமல்ல ஏழை இந்தியப் பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக முஸ்லீம் மன்னர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப் பட்ட கொடுமையை எதிர்த்து கொரில்லா போரிட்டு ஜஹாங்கீரையே சிறை பிடித்தான். பிறகு ஜஹாங்கீர் தன் சகோதரன் மட்டுமல்ல தன் பால்ய நண்பனும் கூட என்பதால் முகிழ்த்த தீராத பாசத்தின் மிச்சத்தால் விளைந்த கருணை இதயம் சொன்னதால் விடுதலை செய்தான். போராளிகள் எப்போதும் தங்கள் இதயத்தில் தீராத தூய அன்பு கொண்டவர்கள்..
ஆனால் ஆட்சியாளர்கள் இதயத்தில் அரக்கனை குடியேற்றியவர்கள்..அதிகார போதையில் நீதியை மறந்தவர்கள்.. மக்களும் போதையிலேயே இருந்தால் அ நீதியை சகித்துக்கொள்வார்கள் என்பதால் சோமபாணம் சுராபாணத்தை இன்றளவும் மலிவாக கிடைக்கச் செய்பவர்கள்..அந்த மொகலாய அரக்கன் அக்பர்தான் லாகூரில் மாவீரன் துல்லா பட்டியை தன்னை எதிர்த்துப் போரிட்ட தன் மகனையே தூக்கிலிட்டவன். அந்தத் துயரப் பொழுதில்தான் இந்தியத் தாய் தன் நழவிய பாராம்பரிய புடவையைப் பிடித்துக்கொண்டு தன்மீது வலிந்து போர்த்தப்பட்ட பர்க்காவை கிழித்தெறிந்தாள்..
அராஜகத்தை அதன் மீதான எதிர்ப்பைக் காட்டி போராடும் போராளியை பொதுவெளியில் தூக்கிலிட்டும் கல்லால் அடித்தும் கொல்லும் அதிகாரக் கோழைத்தன்மையை இந்த மண்ணிலிருந்து இன்னமும் எவராலும் அகற்றவியலவில்லை. வெட்கம்..
முஸ்லீம் மன்னனான அவுரங்கசீப் போகிப் பண்டிகையை இம்மண்ணிலிருந்து அறவே துடைத்தெறிய முஸ்லீம் அல்லாதவர்கள் இந்துவாய் அவர்களின் தாயகத்தில் உயிர்த்திருக்க வேண்டுமெனில் ஜெசியா வரி செலுத்த வேண்டுமென உத்தரவிட்டவன்..அவுரங்கசீப்தான் அறுவடைக் கொண்டாட்ட காலங்களில் காசியிலும் மதுராவிலும் இந்துகள் கோவில் திருவிழாக்களில் பெரும் திரளாகக் கூடுகிறார்களென அந்தக் கோவில்களை இடிக்க உத்தரவிட்டவன். இந்த உண்மை வரலாற்றை நம் தமிழ்







மண்ணில் மறைத்து சர்வமத பொங்கல் கிண்டும் நிழற்பட சுற்றுக்களை சமுக ஊடகங்களில் சுழலச் செய்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டும் இன்னமும் உயிர்த்திருக்கும் போகிப் பண்டிகையை நூதன முறையில் அகற்ற நினைக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் சனாதன எதிர்ப்புச் சிந்தனைக் குரூரத்தையும் போகிக் குப்பையுடன் சேர்த்தே கொளுத்தியாக வேண்டுமென சூலுரைப்போம்..
பிறகான ஆங்கிலேய ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பஞ்ச காலங்களில் விளைச்சலே இல்லையெனினும் வரிசெலுத்த விதை நெல்லைக்கூட பிடுங்கித் தின்ற ஆங்கிலேய அரசு போகிக் கொண்டாட்டங்களை இனி துளிர்க்க வியலாத சாம்பலாக்கிவிட்டதாக கொக்கரித்தது...
ஆனால் அப்போது தான் ஒவ்வொரு இந்துவின் வீட்டிலிருந்தும் வெளியேறிய போகிபுகையில் ஒரு போகிப்பீனிக்ஸ் உயிர்த்தெழுந்து ஆங்கில அரசாங்கத்தின் கண்முன்னே சிறகுப் புயற்புழுதிக்காற்றை விசிறி அவர்களின் முதல் கண்ணிர்த் துளியை வெளிக்கொண்டுவந்த வரலாறு நம் தலைமுறைக்கு இது நாள் வரை அறியத்தரவே இல்லை என்பது எவ்வளவு துயரம்..
மூட நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லால் இந்துக்களின் பண்பாட்டை நாகரீகத்தை கொண்டாட்டங்களை தடுத்தது மதமாற்ற உத்தி என்பதை இன்னமும் தமிழ் மண்ணில் இல்லை இல்லை போலி திராவிடம் எனும் சொல் இயந்திரத்தால் நம் மண்ணின் வளமையை வருவாயைத் திருடி அள்ளிச்செல்லும் திருட்டு ஆட்சியாளர்களின் தந்திரத்தை இம்மண்ணின் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மேலதிக வேதனையின் நீட்சி. மூட நம்பிக்கை எனும் வார்த்தையை முதலில் நாம் போகிக்குப்பைகளுடன் கொளுத்தியே ஆகவேண்டும்.. இந்து மதத்தையும் அதன் பாரம்பரிய பெருமையையும் இம்மண்ணிலிருந்து எவராலும் அகற்றமுடியாதென நாம் நிச்சயமாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்..நம்பிக்கை தானே எல்லாம்... அந்த நம்பிக்கையை எப்படி இன்று செயலில் காட்டப்போகிறோம்.. சிந்திப்பீர்கள்..
நம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போகிக்குப்பைகளை கொளுத்துவோம். சூழல் மாசுபாடற்ற நம் பாராம்பரிய முறையில் தீய சக்திகளின் துர்போதனைகளையும் சேர்த்தே கொளுத்துவோம்.. அப்படி எரியும் தீயின் உயிர்த்துடிப்பை கையிலேந்தி நாளை பரம் குன்றத்தில் பிரளயத் தீயென வாழ்வின் அணையா ஒளி தீபம் ஏற்ற பாதுகாப்பாய் இரு கைகளையும் அரணாக்கி பொய்புழுதி கலந்து வீசும் காற்றைத் தடுத்து உண்மையுடன் நம்பிக்கையுடன் தீரமுடன் நெஞ்சில் உரமுடன் எடுத்துச் செல்வோம்..
இது வெறும் போகிப் பண்டிகை மட்டுமல்ல..நம் முன்னோர்களின் தியாகத்தால் இன்றளவும் உயிர்த்திருக்கும் நம் பாராம்பரியத்தின் போராட்டத் தியாகத் திருநாள்..
அனைவருக்கும் இனிய லோரி போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ராகவபிரியன்..


Monday, January 12, 2026



பொங்கல்ன்னாவே சிக்ஸ்டீஸ் கிட்ஸுங்களுக்கு அதாவது என்னைப் போன்ற கிழங்களுக்கு எய்ட்டீஸ்ல பண்ண காதல் ஞாபகத்துக்கு வந்துடும்..

அப்பெல்லாம் லவ் ஈஸ் பார் த ரிச் அண்ட் நாட் ஃபார் த அனெம்ப்ளாய்ட் ன்னு எதோ ஒரு படத்துல வர்ற வசனம் லவ் பண்ற பொண்ணப் பார்க்கறப்பெல்லாம் மனசுல ஓடும்..
உடனே நான் தலை குனிஞ்சுடுவேன்.. பஸ்ல காலேஜ்க்குப் போகும் போது தான். காலேஜ் ஸ்டாப்பிங்கல இறங்கறவரைக்கும் நான் பார்க்கும் போதெல்லாம் என்னோட லவ்வரும் தலை குனிஞ்சிண்டே தான் வருவா.. இந்த அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்..ங்கறத எங்க லவ் லைப்ல காலேஜ் முடியறவரைக்கும் நடக்கவே இல்லைங்க... அதாங்க எய்ட்டீஸ் லவ்வோட தெய்வீகம்..
அப்போதாங்க தமிழ் நாட்ல தெலுங்கு தெரியாமயே மரோசரித்ராவ பார்த்து புல்லரித்து காதலித்த டைம்.. பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சாலும் பாவாடை தாவணி செயின்ல மாட்டிடும்ங்கறதால சைக்கிள்ல வந்த ஒரு தேவதையைக்கூட அப்ப நாங்க எங்க ஊர்ல பார்க்கலீங்க..
ஆனா பாருங்க..ஒரு நாள் அதுதாங்க.. போகிக்கு மொத நாள்..என்னோட தேவதை சைக்கிள்ல காலேஜ்க்குப் போறத பார்த்தேங்க..எய்ட்டீஸ்ல ஒரு சாதாரண அனெம்ப்ளாய்ட் ஏழைக் காதலனுக்கு அமைஞ்ச ரேர் அமெங்க் த ரேரஸ்ட் லவ் சிச்சுவேஷன மிஸ்பண்ணலாங்களா..ஒடனே என்னோட ஓட்ட சைக்கிள எடுத்துட்டு கமல் மாதிரி பாலோ பண்ணலாம்னு பொறப்பட்டுட்டேங்க.. ஒடனே..
ஏத்தீக்க பூங்குணூ ஏதும்ம ஹேசினு கலிப்பிந்தி ஏனிந்த அனுபந்த மெளனம்னு
பாட ஆரம்பிச்சேங்க. அப்ப பார்த்து என்னோட சைக்கிள் செயின் கழண்டிடுச்சு..
சரின்னு இது தெய்வச் செயலாள நடந்த தெய்வீக காதல் சாபம்னு நெனைச்சேங்க.. ஒடன..இந்த சினிமா சீன்ல லவ் பண்றப்ப ஹீரோ சைக்கிள சரி பண்றாமாதிரி லவ்வர பார்ப்பார் பாருங்க. அந்த சிச்சுவேஷன் அமைஞ்சதா நெனைச்சேங்க.. காதல்ல சாபம் எப்பவுமே வரம் தாங்க... டக்குன்னு..அதே மாதிரி பார்வைய சைக்கிள் வீல் வழியாவுட்டேங்க...எதிர்ல சரிதாவ விட சூப்பரா சாகர சங்கம ஜெயப்ரதா எதிர் வூடல என் கண்களை நோக்க..அட அடா வரம்னா வரம் தாங்க.. பட் ஒரு செகண்ட்ல மறுபடியும் அது சாபமா மாறுனதாங்க எய்ட்டீஸ் காதலோட அவலம்ன்னா நீங்க நம்பவா போறீங்க..ஆனா அதாங்க நெசம்..அந்த சமயத்துல என் முன்னாடி வந்து நிக்கறா என்னோட சரிதா...இப்ப புரியும்னு நெனைக்கேங்க...
சரி ஓகே.. போகட்டும்..இந்த ஏழை மோகனுக்கு ஜெயப்ரதாவெல்லாம் ரொம்ப ஓவர்னு நீங்க சொல்றது கேக்குது...ஆனா தெய்வீக காதல்ங்கறதால...
வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் னு
பாட்ட மாத்திப் பாடி சமாளிச்சேங்க..ஆனா சரிதா வாடிவாசல்லேர்ந்து தும்பறுத்து கொம்பு சொழட்டுற செவலைக் காளை மாதிரி என்னை பார்த்த பார்வை இருக்கே...அதெல்லாத்தையும் எழுத்துல இல்லீங்க என் மனசுல ரத்தத்துல எழுதி வச்சிருக்கேங்க...
ஒடன..சாரி ...அப்படீன்னு சரிதாகிட்ட வழிஞ்சேனா
...வைகைறையில சைக்கிள் அறுந்ததால பாதிவழியில எவளையோ பார்த்து வழியறையான்னு ஒரு கேள்வி கேட்டுப்புட்டாங்க...
ஆனா தெய்வீகக் காதலனுக்கு தாடி வளரலாம்..கோபம் வளரமட்டுமில்லீங்க..மொளைக்கவே கூடாதுங்களா... பட்டுன்னு பொங்கல் வாழ்த்து கார்ட அப்பெல்லாம் அதுதாங்க ட்ரெண்டு.. எடுத்து கொடுத்துட்டேங்க..
இப்ப தாங்க அவ பாட ஆரம்பிச்சா...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன். அப்போது நீயும் இங்கேயே இருந்தா ஒன்னோட நான் இருப்பேன்..இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்னு...
பாடி எங்க காதல் குப்பையை போகி நெருப்புல கொளுத்தி போட்டுட்டு சைக்கிள்ல பறந்து போயிட்டாங்க...
எல்லாம் என்னோட காதல் சாபம் தான்.. என்ன பண்றது..சைக்கிள் செயினை சரி படுத்திட்டு எழுந்தா...ஹேண்டில் பார புடிச்சுகிட்டு வருங்கால மாமனார் மீசைய முறுக்கிட்டு எதிர்ல நிக்கறாரு...
ஏண்டா என் பொண்ணுகிட்ட பொங்கல் வாழ்த்தா குடுக்கற.. என் வீட்டு பக்கம் வா... ஒன் காலை வெட்டறேனா இல்லையான்னு பாரு
ன்னு சொல்லிட்டு அவரு என்னோட சைக்கிள எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு...
இப்பவும் கூட போகிக்கு முன்னாடி எங்க அண்ணாமலை காலை ராஜ் தாக்கரே வெட்டறேன்னு சொன்னாராமே... அதாங்க... பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா..இப்ப இந்த போஸ்ட்...
ராகவபிரியன்..

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...