Posts

Image
  நீண்ட காலக்கயிறொன்றின் மேல் நடக்கையில் சமன்பாட்டிற்கான பிரம்பென பாண்டவ தூதப் பெருமாள் ஏறக்குறைய முடிவின் எல்லையை கால்கள் தொடப்போகும் இச்சமயத்தின் இன்று சற்றுமுன் இவ்வெளிய பக்தனிடம் அரங்கனின் சப்தங்களுடன் சில வார்த்தைகள் பேசிய பொழுதின் கனம் கைபேசியின் சுயமியில் பதிவான பாண்டவ தூதப் பெருமாளின் கோபுரமென உங்களின் பார்வைத் திரையில் கிடத்தப்பட இங்கே பதிவிடப்படுகிறது....ராகவபிரியன் தேஜஸ்வி
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம் 6/18 இந்த எறும்பிற்கு இன்றைக்கான பருக்கை பெரும் கனமாகிவிட்டது.. மழைக்கால பெருவெள்ளத்தில் நீந்தவியலா கால்களில் பட்ட ஒற்றை சோற்றுப் பருக்கைக்கான காயங்கள் வலிக்கிறது.. மெல்ல உந்தி பருக்கையைத் தூக்குகையில் எத்துனை எத்துனை வாய்கள் பங்கிற்கான போராட்டத்தில் எல்லாப் பக்கமும் இழுக்கின்றன.. இந்த எறும்பின் மீளவியலா பசித்த காலத்தைப் பிடுங்கிவிட்டால் புற்று திரும்பும் பற்றைத் துறந்தாக வேண்டும்.. எந்நேரமும் எனக்கு முன்பிறந்த கனத்த மானுட கட்டை விரலொன்று அவனின் பருக்கைப் பொழுதில் அறியாமல் ஊர்ந்ததால் இவ்வுடல் தேய்த்து ஆன்ம விடுதலைத் தரக் கூடலாம்.. இருப்பினும்.. எனக்கான காலத்தின் இப்பருக்கை காய்ந்து இழுக்குமளவு இலகுவாகும்.. அதையென் புற்றிற்கு நொண்டி நொண்டி நகர்த்திச் செல்லும் வரை என் பிடியையும் ஏன் என் பிராணனையும் கூட விட்டுவிடுவதாய் உத்தேசமில்லை.. ராகவபிரியன் தேஜஸ்வி...
Image
  ஓளவை நாவல் மரமடியில் உதிர்பழ தேர்வில் குனிந்து நிமிர்கிறாள்.. அவளின் உடல் தாங்கும் கைத்தடி எந்நேரமும் உடையக்கூடலாம்.. உச்சியின் முருகன் பத்து நாவற்கனிகளையே கையில் வைத்திருக்கிறான்.. மூத்த தெய்வீக ஆதிமுதல் தமிழ்ப்பெண் கவி பத்திலொன்று எனக்குண்டா என வினவுகிறாள்.. உச்சி முருகன் உடையா நாவலும் உயர் அரசாங்க உத்தியோகமும் அரிதிலும் அரிது ஓளவையே.. பட்டியலின போட்டியாளருக்கு நான்கு பிற்படுத்தப்பட்டவர்க்கு ஐந்து அனைவருக்குமான மீதம் ஒன்று என்னிடமிருப்பதோ பத்து உனக்கேது பழம்..? அதிர்ந்த ஓளவை உடல் கனத்தை கைத்தடிக்கு நகர்த்துகிறாள்.. உடைந்தது கைத்தடி மட்டுமல்ல..
Image
  இந்திய கிராமிய பொருளாதார வெற்றி...1 பின் நவீன இந்தியக் கிராமப் பொருளாதாரமும் மேலைநாட்டுக் கிராமப் பொருளாதாரமும் இரட்டை ஜடையிலிருந்து இலகுவாகப் பிரிக்கவியலும் பின்னல் கால்கள் போன்றவை.. இந்தியக் கிராமத்தில் வறுமை என்பது பணமின்மை மட்டுமல்ல அதையும் தாண்டி நிலமின்மை, சாதி, கடன், உழைப்பின் மதிப்பின்மை ஆகியவற்றின் வரலாற்றுத் தொகுப்பு. ஆனால் இத் தொகுப்பிற்குள் தான் ஆயிரமாண்டு கலாச்சாரப் புதையல் பாதுகாப்பாய் இருக்கிறது.. மேலைநாட்டுக் கிராமங்களில் செழிப்பு என்பது விடுதலையின் முழுமையான முகமென அரிதாரம் பூசப்பட்டு வெகுஜன ஊடகங்கள் மூலம் இந்தியப் பார்வைகளில் புகுத்தப்படுவது பொருளாதார கொரில்லா யுத்தம்.. மேலை நாட்டு பொருளாதார இயந்திரம், சந்தை, பெருநிறுவனம் ஆகியவை கண்ணுக்குப் புலப்படாத இரும்புக் கை மாயாவியின் கரத்தில் இருக்கும் சாட்டை போன்றதெனில் அதுதான் நிஜம்.. நோபல் பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் விடுதலையின் வளர்ச்சி எனும் நூலில்..அதாவது டெவலப்மெண்ட் ஆப் ப்ரீடம் எனும் நூலில் பொருளாதார வளர்ச்சி தனிமனித விடுதலை என்கிறார். அவரின் பொருளாதாரம் மைக்ரோ பொருளாதார கூறுகளை உள்ளடக்கியது.. தனி ம...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம் 6/17 கால்கள் நடக்கத் தொடங்கிய காலமது.. தண்டவாள ஓர முட்செடிகளை வெட்டிவர அழைத்துச் செல்வான் அண்ணன்..  நவீன கழிப்பறையற்ற அந்தகால  ஓடும் புகைவண்டிப் பெட்டியிலிருந்து பறந்து விழும் பயணி நரகல் துளியொன்று.. அதைத் தடுக்கும் மேல் சட்டைக்கு  வழியற்ற ரயில் கரையில் இவனின் காலேறி இறங்குமொரு  கட்டு விரியன் பாம்பு.. காட்டுக் கருவேல முள்குத்தி ரேகையழிந்த உள்ளங்கை வழி கொப்பளிக்கும் குருதி குடித்த விறகுகள்  ரத்தபந்தப் பாசப்புகையை  பசித்த வீடெங்கும் நிரப்பும்... அத்தனைப் புகையையும் இழுத்துக் கொண்டு திணறித் தவிக்கும் இவனின் ஈரலறைகள்.. ஆனால் சமையலறையில் மெல்ல மெல்லத் தவழ்ந்து வடித்த அத்துனை சோற்றையும்  உறிஞ்சும் அதிகார அண்ணனின்  அகடு அட்டைகள்.. முந்தியொரு காலத்தில் மூத்தவன் சொல் சக்கரத்தால்  கைவண்டிகளை கனக் கச்சிதமாகச் செய்வான்.. அதை இளைவன்  இழுத்தாக வேண்டும்.. வண்டி வாழ்வுச்சாலை  ஏற்ற இறக்கம்  கண்டு குடை சாய்ந்த குரூரப் பொழுதில்  மூத்தவனின் உறக்கம் கலைந்தால் முதுகு ஒடிந்து நெம்பியிழுக்கும் நுகத்தட...
Image
  THE NIRVANA OF A REJECTED POET --------------------------------------- I sought Nirvana in the ancient silence of the Upanishads, where the self dissolves like a drop of rain forgetting the geography of the ocean.... The sages called it liberation... the death of desire... the extinction of the little tyrant called I... the final eviction of the tenant from the house of suffering.... But who would teach Nirvana to a Tamil poet..... whose words had been evicted from the houses of recognition.......? My poems stood outside the doors of literary conferences... holding their torn manuscripts like beggars holding empty alms bowls.... The critics passed by.... Their eyes performed a perfect philosophy of non-attachment.... No prize.... no applause.... no trembling hand.... to receive the unwelcome child from the labour of my mind.. And I asked Ranga... of my loneliness... Is rejection another name for renunciation.... Is humiliation merely the ego... being strangled by invisible hands....
Image
  கீதைச் சொல்லும் கதை சொல்லியும்..5 மனம் கனத்துப் போகிறது மாலை நேரங்களில்.. சாலைச் சுமைதாங்கிக் கல்லின் மேல் யாரோ மலையை ஏற்றி வைத்த கனம். கைகால் முகம் கழுவி விபூதி பூசி காஞ்சி சாலைகளில் நடந்தாக வேண்டும்.. முதலில் கச்சி ஏகம்பன் கோவில் சாலையின் முச்சந்தி வரும்..அங்கிருக்கும் கைவிடப்பட்ட பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு கை நீளும்.. கன்னத்தில் பளாரென அறையும்.. ஏதோ ஒரு குழந்தையை யாரோ ஒரு ஆசிரியர் அறைந்திருக்க வேண்டும்.. அந்தக் குழந்தையின் சாபம் பள்ளி இடிந்து கிடக்கிறது.. அந்த குழந்தை வாங்கிய அடியின் கனம் மோதியதால் மனதின் கனம் சற்று குறையும்.. பள்ளியின் உச்சி மாடத்தில் ஒரு மான் ஒரு மாது ஒரு மானுடன் வில்லுடன் இருக்கும் பொம்மை பூச்சுதிர்ந்து மீளுயிருக்காக மன்றாடிக்கொண்டிருக்கும்.. அடுத்ததாக ரேணுகா தேவி கோவில் திரும்பும் நாற்சந்தி.. உயரமான வீடொன்று அங்கிருக்கும்..அவ்வீட்டு வாசலில் சரக்கொன்றை மரம். அதன் மேல் ஓரங்குல புழுதி படர்ந்திருக்கும்.. சதா பாதம் சுமக்கும் ஸ்லிப்பரின் முனையின் புழுதியடர்வு..குனிந்து அணிந்திருக்கும் ஸ்லிப்பரை நோக்க மனதின் பாரம் மெல்ல உருகத் தொடங்கும்.. அடுத்தாக காமாட்சி அம்மன...