Posts

Image
  மண்டியிடும் மாகளிறு ------------------------------ மண்டியிடச் சொல்லும் பொழுதுகளில் யானைவலிகள் கூர் அங்குச பாய்ச்சல்களென அதன் மத்தகமெங்கும் ஞாபகங்களாய் செருகிக் கிடக்கும்... மண்டியிட்ட கால்களின் வழி மிதித்தும் சாகாத வறுமை ஆமைகள் மெல்ல ஊர்ந்து இலக்கு நோக்கி ஓய்வின்றி மேலேறிக் கொண்டிருக்கும்... வளமையின் கானகத்தில் வேர் பலாவை எத்தி உதைத்துண்ட சுதந்திர பசியாறல் காதோரத்தில் நெருப்பெறும்புகளென ஊறிக்கொண்டிருக்கையில்... சோளப் பொறியென வீசப் பட்ட மட்டையை நுகர மறுத்து தும்பிக்கையால் தன்னையே தாக்கிக் கொண்டிருக்கும்... எந்நேரமும் மானுடத்தை நசுக்கும் சக்தி வறுமை யானையின் முட்டிகளில் இருப்பதறியாமல் மிதித்தேறும் ஆணவத்தின் ஆயுள் அன்றிலிருந்துதான் குறையத் தொடங்கும்... கடவுளுக்கான புனித நீர் தாங்கி வரத்தான் அந்த வறுமை வேழம் எப்போதாவது மண்டியிடும்.. முதுகிலேறிய பின் தோகைவிரித்தாட நினைத்தால் பீலிகளை பிய்தெறிய ஒருபோதும் தயங்குவதில்லை அது... பாலைப் புயலெனினும் மண்டியிட்டு முகம் புதைத்துக் கொள்ளும் கோழை ஒட்டகமல்ல... இது வலிய வேழம்... வறுமையை திணித்து மண்டியிட வைத்த ஏமாற்று அரசியலை மிதித்து நசுக்கும் நாள...
Image
  கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்…3 குடும்பவியலில் மூத்தவனாதிக்கம் எனும் தன்மை எவ்வாறு துன்பியலை குடும்பத்தவர்க்குத் தருவிக்கிறதென பெற்றவர்கள் உணர்வதில்லை…மாறாக மூத்தவனை ஆதிக்கம் செலுத்த அவர்களறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது கொண்டிருக்கிறார்கள்…குடும்பச் சீரழிவுக் கோட்பாட்டின் அடிப்படைகளை ப்ராய்ட் ஆராயத் தொடங்குகிறார்…அது 1884… பெற்றோர்கள் தவிர்த்து பத்திற்கும் மேற்பட்ட உடன் பிறப்புகளுடைய குடும்பத்தில் மூத்த சகோதரன் ஆதிக்க வெறி பிடித்தவனாக பெரும்பாலும் இருப்பதை கண்டறிகிறார்…அவனின் எண்ணங்களிலும் செயல்களிலும் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் மெல்லிய கீற்றொன்று அவ்வப்போது மின்னி மறைவதை எவ்வித தயக்கமும் இன்றி பதிவிடுகிறார்…மூன்றாவதாக மூத்தவன் ஹலுசினேடரி கன்ப்யூஷன் எனும் தோற்ற மாயைகளின் குழப்பத்தில் தான் செய்வதெல்லாம் குடும்ப நன்மைக்கானதென நம்பத்தொடங்குகிறான்…எப்போது மூத்தவனின் ஆதிக்க மனப்பான்மையினால் விளையும் வெறிச் செயல்களை எவராலும் தடுக்க முடிவதில்லையோ அப்போது குடும்பச் சீரழிவின் முதலடி எடுத்து வைக்கப்படுகிறது…மூத்தவன் தனது ஆதிக்க வெறியின் விளைவால் எடுத்துக்...
Image
  பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்… 2.மாப்பிள்ளை ட்ரெஸ் ------------------------------- அப்பாவினுடைய லயன் பாக்ஸில் ஒரு ஜோடி ப்ரெவுன் நிற ஷூ க்கள் இருப்பதை அவரைப் பார்க்க அவரின் அலுவலக ஓய்வறைக்கு செல்லும் போதெல்லாம் பார்த்திருக்கிறான் ராம்பாபு… ஒரு முறை அந்த ஷூக்களை அவன் வெளியில் எடுத்து துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அவனின் அப்பா பளார் என்று அறைந்துவிட்டு அவைகளை மீண்டும் லயன் பாக்ஸூக்குள் திணித்துக்கொண்டார்…அதில் ஒரு ஷூவைத் துடைக்கும் போது தான் பார்த்தான் அதன் அடிப்பாகத்தில் 11 நம்பர் இருந்ததை.. ராம்பாபுவிற்கு ஷூ வாங்கி அணிய வேண்டுமென்பது சிறுவயதிலிருந்தே ஆசை…அப்பாவின் யூனிபார்ம் பேண்ட்டை டைலரிடம் கொடுத்து அவனின் அண்ணனுக்கும் அவனுக்கும் டிராயர் தைப்பது போல் அப்பாவின் ஷூக்களை ஆல்டர் பண்ணி தனக்கு ஷூ தைத்துக் கொடுக்கும் படி அம்மாவிடம் ஒரு முறை அடம் பிடித்திருக்கிறான்…ராம்பாபு எட்டாவது படிக்கும் போது உடன்படித்த சக்தி என்ற மாணவன் முழங்கால் வரை ஸ்டாக்கிங்ஸ் அணிந்து ஷூ போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்ததும்..பொறாமை பீறிட்டு இதயத்தை அடைத்தது…அன்றே என் சி சி நேவல் விங்கில் சேர்ந்...
Image
      கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்…2 இன்னொரு மனிதன் மேலான ஆழ்மன ஈர்ப்பும் அதே மனிதன் மீதான விவரிக்க முடியாத பயமும் ஒருவரிடம் கனவுகளை உருவாக்குகிறது…கனவில் அந்த ஒருவன் செயலாற்றும் விதமும் நனவில் அவனது செயல்களும் ஒருபோதும் பொருந்திப்போவதில்லை…மூத்தவன் தனது சக சகோதரங்களிடம் ஆழ்மன ஈர்பின் விளைவாக முகிழ்க்கும் அன்பின் துரத்தல்களால் ஒருசில நற்செயல்களைத்தான் செய்கிறான்…அவை பெரும்பாலும் கனவிலேயே நிகழ்ந்துவிடுகின்றன…மூத்தவன் தனக்கடுத்த மூத்த சகோதரத்திடமோ இல்லை வேறு தன்னைவிட மேம்பட்டதாக தான் கருதும் இன்னொரு சகோதரத்திடமோ ஒருவித தருக்க பயமும் கொள்ள நேர்கிறது…இது தந்தைக்கு அடுத்த இடம் தனக்கில்லாமல் போய்விடுமோ எனும் செருக்கு பயமாகவும் இருக்கக்கூடலாம்…இந்த பயம் ஆழ்மனதில் கனவு நிலையிலிருக்கும் மூத்தவனின் நனவுச் செயல்பாடுகளில் தனக்கடுத்தவனுக்கோ இல்லை தன்னை விட மேம்பட்ட சகோதரத்திற்கோ சில தீமைகளைச் செய்யத் தூண்டுகிறது… மூத்தவனின் நனவியற் தீய செயலொன்று போதும் அந்த பாதிப்பிற்குள்ளாகும் சகோதரம் நிரந்தர அதிர்வில் வீழ்வதற்கு…மூத்த சகோதர தீச் செயல்கள் பெரும்பாலும் பெற்றவர்களால் புறம்தள்...